Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,925 முறை படிக்கப்பட்டுள்ளது!

குரோதம்

இன்று அன்று ஊரில் பங்களா ஊரைச்சுற்றி நிலபுலங்கள்! டவுனில் கமிஷன்மண்டி டஜன்டஜனாய் வாகனங்கள்! பேங்கு லாக்கரில் பேல்பேலாய் நகைநட்டு! அந்தக் காலத்தில் அரசாண்ட மன்னருக்கு ஒப்பான சொத்துக்கள் ‘ஓடையடி சுலைமானுக்கு! அந்தச் செல்வந்தரின் அழகான பங்களா சோகத்தில் மூழ்கி சோர்ந்து கிடந்தது! மகன் மஹ்மூது மலைத்துபோய் நின்றான்! மக்கள்; பேரன்கள் மாடிவீட்டு உறவினர்கள் மண்டிக் கிடந்தார்கள்! மவுனமாய் அழுதார்கள்! எல்லா டாக்டர்களும் ‘இறைவன் விட்ட வழியென்று’ இங்கிதமாய்ச் சொல்லி இங்கனுப்பி விட்டார்கள்! ‘நேர எதிர்பார்ப்பில்’ நேரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,318 முறை படிக்கப்பட்டுள்ளது!

சகோதர பாசம்

இன்று அன்று சக்தி உள்ளவரை சளைக்காமல் உழைத்ததனால் சத்தார் ராவுத்தருக்கு சொத்துக்கள் ஏராளம்! இரண்டே பிள்ளைகள் இருவருமே ஆண்மக்கள்! இருவருக்கு மிடையில் ஈராறு வருடங்கள்! பெரியவன் அமீர் பின்னவன் அன்வர் அலி! மனைவி மரியம் மௌத்தாகி விட்டதனால் அமீரின் அரவணைப்பில் அன்வரை விட்டுவிட்டு அத்தா சத்தாரும் அல்லாஹ்வின் அழைப்பேற்றார்! அண்ணன் அமீரும் அவன்மனைவி ஆஷிக்காவும் சின்னவன் அன்வரை சித்திரவதை செய்தார்கள்! பள்ளிக்குச் சென்றுவந்த பாலகனாம் அவனின் படிப்பை நிறுத்தி பலவேலையும் கொடுத்து அடித்துக் கண்டித்து அன்றாடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,745 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளதைக்கொண்டு

இன்று அன்று “பாத்துச்செய் பஷீரு! பத்து நாள்ல திருப்பித் தாரேன்” பரக்கத்து கெஞ்சினான் பஷீர் கோபித்தான். “என்னடா பரக்கத்து என்னதான் செலவுனக்கு? சின்னக் குடும்பம் சீரான வியாபாரம்! சொந்த வீடு; சொத்துப் பத்தும் உண்டுதான்! கடன் கடன்னு கண்டபடி வாங்கினா கட்டுக்குள் நிக்குமோ? கடைசியில் சிரமமாச்சே?” “அப்புறமாப் பேசலாம் அதப்பத்தி பஷீரு! இப்ப எனக்குத்தேவை இருபத்தி ரெண்டாயிரம்! மானப் பிரச்சினை மனசுவச்சுத் தந்துடுப்பா” “இருந்தாத் தந்துடுவேன் இப்ப இல்லை; எனை நம்பு!” கறாராய்ச் சொல்லிவிட்டான் கான்ட்ராக்டர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

வளர்ப்பு

இன்று அன்று ஆசியா மரியத்துக்கு அழகான ஒருபிள்ளை! வயது நான்கு வதூது அதன் பெயர்! கொள்ளை அழகு குறும்புகளோ ஏராளம்! பேச்சில் செல்லம் பெரியவன்போல் துருதுருப்பு! ஆனா ஆவன்னா அழகாக அவன் படிப்பான் ஏ பி சீடி எழிலாக அவன் சொல்வான்! என்ன சொன்னாலும் சொன்னதைச் சொல்லிவிடும் புத்தி சாலித்தனம் பூரிப்பு எல்லோருக்கும்! ஒலி ஒளி கேட்டால் ஒரே மூச்சில் மனப் பாடம்! ஒரு ஸ்டெப் விடாமல் ஒழுங்கான டான்ஸ் மூவ்மென்ட்! ஆசியா மரியம் அகமகிழ்ந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,020 முறை படிக்கப்பட்டுள்ளது!

எளிதாய் ஒரு தொழில்

இன்று அன்று வாட்ட சாட்டமுகம் வகையான கம்பீரம் இனிய பேச்சு எப்போதும் புன்சிரிப்பு தூய வெண்ணுடை தீட்சண்யமிகு பார்வை கறுப்புத் தாடி காய்த்துப் போனநெற்றி பார்ப்போரை ஈர்க்கும் பக்திப் பரவசமே! பலவாறாய் சிரமப் பட்டநம்ம முத்தலிபு சில வருஷ மாக சிரமமின்றி வாழ்கிறார்! வீட்டைப் புதுப்பித்தார் வயலிரண்டை வாங்கிப் போட்டார். வங்கியில் பணம் சேர்த்தார் வாகனமும் வாங்கிவிட்டார் என்ன தொழிலென்று யாருக்கும் தெரியாது எப்படி வசதி என்று யூகிக்கவும் முடியாது எளிதான தொழிலொன்று இருக்கிறது என்றஉண்மை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,810 முறை படிக்கப்பட்டுள்ளது!

