Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,025 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.அடிப்படையில் நம்மில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,127 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிளகு ஆட்டுக்கால் பாயா

தேவையானப் பொருட்கள்:

தாளிக்க :

எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

கொத்துமல்லித்தழை – சிறிது

புதினா – சிறிது

வேகவைக்க :

ஆட்டுக்கால் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – தே. அளவு

இஞ்சி பூண்டு விழுது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,275 முறை படிக்கப்பட்டுள்ளது!

புது வருடமும் புனித பணிகளும்

மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.

முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,657 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிளாஸ்டிக்!

பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு “எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது” எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,891 முறை படிக்கப்பட்டுள்ளது!

பூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது?

பூகம்பம் ஏன் ஏற்படுகிறது? சுனாமி ஏன் நம்மை தாக்குகிறது? எரிமலை ஏன் அப்ப அப்ப நிலக்கரியில் ஓடும் புகைவண்டி போல் புகையை வெளியாக்குது போதாக்குறைக்கு தீயையும் கக்குது இதுவெல்லாம் ஏன் ஏன் ஏன் என்று சந்தானம் பாணில கேக்கத்தோனுதா வாங்க பார்ப்போம் மேலே குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தா world techtonic plate என்று சொல்லக்கூடிய பூமித் தட்டுக்கள் அல்லது பூமி சில்லுகள்.

இவை அனைத்தும் மிகப் பெரிய நெருப்புக்கோளமான நமது பூமியில் பொருத்தப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,071 முறை படிக்கப்பட்டுள்ளது!

அளவற்ற அருளாளன் (வீடியோ)

மனிதன் இவ்வுலகில் இறைவனுக்கு கட்டுப்பட்டு செய்கின்ற நன்மைகள் அனைத்தும் மனிதனுக்கே உரியதாகும். இவைகளுக்கு மறுமையில் கூலி கொடுக்கப்படும். யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. எனினும் அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை கணக்கிட்டால் இந்த நல்ல காரியங்கள் ஒன்றுமேயில்லை.

அதே போல் உலகில் படைக்கப்பட்ட அனைவர்களும் ஒன்று சேர்ந்து முழுமையான இறையச்சத்துடன் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திலோ, அவனது கண்ணியத்திலோ அல்லது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளிலோ கடுகளவும் அதிகரிக்கப்போவது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,939 முறை படிக்கப்பட்டுள்ளது!

எலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்

இந்த வேகமான அவசர உலகில் மனிதர்கள் தேவையென்ற இலக்கை அடைய வழியும் தெரியாமல் நேரமும் போதாமல் அல்லல்படும் பொழுது எங்கே அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட போகிறார்கள். ஆனால் சுவர் இல்லையேல் சித்திரம் எப்படி வரைவது அதனால நம் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு நமக்கு மிக அவசியமான ஒன்று.

முதுகு தண்டுவட தட்டு:

ஒரு சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டாகி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,674 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடிகாரம்!

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “wrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,069 முறை படிக்கப்பட்டுள்ளது!

தரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்

தரமான வாழ்க்கை நடத்துவதில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது. என ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 37 நாடுகளில் முதலிடத்தில் தாய்லாந்து முதலிடத்திலும் பஹ்ரைன் 2 வது இடத்திலும் , சீனா 3வது இடத்திலும் கேமன் தீவுகள் 4 வது இடத்திலும் , ஆஸ்திரேலியா 5 வது இடத்திலும் சி்ங்கப்பூர் 6வது இடத்திலும் மற்றும் தைவான் 8 வது இடத்திலும் ஸ்பெயின் 9வது இடத்திலும் மற்றும் பிரேசில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,862 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்!

சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.

அண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,070 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்

சூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகள் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ்

‘பிரபஞ்சத்தின் அதிவேக விரிவை’க் கண்டுபிடித்த சால் பெர்ல்மட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் என்ற மூவருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது! மூவரும் அமெரிக்கர்கள் என்றாலும் ஆடம் ரீஸ் மட்டும் அமெரிக்க ஆஸ்திரேலியர்.

இந்த ஆய்வில் ‘சூப்பர் நோவா’ க்களிலிலிருந்து வெளிவந்த ஒளி, எதிர்பார்த்த கால அளவை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 49,587 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்ப்பகாலம், கர்ப்பம்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் . . . → தொடர்ந்து படிக்க..