Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2017
S M T W T F S
« Oct   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 607 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்

    [கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில்  ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.

இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக அமைந்துள்ள மற்றுமொரு பிராந்தியத்திற்கு தங்களது கவனத்தை செலுத்துவது மிகுந்த பயன் தரும்.

இங்கு விஷேடமாக கவனிக்க வேண்டிய, ஆச்சரியமிக்க விடயம் என்னவெனில், ஐரோப்பாவில் ஏற்பட்ட ‘இருண்ட யுகமும்’ தென் ஐரோப்பாவிலும், கிழக்கிலும் மலர்ந்த ‘இஸ்லாமிய நாகரீகமும்’ ஒரே காலகட்டத்தில் உலகில் இரு பகுதிகளில் தோன்றியது என்பதே.

இஸ்லாத்தின் அடிப்படை வேத நூலாகிய திருக்குர்ஆன் அறிவை தேடும் விடயத்தை வேறு எந்த மதமும் வலியுறுத்தாத அளவு வற்புறுத்தி வந்தது. அறிவில்லாமல் மார்க்கமே இல்லை என்று அது கூறியது. அறிவுள்ளவனும் அறிவற்றவனும் சமமாவானா? என்றெல்லாம் கேள்வி கேட்டு திருக்குர்ஆன் அறியாமையை கேலி செய்தது. இறைவன் முதன் முதலில் படைத்ததே எழுதுகோளைத்தான் என்று கூறி அறிவைத் தேட ஆர்வமூட்டியது.

”அரபிகளின் ஆச்சரியமான விஞ்ஞான அறிவு, எமது அறியாமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில், ‘ஆச்சரியமிக்கது’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமளவிற்கு அசாத்திய அந்தஸ்த்தில் அன்று இருந்தது. இந்த சாதனை உலக சரித்திறத்தின் முன் உவமையற்ற ஒரு அபிவிருத்தியாகும்” என ஆங்கில வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் ஷார்டண் குறிப்பிடுகிறார்.]


ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த நாகரீகமாக கிரேக்க நாகரீகம் உலகில் திகழ்ந்தது. அரிஸ்டோட்டில், யூக்லீட், சொக்ரடீஸ், கிலென், டொலமி போன்ற சிந்தனையாளர்கள் கிரேக்கர்களே. இவர்கள் தத்துவம், கணிதம், புவியியள், வானசாஸ்திரம், மருத்துவம் போன்ற பல அறவியல் துறைகளுக்குச் செய்த பங்களிப்பு மிகப் பெருமதி வாய்ந்தது. இவைகளே நாம் இத்துறையில் இன்று காணும் முன்னற்றத்திற்கு வித்திட்டன என்றால் அது முற்றிலும் நிஜமே.

இதை தொடர்ந்து கிறிஸ்தவ மதம் தோன்றியதுடன் உலகிற்கு ஒரு முக்கிய மதத்தையும் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கி.மு மற்றும் கி.பி அடிப்படையிலான பஞ்சாங்கத்தையும் அது அறிமுகப்படுத்தியது.

இத்தருனத்தில் ரோமர்கள் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி கோத்திரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததுடன் அவர்களே இன்றை ஐரோப்பியர்களின் முன்னோர்களாவர். அதற்கு சில காலங்களுக்குப் பின் ரோம சாம்ராஜ்ஜியமும் அஸ்தமித்தது. அதை தொடர்ந்து 5ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ‘இருண்டயுகம்’ எனப் பிரபலமாகிய யுகம் ஆரம்பமாகி அது 15ம் நூற்றாண்டு வரை நீடித்தது. பிறகு கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடித்ததைத் தொடர்ந்து ‘மறுமலர்ச்சி யுகம்’ மலர்ந்தது.

ரோமர்களின் காலத்தை மெச்சியும், அறிவியள், விஞ்ஞானம் மற்றும் இலக்கிய துறைகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டியும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உலகிலுள்ள நூல் நிலையங்கள் இவ்வாரான விடயங்கள் எழுதப்பட்ட புத்தகங்களினால் நிரம்பி வழிகின்றன.


