Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,458 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்கே படிக்கிறோம் என்பது முக்கியமா?

எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் வசதிக்கேற்ற பகுதியில் நல்ல, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலைக் கொண்டுள்ளனர்.  

 முடிந்தளவிற்கு அருகாமையில், விரும்பும் கல்வி நிறுவனம் இருந்தால், பலருக்கும் சந்தோஷமே. எந்தெந்த பகுதிகளில், எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகிறோம். அதன்மூலம் மாணவர்கள் தங்களின் அலைச்சலைக் குறைத்து, போக்குவரத்தினால் ஏற்படும் பொருட்செலவையும் குறைக்கலாம். உறவுகளை பிரிவதையும் தவிர்க்கலாம். 

தமிழ்நாடு: 
இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பெயர்பெற்ற எம்.பி.ஏ. நிறுவனங்கள் பல இருப்பது ஆச்சர்யமானதல்ல. தலைநகர் சென்னையானது, இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளைப் பெற்றுள்ள நகரங்களில் இரண்டாவதாக உள்ளது. மோட்டார் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் டெட்ராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே சென்னை மற்றும் தமிழகத்தின் வேறு சில பகுதிகளில் இருக்கும் எம்.பி.ஏ. படிப்பிற்கான பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களை பார்ப்போம். 
புகழ்பெற்ற சென்னை ஐ.ஐ.டி -இலுள்ள டிபார்ட்மென்ட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எம்.பி.ஏ. படிப்புகளுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று. இதைத்தவிர திருச்சியிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை எம்.பி.ஏ. படிப்பிற்கு சிறந்த நிறுவனங்கள். மேலும் சென்னையில் சர்வதேச அளவிலான தரத்துடன் மேலாண்மை படிப்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், குறுகிய காலத்தில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. 
இதைத்தவிர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் டிபார்ட்மென்ட் ஆப மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை எம்.பி.ஏ. படிப்புகளுக்கு பெயர்பெற்றவை. மேலும் சென்னையின் எஸ்.ஆர். எம். ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், சிவகாசியின் மெப்கோ, சேலத்திலுள்ள சோனா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட், மதுரையிலுள்ள தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவை தமிழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களில் சிலவாகும். 

கேரளா: 

இம்மாநிலத்தின் கோழிக்கோடு நகரில் ஐ.ஐ.எம். அமைந்துள்ளது. இதைத்தவிர அதே நகரிலுள்ள பரூக் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலையின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், கொச்சின் நகரிலுள்ள ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் போன்றவை மேலாண்மை படிப்பிற்கு பெயர்பெற்ற நிறுவனங்கள். 

கர்நாடகா: 
பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்., மேலாண்மை படிப்பிற்கு உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாகும். மேலும் அம்மாநிலத்தில் கிர்லோஸ்கர் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மனிப்பாலில் உள்ள டி.ஏ. பாய் இன்டிடியூட், மைசூரிலுள்ள எஸ்.டி.எம். இன்ஸ்டிடியூட் போன்றவை அம்மாநிலத்தின் இதர புகழ்பெற்ற நிறுவனங்கள். பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்(ஐ.ஐ.எஸ்சி), முனைவர் பட்ட நிலையில் மட்டுமே மேலாண்மை படிப்புகளை வழங்குகிறது. இதைத்தவிர, செயின்ட் ஜோசப், ஆர்.வி., மவுன்ட் கார்மல், கிரைஸ்ட் போன்றவை வேறு படிப்புகளுக்கு பெயர்பெற்ற நிறுவனங்களாக இருந்தாலும், தேவை கருதி புதிதாக மேலாண்மை படிப்புகளை ஆரம்பித்துள்ளன. 

டெல்லி: 

டெல்லி மற்றும் என்.சி.ஆர்.(நேஷனல் கேபிடல் ரீஜன்) பகுதிகள் இணைந்து நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மேலாண்மை கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் ஏ.ஐ.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. டெல்லி பல்கலையின்கீழ் இயங்கும் நாட்டிலேயே பழைய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பேகல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எம்.பி.ஏ. படிப்பிற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் குர்கவானிலுள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் ஒரு பெயர்பெற்ற கல்வி நிறுவனம். இவைத்தவிர பிம்டெக், ஜி நொய்டா, எல்.பி.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்றவையும் முக்கியமானவை. 

