Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2013
S M T W T F S
« Feb   Apr »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,239 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் –http://passportindia.gov.in

இடதுபுறம் உள்ள “Locate Passport Seva Kendra” கிளிக் செய்து உங்களது பின்கோடை டைப் செய்து பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (டாடாவின் பாஸ்போர்ட் சேவை மையம்) தெரிந்து கொள்ளவும். அதே போல் உங்களது காவல் நிலையத்தையும் அறிந்து கொள்ளவும்.

கண்டிப்பாக அப்ளை செய்யும் ஒவ்வொருவரும் இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வலது புறம் மேல் பக்கம் Register / Login பயன்படுத்தி இந்த தளத்தில் உங்களது பயணர் (username) பெயர் மூலம் உள் நுழையவும்.

உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்ம் மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். இரண்டாவதை “Apply for Fresh Passport / Reissue of Passport” கிளிக் செய்யவும்

அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். ஃபார்மை டெளன்லோடு செய்து – பிரண்டு செய்து – பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம்.

அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.

அடுத்து வரும் புதிய பகுதியில் pp

முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தத்கால் (அவசரமாக – சில நாட்களில் – கூடுதல் கட்டணம்) வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.

அதன்பின் மற்ற பகுதி வரும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து கண்டிப்பாக நிரப்பி விடவும்.

  • Given Name : உங்களது பெயர்
  • Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
  • உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
    Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
  • Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
  • Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
  • Place of Birth: பிறந்த ஊர்
  • District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
  • Qualification: உங்களது படிப்பு (SSLC pass  என்றால் NOC அப்ளை செய்யலாம்)
  • Profession: தொழில்
  • Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
  • Height (cms): உயரம்
  • Present Address: தற்போதைய முகவரி
  • Permanent Address: நிரந்தர முகவரி
  • Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
  • Phone No: தொலைபேசி எண்
  • Mobile No : மொபையில் எண்
  • Email Address: இமெயில் முகவரி
  • Marital Status: திருமணமான தகவல்
  • Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
  • Father’s Name: தந்தை பெயர்
  • Mother’s Name: தாயார் பெயர்
  • தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
  • Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
  • Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Button ஐ கிளிக் செய்து செல்லவும்.

குடும்ப விவரங்கள், தற்போதைய முகவரி,முந்தைய முகவரி, அவரத்திற்கு தொடர்பு கொள்ள, உங்களை அடையாளம் காட்ட அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள், பழைய பாஸ்போர்ட் இருந்தால் அதன் வி்வரம் போன்றனவற்றையும் நிரப்ப வேண்டும்.

அதனையும் சேவ் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். அங்கே பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும்.

அதனையும் சேவ் செய்து பிரண்டு எடுத்துக் கொள்ளவும்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)

  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

  • 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும்  மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
  • மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
  • பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.

அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு ரிசப்ட் தருவர்கள். அவ்வளவு தான் உங்களது வேலை!

சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும். அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வரும்.

அக்டோபர் 2012 முதல் மாற்றப்பட்ட கட்டணம் விவரங்கள்: (36 பக்கங்களுக்கு)

  • புதிய மற்றும் புதுபிக்க :   1500 ரூ (சாதரணமான முறை)
  • காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
  • காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
  • 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
  • தத்கால் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு http://passportindia.gov.in

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். முயீனுத்தீன்

Article is published on May 11, 2011 and Edited & Modified on 27th March 2013