ஆனால், ரோமர்களுடைய யுகத்திற்கும் ‘மறுமலர்ச்சி யுகத்திற்கும்’ இடையே உள்ள சுமார் 10 நூற்றாண்டுகளைப் பற்றி ஏரத்தாழ எதுவுமே இல்லை என்று கூறும் அளவிற்கு தகவல்களைக் காண முடிவதில்லை. ஐரோப்பிய சரித்திரமோ கிறிஸ்தவம், ராஜவம்சங்கள், நிலச்சுவாந்தார்கள், போர்கள், புரட்சிகள் போன்ற விடயங்களைப் பற்றி சரித்திர சான்றுகள் முன்வைக்கும் அளவிட்கு அக்காலத்தில் விஞ்ஞானம் அல்லது அறிவியள் பற்றிய விடயங்கள் இருந்ததாக குறிப்பிடுவதை காண முடிவதில்லை.

கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறு மலர்ச்சியை’ கையில் ஏந்திய வன்னம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர். ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு வாதமும் முன்வைக்கப்படாத நிலையில் இடையில் ‘காணாமல்’ போயிருக்கும் இந்த 1000 ஆண்டுகளுடைய புதிர் மர்மமாகவே இருந்து வந்துள்ளதுடன் நியாயமான பல சந்தேகங்களையும் அது ஏற்படுத்தியவண்ணமுள்ளது.

இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக அமைந்துள்ள மற்றுமொரு பிராந்தியத்திற்கு தங்களது கவனத்தை செலுத்துவது மிகுந்த பயன் தரும்.


இங்கு விஷேடமாக கவனிக்க வேண்டிய, ஆச்சரியமிக்க விடயம் என்னவெனில், ஐரோப்பாவில் ஏற்பட்ட ‘இருண்ட யுகமும்’ தென் ஐரோப்பாவிலும், கிழக்கிலும் மலர்ந்த ‘இஸ்லாமிய நாகரீகமும்’ ஒரே காலகட்டத்தில் உலகில் இரு பகுதிகளில் தோன்றியது என்பதே.

கி.பி.622 ல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னாருடைய பிறந்த மன்னாகிய மக்காவில் உள்ள மக்களின் துன்புறுத்தல் தாள மாட்டாமல், மதீனா நகருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, மதீனா வந்த முஹம்மதை அங்குள்ள மக்கள் வரவேற்று அவரது போதனைகளுக்கும் செவி சாய்த்தன் மூலம் உலகில் முதலாவது இஸ்லாமிய அரசொன்று மதீனாவில் உருவானதுடன், இஸ்லாமிய நாகரீகமும் மலர ஆரம்பித்தது.

இவ்வாறு மலர்ந்த இஸ்லாமும் அதன் நாகரீகமும், கி.பி 750 அளவில் ஸ்பெய்ன் முதல் சீனா வரை உலகில் பல பகுதிகளுக்குப் பரவியிருந்தது. இஸ்லாம் தோன்றியதுடன் கல்வியை கற்க வேண்டும், அறிவை தேட வேண்டும், விஞ்ஞாக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் முன்பு என்றுமில்லாதவாரு மக்கள் மத்தியில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்லாயிற்று.

ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படை வேத நூலாகிய திருக்குர்ஆன் அறிவை தேடும் விடயத்தை வேறு எந்த மதமும் வலியுறுத்தாத அளவு வற்புறுத்தி வந்தது. அறிவில்லாமல் மார்க்கமே இல்லை என்று அது கூறியது. அறிவுள்ளவனும் அறிவற்றவனும் சமமாவானா? என்றெல்லாம் கேள்வி கேட்டு திருக் குர்ஆன் அறியாமையை கேலி செய்தது. இறைவன் முதன் முதலில் படைத்ததே எழுதுகோளைத்தான் என்று கூறி அறிவைத் தேட ஆர்வமூட்டியது. அறிவைத் தேடி சீனா தேசம் செல்வதையும் இஸ்லாம் வரவேற்றது.

அறிவை தெடும்படி ஆர்வமூட்டும் இஸ்லாத்தின் அழைப்பை புரிந்து கொண்ட முஸ்லிம்களும் அதைத் தேடி உலகின் எட்டு திசைகளுக்கும் சென்றனர். பலகலைக்கழகங்கள் உருவாகின. அறிவுக் கூடங்கள் தோன்றின. ஆய்வும் அறிவும் கவிதையும் இலக்கியமும் போட்டியிட்டபடி முஸ்லிம் நாகரீகத்தை மெருகேற்றியது.

