Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,445 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேன்கூடு

தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

இந்த “தேன்கூடு” (Bee hive) என்பது… இத்துனூண்டு முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா-larva) அற்பப்புழு, (ப்யுபா-pupa) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்து பறந்து வந்து நம்மை கொட்டி வீங்க வைக்கும் ஒரு மிக மிக சாதாரணமான “தேனீ எனும் ஒரு பறக்கும் பூச்சி” இனத்தினால் கட்டப்படுவதுதான் என்று அறிந்த போது… அதுவும் எவ்வித உலக கட்டுமான பொருட்களும் இன்றி சுயமாக தன்னிடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்ஹாஜ் M.O.H. ஃபாரூக் மறைவு!

முன்னாள் புதுவை முதல்வர்,முன்னாள் சவுதி அராபிய நாட்டின் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி இன்று 26.01.2012 இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் إنا لله وإنا إليه راجعون

அவர்களின் நல்லடக்கம் இன்ஷா-அல்லாஹ் பாண்டிச்சேரியில் முழு அரசு மரியாதையுடன் நடக்க இருக்கிறது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,053 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேரை மறந்த விழுதே … கவிதை

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள் தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள் கண்ணே மணியே பொன்னே என்று விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும் தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும் விதியாய் எண்ணி நொந்தனள் தவிர சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ? பார்வைகள் மாறியே பாசமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,269 முறை படிக்கப்பட்டுள்ளது!

கஃபாவின் நேரடி ஒளிபரப்பு

கஃபத்துல்லாவிலிருந்து – நேரடி ஒளிபரப்பு – கிளிக் செய்யவும்

நீங்கள் எல்லா நேரத்திலும் மக்கா (கஃபா) நேரடி ஒளிபரப்பில் பார்க்கலாம். கிளிக் செய்து ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,980 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்படி வந்தது குடியரசு ?

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், “மக்களாட்சி’. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,172 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயோ-டேட்டா….. அமெரிக்கா

பெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு

தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் : இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்

முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்

அசுர பலம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,142 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

10 நாட்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு இன்றுதான் சென்னை திரும்பினேன்..! திண்டுக்கல், வேடசந்தூர், தேனி, உத்தமபாளையம், கம்பம், திருச்சி என்று ஒரு மின்னல் வேக டூர்..! நெருங்கிய சொந்தங்களையும், சொந்தங்களாக இருப்பவர்களையும் 2 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து நான் உயிருடன் இருப்பதை நிரூபித்துவிட்டு வந்தேன்..!(எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்க வேண்டியிருக்கு..?)

டூர் அனுபவங்களை சிறிய தொகுப்பாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினாலும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,591 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பும் படியே நடக்கும்!

அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,701 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொழுதுபோக்கான விஷயங்களையே எப்படி தொழில் ஆக்கலாம்?

‘வீட்டில் இருந்தபடி சம்பாதிப்பது எப்படி?’, ‘வீட்டுப் பெண்கள் வியாபார காந்தம்’ ஆவது எப்படி?’, என்பது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதைப் படிக்கும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுவது உண்மைதான். ஏனென்றால், இந்தக்கால கட்டத்தில் மாத வருமானத்துடன் கூடுதல் வருமானமும் வருகிறது என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா? சரி, எப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது வருமானத்திற்குத் தயார்படுத்திக் கொள்வது, என்ன தொழில் செய்வது, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,615 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19

இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.

நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,782 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூபாய் மதிப்பு : வீழ்ச்சியும், விளைவுகளும்

இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 18,475 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆண்களின் குறட்டை

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் . . . → தொடர்ந்து படிக்க..