|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
14,975 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th December, 2012
காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை ‘சிக்கன ரெசிபி’களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ‘பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ நங்கநல்லூர் பத்மா.
”வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,965 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th December, 2012 தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு. பெரும்பாலானோர் கூறும் கருத்துக்கள்:
“போன ஜெயலலிதா ஆட்சியில மின் தட்டுப்பாடு கம்மியா இருந்துச்சு.. ஏன், உபரி மின்சாரம் கூட இருந்ததாம்.. ஆனால்,அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில, இயங்கிக் கொண்டிருந்த எந்த மின் தயாரிப்பு நிலையங்களும் சரி வர பராமரிப்பு செய்யாததால்தான் தற்போது இந்த நிலைமை”.
“கூடங்குளம் பிரச்னையை திசை திருப்பி, மக்களுக்கு மின்தட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவே அரசு இப்படி செய்கிறது..”
“ஜெயாவின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,226 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2012 நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,142 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th December, 2012 அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கலாம்
தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கையை அரசு வெளியிட்டு இருப்பது பொது மக்களிடமும், நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்திக்கான செலவு அதிகம். பராமரிப்பதும் கஷ்டம் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு தயக்கம் காட்டினார்கள். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,214 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th December, 2012 மனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும்; மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,021 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th December, 2012 உபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து உருப் படியாக ஒரு தொழில்!
எவ்வளவுதான் புதுத் துணிகள் வாங்கினாலும், பழசை அப்புறப்படுத்த அத்தனை சுலபத்தில் மனசு வருவதில்லை. ‘எதுக்காவது யூஸ் ஆகும்…’ என பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தியே, ஒரு கட்டத்தில் எதற்குமே உபயோகமில்லாமல் குப்பைக்குப் போகும் அவை. உபயோகிக்காத சேலை, அளவு சிறுத்துப் போன உடைகள் என பலரது வீடுகளையும் ஆக்கிரமிப்பது துணிக்குப்பைதான்.
உபயோகமில்லாத பழைய, புதிய துணிகளை வைத்து உருப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,082 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2012 கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என முந்தைய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு நடந்தப்பட்ட ஒரு மீளாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்பு செய்யப்பட்ட 44 ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றாக ஆராய்ந்து இந்த முடிவு தெரிவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஏழாயிரம் கர்ப்பிணித் தாய்களை அவதானித்து இந்த 44 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
21,645 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2012 புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது. ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,804 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2012 முக்கிய கண்டுபிடிப்பு
கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,104 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th November, 2012 ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இ – மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,198 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd November, 2012 உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,253 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th November, 2012 அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.
புனிதமான மாதங்களில் ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
|
|