Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,110 முறை படிக்கப்பட்டுள்ளது!

பயணித்துத்தான் பார்க்கலாமே! கவிதை

படகுகள் காத்திருக்கின்றன கரையோர கனவுகளை கலைத்து விட்டு பயணத்தை துவக்கு முன் பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன கரை சேர்க்கும் கடமையுடன் அசைந்து அசைந்து உனை அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன ஒருவேளை உன் துயர் தீரலாம் ஒருக்கால் உன் பாரம் குறையலாம் ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம் ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன உபயோகிக்க கற்றுக் கொள் உதறி விட்டால் உன் பயணம்தான் ரத்து. மற்றபடி படகுகள் மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால் பயணித்துத்தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,576 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள்-கொசு விரட்டி தயாரிப்பு

பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால் (என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,970 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணித்துவிட்ட ஒருவரை அழைக்கலாமா.?

மரணித்துவிட்ட ஒருவரை நமக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்ட சொல்லி அழைக்கலாமா.?

ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,132 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலி – சிறுகதை

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..

ஏங்க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.

விறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,104 முறை படிக்கப்பட்டுள்ளது!

GOOGLE(கூகிள்) உருவான கதை – Google Story

இன்று கூகிள் என்றாலே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்! இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..

ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 16,127 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,709 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்? உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா? அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. “இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,484 முறை படிக்கப்பட்டுள்ளது!

மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!

“மது தீமைகளின் தாய்” – நபிகள் நாயகம்

திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.

இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,790 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,773 முறை படிக்கப்பட்டுள்ளது!

பதவி ஓர் அமானிதம்

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.

அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,400 முறை படிக்கப்பட்டுள்ளது!

Spam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)

20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.

மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,775 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவை வீணாக்காதீர்கள்..!

சவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் . . . → தொடர்ந்து படிக்க..