|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,753 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2017 ஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம்! – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,018 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th July, 2017 [மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]
சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.
திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,762 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2016 இயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,035 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th November, 2016 செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்!
ஆடு வளர்ப்பு
ஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,685 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2016 இந்தியாவின் ஏற்றுமதி 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது வெளிப்படை. நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போது நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை.
நல்ல வேளையாக, 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல், நம் ஏற்றுமதி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,755 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th April, 2016 மிகக் குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்குத் தேவைப்படும் முதலீடு மிகவும் குறைவு.
வெள்ளாடுகள், இறைச்சி, பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி, கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது.
உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,875 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th March, 2016 இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,299 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2015 ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி… என்று நிஜ வாழ்க்கையில் துணிந்து செயல்படுபவர்கள்தான் ஜெயிக் கிறார்கள். இன்று தொழிலதிபராக உள்ள அனைவரும் இந்த ரகத்தினர்தான். இந்தப் பட்டியலில் நீங்களும் சேர விரும்புகிறீர்களா? அப்படியெனில் இந்தத் தொடர் உங்களை மெருகேற்றும்.
வேலை செய்ய பிடிக்கல, நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் இதன் மூலம் சமுதாயத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே போதும். தொடர்ந்து படியுங்கள்… தொழிலதிபராகுங்கள்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,534 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th November, 2015 ஏற்றுமதி தொழில் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே தமிழர்கள் கிரேக்கத்துக்கு சென்று வணிகம் செய்ததையும், வேறு பல நாட்டவர்கள் தமிழகத்துக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றதையும் வைத்துப் பார்க்கும்போது, நமது ஏற்றுமதி தொழிலுக்கு இரண்டாயிரம் வயதுக்கு மேல் என்று சொல்லலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டின் உள்நாட்டு வணிகம் பண்டமாற்று முறையிலேயே அமைந்திருந்தது. நம் முன்னோர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,425 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st November, 2015 சீனர்கள் பெரும்பாலும் அசப்பில் ஒருவர் போலவே அனைவரும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சீனர்கள் யாரையாவது தேடிக் கண்டு பிடிக்க நேர்ந்தால் தொலைந்தோம். தேடித் தேடி நமக்கும் மூக்கு சின்னதாகிவிடும்.
சீனர்களை விடுங்கள். திருப்பதியில் மொட்டையடித்த பக்தகோடிகள் அனைவரும் ஒன்று போல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்கு மொட்டையடித்த குறிப்பிட்ட நபரைத் தேட நேர்ந்தால் தேடித் தேடி நாமும் மொட்டையாக வேண்டியதுதான்.
இதே கதைதான் மார்க்கெட்டில், மார்க்கெட்டிங்கில், மார்க்கெட்டர்களிடம். விற்கும் பிராண்டை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,023 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th February, 2014 மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,439 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd September, 2013 முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
Break Beat Prejudice, Ahead in life ..!
நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..
காரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார்.
. . . → தொடர்ந்து படிக்க..
|
|