Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,066 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரார்த்தனை வலியது!

பெண்கள் கல்வி கற்று முன்னேறவேண்டும்; தற்சார்பு நிலையைப் பெறவேண்டும்; அவர்கள் வீட்டுச் சிறையில் நிரந்தரமாக அடைபட்டு சுமையாகிவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எழுதுகிறீர்கள்; மேடையில் பேசுகிறீர்கள். நான் கூட உங்களது ஒரு பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற பல பெண்கள் சமுதாயத்தில் வாழ்க்கையின் பொருளே புரியாமல் வீடுகளுக்குள் புதைந்து கிடக்கும் அவலம் பற்றியெல்லாம் நீங்களோ அல்லது வேறு சமுதாய ஊழியர்களோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதோ, எழுதுவதோ இல்லையே, ஏன்? நாங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,715 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா?

ரொம்ப பிஸியான வேலை நேரம்!

“சார், அவரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கிறார்…. ஏதோ பெர்ஸனலா பேசனுமாம் ” என்றார் உதவியாளர்.

பெர்ஸனல் விசயம் என்பதால் கிளினிக்குக்குள் வர வைத்துப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது.

“ஒரு பத்து நிமிஷம் ஹால்ல இருக்கச் சொல்லு…. இந்தக் கேஸைப் பாத்துட்டு நானே ஹாலுக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.

அதே போல கொஞ்ச நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேஸை முடித்துவிட்டு அவரிடம் சென்றேன். அவர் என் ஊர்க்காரர்தான்…… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,846 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..

1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.

சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,798 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதையெல்லாம் விக்யாதுங்க தம்பி..

எண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது!

ஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,588 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….

மேலே சுட்டெரிக்கும் வெய்யில்! ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,014 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெல்டன் மை பாய்!

1965 – ஆம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியர் அவர்களிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான கல்லூரி. கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடுகள்! லொயோலா மாணவர்களை “லொயோலோவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆஃப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,024 முறை படிக்கப்பட்டுள்ளது!

இதிலென்ன வெட்கம்?

திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது; திருமண நாளும் நெருங்கிவிட்டது. மணமகளின் அண்ணன் சில உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அஸர் தொழுகைக்காக ஒரு பள்ளியில் நுழைகிறான். அந்நகரின் அந்த மஹல்லாவில்தான் மணமகனின் வீடும் இருக்கிறது. தொழுது முடித்து, துஆ செய்துவிட்டுத் திரும்பும்போது முகத்துக்கெதிரில் மணமகனே நிற்கிறார்.ஸலாம் சொல்கிறார். பரஸ்பரம் கைகொடுத்துக் கொள்கிறார்கள். “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்கிறார் மணமகன்.

அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,381 முறை படிக்கப்பட்டுள்ளது!

நெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்!

ராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்!

அத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது!

ஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,201 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களுடன் ஒரு நிமிடம்..

“உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசணும்”

அது 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வாரம்! எனது முதல் ஐக்கிய அமீரகப் பயணத்தின் போது இரவு முழுக்க பல லேபர் கேம்ப்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது நடுநிசி. ஒரு கேம்ப்பில் ஆவலுடன் இளவல்கள் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடல் – உரை! பிறகு அடுத்த நிகழ்ச்சிக்காக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது 23 வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞர் சற்றே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,679 முறை படிக்கப்பட்டுள்ளது!

திடீரென நான் மௌத்தாயிட்டா!

நடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!

“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!

“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,877 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆல்பம் தந்த ஞானம்

எழுபதுகளில் தமிழகத்தின் பல இதழ்களுக்கும் அட்டைப் படங்கள் வழங்கும் பகுதி நேர புகைபடக் கலைஞனாக இருந்தபோது எடுத்த ஒரு புகைப்படம் அவசரமாகத் தேவைப்பட்டது. நேரம் ஒதுக்கித் தேட அரம்பித்த போது, கையில் அகப்பட்டது 1972 , மார்ச் மாதம் – ம் 3 -ம் தேதி நிகழ்ந்த என் திருமண ஆல்பம்! உடலில் ஊடுருவியது ஒரு மின்சாரப் பாய்ச்சல்! இருக்காதா பின்னே? மூன்று பத்தாண்டுகள் உருண்டோடிப் போய்விட்ட அதிசயத்தை மனதில் அசை போட்டவாறு பக்கங்களைப் புரட்டிய போது, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,708 முறை படிக்கப்பட்டுள்ளது!

கரைசேர்த்த மறை வசனம்

மார்ச் மாதம் 2000 – ஆம் வருடம்! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் ‘இமிக்ரேஷன் கவுன்டரில் நானும் மனைவியும்!

எங்கள் இருவரின் தற்காலிக பாஸ்போர்டைத் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்த இமிக்ரேஷன் ஆபீஸர் பெண்மணி, ஆங்கிலத்தில் “உங்கள் பாஸ்போர்ட் எப்போது தொலைந்தது?” என்று கேட்கிறார்.

“டிஸம்பர் 24 1999” என்கிறேன்.

“ஸ்பெசல் பாஸில் இங்கு தங்கி இருக்கிறீர்கள், அப்படித்தானே?”

“ஆமாம்”

“ஸ்பெசல் பாஸ் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடியாகும்; இப்போது மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது…. எப்படித் தங்கி இருக்க . . . → தொடர்ந்து படிக்க..