ஆந்திரா: 

ஆந்திர தலைநகர் ஐதராபாத், பொதுவாகவே படிப்பிற்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கே மேலாண்மை படிப்பிற்காக பல சிறப்புவாய்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. பொது மேலாண்மை படிப்பில் தொடங்கி, வெளிநாட்டு வர்த்தகம், ஆபரேஷன்ஸ் மேலாண்மை மற்றும் எம்.பி.ஏ.(பயோடெக்னாலஜி) போன்ற சிறப்பு துறைகளுக்கான மேலாண்மை படிப்புகள் வரை படிப்பதற்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்(ஐ.எஸ்.பி), ஐ.சி.எப்.ஏ.ஐ. பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐ.பி.இ. போன்றவை அவற்றுள் சிலவாகும். மேலும் இம்மாநிலத்தில், பல்கலை இணைப்பு பெற்ற, சுயாட்சி அதிகாரம் உடைய, மேலாண்மை படிப்புக்கு பெயர்பெற்ற 100 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. 

மாகாராஷ்டிரா: 

இம்மாநில தலைநகரான மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பதால், இப்பிராந்தியத்தில் எம்.பி.ஏ. படிப்புகள் இயல்பாகவே முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டிலேயே மேலாண்மை கல்விக்கு புகழ்பெற்ற 3 கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி.ஐ.இ.(தொழில்துறை மேலாண்மை படிப்பிற்கு புகழ்பெற்றது), டி.ஐ.எஸ்.எஸ்.(மனித வள மேம்பாட்டு எம்.பி.ஏ. படிப்பிற்கு புகழ்பெற்றது) மற்றும் ஜே.பி.ஐ.எம்.எஸ்.(மும்பை பல்கலையின் எம்.எம்.எஸ். படிப்பிற்கு புகழ்பெற்றது) ஆகியவை இங்குள்ளன. மும்பையிலுள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்னவெனில், ஒரே வளாகத்தில் இரண்டுவித மேலாண்மை படிப்புகளை அவை வழங்குகின்றன. எம்.எம்.எஸ். படிப்பின் பெரும்பாலான இடங்கள் அம்மாநில மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை நகரில் மட்டுமே, மேலாண்மை படிப்பை நடத்தும் 67 கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல முக்கிய வணிக நிறுவனங்கள், மும்பையில் தங்களின் தலைமை அலுவலகத்தையோ அல்லது வணிக செயல்பாட்டையோ வைத்திருப்பதால், இந்நகரில் 2 ம் அல்லது 3 ம் தர மேலாண்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்கூட வேலை பெறுவது எளிதாக உள்ளது. நிதி சம்பந்தமான சிறப்பு படிப்பை மேற்கொள்வதற்கு, என்.எம்.ஐ.எம்.எஸ். கல்வி நிறுவனம் சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஜே.பி.ஐ.எம்.எஸ். மற்றும் சிடன்ஹேம் போன்ற கல்வி நிறுவனங்கள் புகழ்பெற்றதாக இருந்தாலும், அங்கு முழுநேர ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. 

புனே பிராந்தியம்: 

மராட்டிய மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான புனே, பல மாநிலங்களை சேர்ந்த உள்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, பல வெளிநாட்டு மாணவர்களுக்கும் முக்கியமான கல்வி கேந்திரமாக திகழ்கிறது. இங்குள்ள புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மாநில அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வின் மூலம் தேர்வாகும் மாணவர்களை சேர்த்துக் கொண்டாலும், கேட் அல்லது மேட் தேர்வுகளின் மூலம் பரவலாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பல புகழ்பெற்ற தனியார் மேலாண்மை பள்ளிகளும் உள்ளன. 

இப்பகுதியிலுள்ள பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ஒரு பொது கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன. எனவே வேறுவேறு துறைகளில் படிப்புகளை வழங்குகின்றன. இந்த கூட்டமைப்பில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலையும் உண்டு. அப்பல்கலையின் கீழுள்ள 19 கல்லூரிகளில், 7 கல்லூரிகள் சிறப்பு மேலாண்மை படிப்புகளை வழங்குகின்றன. புனே பல்கலைக்கழகமானது, மேலாண்மை படிப்பிற்கு மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இதைத்தவிர மேலாண்மை மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான சாதனா மையமும் மேலாண்மை படிப்பிற்கு பெயர்பெற்றது. மேலும் அதே மாநிலத்தை சேர்ந்த நாக்பூரில் அமைந்த இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி(ஐ.எம்.டி) மற்றும் திரிபியூட் காலேஜ் ஆப் சோசியல் வொர்க் போன்றவையும் மேலாண்மை படிப்பிற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாகும். அருகிலுள்ள கோவா மாநிலத்தின் புகழ்பெற்ற கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், கேட் தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்கிறது. 

 எந்த பகுதியிலுள்ள கல்லூரியில் படிப்பது தங்களின் சூழலுக்கு ஏற்றது என்பதை மாணவர்கள் முடிவுசெய்து, அதற்கேற்ப அந்தந்த பகுதிகளில் சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து மேலாண்மை படிப்புகளை படிப்பது சுலப வெற்றிக்கு வழி வகுக்கும்.

நன்றி: கல்விமலர்