Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,082 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,686 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

”உடனடியாக செய்யக்கூடிய இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,350 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா?

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா? இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க…

அல்சர் என்பது சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலமானது அதிகரித்து, இரைப்பை மற்றும் உணவுக்குழலை அரித்து, புண்ணாக்குவதோடு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சரை எச். பைலோரி என்னும் பாக்டீரியாவும் உண்டு பண்ணும். இத்தகைய அல்சர் வந்தால், கடுமையான வயிற்று வலியுடன், வாந்தி, செரிமானமின்மை, சீரற்ற குடலியக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,346 முறை படிக்கப்பட்டுள்ளது!

தவக்குல் – பொறுப்புச் சாட்டுதல் (வீடியோ)

அல்லாஹ் மீது நாம் தவக்கல் வைத்து செய்யும் காரியங்கள் பல வெற்றி பெறுவது இல்லையே என்று நாம் நினைப்பது உண்டு. காரியங்கள் வெற்றி பெற அல்குர்ஆன் அழகான தீர்வைத் தருகின்றது. அதனை நாம் சரியாக கடைபிடிப்பது இல்லை. எனவே நம் காரிங்கள் தோல்வியில் முடிகின்றன.

குர்ஆன் காண்பிக்கும் அழகிய வழி என்ன? முதலில் சரியான திட்டமிடல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அதன்பின் சரியான பொறுப்பாளனிடம் ஒப்படைத்தல். எந்தக் காரியத்தையும் சரியாக முடிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,006 முறை படிக்கப்பட்டுள்ளது!

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

“உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!” என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்… இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,983 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்

நீரில் இரண்டு முறை குளிக்க முடியாது என்பார்கள். இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஒப்புமைக்கு இதை பயன்படுத்தினாலும் தவறில்லை என்று எண்ண தோன்றுகிறது. அவ்வளவுக்கு விரைவான மாற்றங்கள் அறிவியல் துறையில், பதிய கண்டுபிடிப்புகளில் உருவாகி வருகின்றன. அறிவியல் கண்டுபிடிப்பு என்றவுடன் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பதை மட்டும் குறிக்கவில்லை.

கண்டுபிடிப்பட்ட பொருட்களின் தரம், மதிப்பு, வசதிகள் ஆகியவற்றை முன்னேற்றி செலவு, மாசுபாடு, எரியாற்றல் குறைந்த பொருட்களை உருவாக்கும் முயற்சிகளும் அறிவியல் கண்டுபிடிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 67,874 முறை படிக்கப்பட்டுள்ளது!

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும். உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,180 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!.

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

சூழல்

குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,944 முறை படிக்கப்பட்டுள்ளது!

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ளது. மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,650 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,030 முறை படிக்கப்பட்டுள்ளது!

எட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி !

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

முன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)

ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துணையாக மிகப்பெரிய சூனியக்காரன் ஒருவனும் இருந்தான். வயோதிகனான சூனியக்காரனுக்கு தான் இறப்பதற்குள் தன்னுடைய சூனிய வித்தையை நம்பிக்கையான ஒருவனுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறுவனை தன்னிடம் அனுப்புமாறு மன்னனிடம் கேட்டான். மன்னனும் சிறுவன் ஒருவனை தயார்செய்து, சூனியக்கரனிடம் பாடம் படித்துவருமாறு தினமும் அனுப்பினான். பாடம்படிக்கச் செல்லும் வழியில், ஒரு நல்ல மனிதரின் தொடர்பால் சிறுவனுக்கு நேர்வழி கிடைத்தது. அந்த நேர்வழியின்பால் சிறுவனும் மக்களை . . . → தொடர்ந்து படிக்க..