|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,389 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th September, 2011 நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!
எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.
நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,729 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th September, 2011 “பல்லுப் போனால் சொல் மாத்திரமல்ல அழகும், சந்தோஷசமும் போய்விடும்”
“எதையும் வரும் முன் காப்பதே திறமை” என்பதற்கு இணங்க சிறு வயதில் குழந்தைகளின் பற்களுக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு சிகிச்சையும் அவர்களின் வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் பெரும் பிரச்சனைகள் அல்லது விளைவுகளில் இருந்து தடுத்து, அவர்களை நல்ல வலிமையான ஆரோக்கியமான பற்களைக் கொண்டவர்களாக மட்டுமல்லாமல், நல்ல உடல் நலத்தையும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு குழந்கைளின் பெற்றோர்களும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,047 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th September, 2011 வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு ‘இலட்சியம்’ இல்லாவிட்டால் மனிதன், கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தா கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார். மகத்தான செயல்கள் யாவும் முதலில் ‘முடியும்’ என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட வைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதை நினைவில் கொள். உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,782 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st September, 2011 இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.
20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,187 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th September, 2011 பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,188 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th September, 2011 ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,921 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th September, 2011 விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!
விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
தமிழகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,680 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th September, 2011 ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!
ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.
விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,927 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th September, 2011 அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை அவள் விகடன் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.
இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
20,792 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th September, 2011 திராட்சை! நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு…. என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,947 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th September, 2011 பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள வல்லம் வடகால் என்ற இடத்தில் அமைக்க திட்டமிட்டிருந்த கார் தயாரிப்பு தொழிற்சாலையை, குஜராத் மாநிலத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் வாய்ப்பு விஷயத்தில், புதிய தமிழக அரசின் முதலாவது இழப்பாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.
ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே கார் தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலத்தை வழங்குவதில் சில சிக்கல்களை எதிர்நோக்கியது தமிழக அரசு. உரிய நேரத்தில் அப்பகுதியில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,194 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th September, 2011 படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.
அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்
வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை . . . → தொடர்ந்து படிக்க..
|
|