|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
0 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th August, 2011 முக்கியமானதை முதலில் படியுங்கள்!
வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,383 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th August, 2011 சீக்கிரமே படியுங்கள்!
வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,550 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th July, 2011 ஒரு தாவோ கதை …
பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,078 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th July, 2011
புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே
நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால் அதைத் துப்பி விடாதே
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,411 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th July, 2011 கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,492 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th July, 2011 ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
” ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்டார்.
அதற்கு இவர் ” எனது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,835 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st July, 2011 போர்க்களமா வாழ்க்கை? பார்க்கலாமே ஒரு கை! சோர்ந்து விடாதே! இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே!
இல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்!
மறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும் பஞ்சப் பிரபுவின் நாக்கு!
கொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்!
நாம் இழைக்கும் தவறுகளிலே கதைப் பேசி பிழைக்கும் கூட்டங்கள்
இந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,736 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th July, 2011 எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான். அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை ஞானசேகரனே சொல்கிறார்.
‘என் அப்பா வீட்டிலேயே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,860 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th July, 2011 டாக்டர் கலாம்
அந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,785 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th June, 2011
[ கணவனின் துன்புறுத்தலிலிருந்து தற்காத்துக்கொள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் அடி விழுந்ததுமே தாய் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். தனது ஆதரவு வட்டத்தை பெண்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
வக்கிரபுத்தியுடைய ஆண்கள் (ஆன்ட்டி சோசியல் பெர்சனாலிட்டி டிசார்டர்) சமூகத்தின் சட்ட, திட்டங்களை மதிக்க மாட்டார்கள். இவர்கள் முற்றிலும் சுயநலவாதிகள்; ஆனால் தெளிவாக இருப்பர். தனது தேவைக்கு பிறரை பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிவர்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,802 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th June, 2011 என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை நிச்சயம் தோல்வியையே தரும். தன்னைத்தானே சந்தேகிப்பதுதான் வீழ்ச்சியில் தலையாய வீழ்ச்சி-என்கிறார் மதாம் கத்தரீன் கஸ்பரீன்.
தாழ்வு மனப்பான்மை என்பதுதான் என்ன? தன்னை நம்பாமை என்ற மையக்கருத்தை அடிப்படையாக வைத்து அதைச் சுற்றி எழும் உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களின் தொகுதியே தாழ்வு மனப்பான்மையாகும். தாழ்வு மனப்பான்மைக்குப் பலியானவன், தான் தோல்வி அடையப் பிறந்தவனே என வலுவாக நம்புகிறான்.
தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,726 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2011 சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.
பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல . . . → தொடர்ந்து படிக்க..
|
|