விருந்தும் மருந்தும்

இன்று அன்று கடன்உடன் வாங்கி காசிம் முகம்மது கடைசி மகளின் கயாணம் நடத்தினார் பதினைந் தாயிரம் பணமாய்த் தந்து பத்துப் பவுனும் போடஒப் பந்தம் அங்கும் இங்கும் ஆளாய்ப் பறந்ததில் அல்லாஹ் உதவினான் அனைத்தும் சேர்ந்தது மாப்பிள்ளைத் தோழர் முப்பது பேருடன் மணவிழாக் காண மேலும் நூற்றுவர் வருவார் என்பது வழிமுறைப் பேச்சு காசிம் அதற்கென கறியும் காயும் கச்சித மாகக் கடையில் வாங்கினார் வந்தது மணநாள் வந்தனர் விருந்தினர் அன்புடன் அவர்களை அழைத்து வீட்டில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊடல்

இன்று

அன்று

பஹ்ருதீன் அலிக்கு பாரிக்கத்து ஒரே மகள்! பணக்கார இடத்தில் பக்குவமாய்க் கொடுத்திருந்தார்! பாரூக் அவன் பெயர்; படித்தவன்; பண்பாளன்! எடுத்தெரிந்து பேசுதலை எப்போதும் அறியாதவன்! தானுண்டு தொழிலுண்டு தன்கடமை உண்டென்று தயங்காது நடப்பவன் தளராத உழைப்பாளன்! ஆனால் பாரிக்கத்து அவனுக்கு நேரெதிர் நடையுடை பாவனை நாகரிகத்தின் உச்சம்! யாரையும் மதிக்காத ஆர்ப்பாட நடைமுறைகள்! பேச்சில் ஆணவம் பிறரை மதிக்காமை! பிறந்த வீட்டின் பெருமை பேசுதலில் நிரந்தரத் தீவிரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,940 முறை படிக்கப்பட்டுள்ளது!

தாயின் காலடியில்

இன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள்! ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள்! அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில்! மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான்! அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி ! வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள்! ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை! அன்பு மகனை அருமை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,792 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேர்மை

இன்று அன்று ஆயிஷத்து பாக்கிரா அலிக்கமா லின்மனைவி! அரசுப் பணியில் அலிக்கமால் ஒருகுமாஸ்தா! ஆயிரத்து எண்ணூறு அவனுக்கு வருமானம்! ஒண்டுக் குடித்தனம்; ஓயாத பற்றாக்குறை! உள்ளதைக் கொண்டு நல்லது காணும் உயர்ந்த மனநிலை ஆயிஷாவுக் கில்லை! அவள் அடிக்கடி அரற்றுவாள்; எகிறுவாள்! கண்ணைக் கசக்குவாள்; கணவனை ஏசுவாள்! “பிழைக்கத் தெரியாத பித்துக் குளியாக எனக்குக் கிடைத்தது இருக்குதே?” என்றவள் அங்க லாய்ப்பாள்; அடிக்கடி சண்டைதான்! வேறு வழியில்லை விலகவும் மதியில்லை! மனைவியின் அழுத்தத்தால் மாறினான் அலிக்கமால்! . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,597 முறை படிக்கப்பட்டுள்ளது!

உதவி

இன்று: மாலை ஐந்துமணி மஹரிபா பரபரத்தாள்!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,942 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெற்றோர் பேணுதல்

இன்று:

வாகாய் மலேசியாவில் வகை வகையாய்த் தொழில் செய்த வஹ்ஹாப் ராவுத்தர்

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,469 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணியாளின் மேல் பரிவு

இன்று அன்று முன்னறையின் உள்ளே முஹ்ஷின் பைல் பார்த்தான் மும்தாஜ் அவன் மனைவி மும்முரமாய்ப் படம் பார்த்தாள்! கண்ணைக் குளமாக்கும் காட்சி அது! மும்தாஜும் கலங்கினாள்; காட்சியிலே கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்! அந்த நேரத்தில் அடுப்பங்கறை உள்ளிருந்து வந்ததொரு வெடிச்சத்தம் வாசலுக்கே கேட்டிருக்கும்! முஹ்ஷின் வெளிவந்தான்; மும்தாஜும் ஸ்தம்பித்தாள்! என்ன நடந்ததென்று இருவருக்கும் புரியவில்லை! கொஞ்ச நேரம் கூர்ந்து யோசித்ததும் நன்கு புரிந்தது நடந்தது என்னவென்று! ஓடினாள் மும்தாஜ் உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்! அடுப்பங்கறையினுள்ளே ஆரிபா நின்றிருந்தாள்! . . . → தொடர்ந்து படிக்க..