Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,985 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் ரிபோசோம்களும்

2009ம் ஆண்டு வேதியல் துறைக்கான உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வயது 57) என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும். ‘வெங்கி’ என்பது அவரது பெயரின் செல்லச் சுருக்கம்.

வெங்கியுடன் ரூபாய் ஏழுகோடி மதிப்பிலான இந்தப் பரிசுத் தொகை அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,246 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,594 முறை படிக்கப்பட்டுள்ளது!

டைனோசர் தோன்றிய நகர் அரியலூர்

’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முதுமொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வமாகவும், மரபணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வ குடிகள் என்று நிரூபணமாகியுள்ளன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பழங்காலத்திலிருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான அடுத்த ஒரு சான்றுதான் அரியலூர்.

அறிவியலாளர்கள் 460 கோடி ஆண்டுகட்கு முன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,406 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி

ஜில்ஸ்வெர்னி ‘உலகத்தைச் சுற்றி எண்பது நாட்கள்’ என்கிற உலகப் பிரசித்தி பெற்ற நாவலை எழுதினார். அவருக்கு வேறு துறையில் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அவர் எழுத்துத் துறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்.

‘ஒரு பலூனில் ஐந்து வாரஙகள்’ என்ற கற்பனை நாவலை எழுதினார். சுவையும் திருப்பமும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்காவை கதைக்குப் பின்னணியாக வைத்துக் கொண்டார்.

அற்புதமாக எழுதி முடித்தார்.

பல பதிப்பாளர்களைத் தேடிச் சென்று நாவலைத் தந்தார். ஒரு பதிப்பாளர் கூட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,030 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!

ஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புரிந்து, இறந்தும் வாழ்பவர்கள் சிலரே.

அதுபோன்று சாதனை புரிந்து மறைந்த ஒருவரைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

இதய அறுவை சிகிச்சை என்பது இன்றைய காலத்தில் வெகுசுலபமானதாகவும், சாதாரணமாக நிகழ்வாகவும் மாறிவிட்டது. ஆனால் அதன் பின்னணியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,275 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்

நேர்மைக்கு பெயர் போனவர், எந்த ஒரு அரசியல்வாதிகளின் தாந்தோன்றிதனதிற்கு அடிபணியாதவர், எந்த ஒரு நிலைமையிலும் கடமையை செய்ய தயங்காதவர், என்று அடுக்கிகொண்டே போகலாம்

அவரது 20 + ஆண்டு கால பணிக் காலத்தில் அவரது அதிரடி செயல்பாடுகள் பொதுமக்கள் அனைவரையும் அவரது பரம விசிறியாக மாற்றிவிட்டது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

பதவிகள்

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,243 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,553 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோப்பில் முஹம்மது மீரான்

தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. நாவல்களைப்போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார்.

தோப்பில் முகம்மது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,496 முறை படிக்கப்பட்டுள்ளது!

யுகபுருஷர் – ஐன்ஸ்டைன்

யுகபுருஷர் – ஐன்ஸ்டைன் (Person of the Century)

தனக்கு மூன்று வருஷம் சீனியரான, கால் ஊனமுற்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். என்றாலும், இயற்பியல்தான் அவருடைய முதல் காதலாக இருந்தது.

2005-ஐ உலக இயற்பியல் ஆண்டாக ஐ.நா. அறிவித்ததை நாம் மறக்கக் கூடாது. ஒரு முக்கியமான நூற்றாண்டு நிறைவை உலகமே கொண்டாடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905-ல் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, பிரபஞ்ச சக்திகளைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,126 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்னை ஆயிஷா (ரழி)

அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,103 முறை படிக்கப்பட்டுள்ளது!

உம்மு சுலைம் (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,908 முறை படிக்கப்பட்டுள்ளது!

இங்க் – மை -Ink உருவான வரலாறு

இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 . . . → தொடர்ந்து படிக்க..