அறிவின் முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் ஏனைய மக்களிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், தான் அறிந்தததை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் செய்றபாடுகளுடன் முன்னெடுத்துச் சென்றனர். அல்-பிரூனீ, அல்-கவாரிஸ்மீ, அல்-இத்ரீஸீ, அல்-கிந்தீ, இப்னு ஸீனா, அல்-ராஸீ, இப்னு கல்டூன், அல்-ஹாஸிpன், இப்னு அல்-ஹைதம், அல்-பஃராபீ, அல்-கஸ்ஸ்hலீ, அல்-ஜஸாரீ பொன்ற சிந்தனையாளர்கள் இஸ்லாமிய அறிவுத்துண்டுதலினால் உருவாகிய உலகப் புகழடைந்த பேரறிஞர்களில் சிலராவர்.இந்தியர்கள், சீனர்கள் மற்றும் ஆபிரிக்க இணத்தவர்கள் முஸ்லிம் சிந்தiனாயளர்களுடன் அதிகம் நெருங்கி செயற்பட்ட தேசத்தவராவர்.

இதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அல்லாத கிறிஸ்தவ, யூத அறிஞசர்கள் பலரும் முஸ்லிம் அறிஞசர்களால் பெரிதும் கண்ணியப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இஷாக் இப்னு ஹுனைன், ஹுனைன் இப்னு இஷாக் போன்ற கிறிஸ்தவ பேரறிஞசர்களையும், ஸாபியீன் வர்க்கத்தைச் சேர்ந்த தாபித் இப்ன குர்ரா போன்றவர்களையும், இஸ்லாமிய நாடாக ஸ்பெய்ன் திகழந்த காலத்தில் அங்கு வாழ்ந்த ஹஸதாய் இப்னு ஷப்ரூத் மற்றும் இப்னு மைமோன் போன்ற யூத இனத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களையும் விஷேடமாக குறிப்பிடலாம்.

இவைகளை நோக்கும் எவரும் உலகில் தோன்றிய நாகரீகங்களில் இஸ்லாமிய நாகரீகமே தங்களது ஆட்சியில் இருந்த பிற மத அறிஞர்களையும் சமமாக கண்ணியப்படுத்திய நாகரீகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.அரபிகள், பாரசீகர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள், குர்த்கள் போன்ற பல்லிண பல கலாசாரங்களுக்குச் சொந்தமானவர்கள், தங்களது மதக் கொள்கைகள் மாறுபட்டிருந்தபோதிலும் சுமுகமான நட்புறவோடும் பரஸ்பர கண்ணியத்தோடும் மருத்துவம், பொறியியள், கமம் போன்ற விடயங்களை பகிர்ந்துகொண்ட ஒப்பற்ற யுகமாக இஸ்லாமிய நாகரீகம் உயிர் பெற்றிருந்த யுகத்தை மட்டுமே குறிப்படலாம். இவ்வாரான அறிவின் கலவையின் காரணமாக அந்த யுகத்தில் மிகச்சிறந்த கலையம்சம் கொண்ட கட்டிடக்கலையும், ஏனைய கலைகளும், பிரம்மாண்டமான மருத்துவமணைகளும், நூலகங்களும், பல்கலைக்கழகங்களும், கலாசார மையங்களும், தேச மற்றும் உலக வரைப்படங்கள், வான் மற்றும் புவி சம்பந்தமான பல அரிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாயின.


அரபிகளின் ஆச்சரியமான விஞ்ஞான அறிவு, எமது அறியாமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில், ‘ஆச்சரியமிக்கது’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமளவிற்கு அசாத்திய அந்தஸ்த்தில் அன்று இருந்தது. இந்த சாதனை உலக சரித்திறத்தின் முன் உவமையற்ற ஒரு அபிவிருத்தியாகும்’ என இது பற்றி குறிப்பிடுகையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் ஷார்டண் கருத்துத் தெரிவித்தார்.

காலப்போக்கில் அரசியல் மற்றும் மத வேறுபாட்டுணர்வு மக்களிடையே மேலோங்க ஆரம்பித்ததுடன், மேதைகளும் விஞ்ஞானிகளும் கூட இக்காலகட்டத்தில் விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் உட்பட்ட பல அறிவியள் தொழில்நுட்பத் துறைகளுக்கு முஸ்லிம்கள் மேதைகளும் சிந்தiனாயளர்களும் அளித்த மாபெரும் பங்களிப்பை பற்றி வாளாதிருப்பதற்கு முனைந்தனர். மாறாக, ஐரோப்பா தான் ‘மறுமலர்ச்சி யுகத்தில்’ பெற்றுள்ள சகல ஞானங்களினதும் முன்னோடிகள் பண்டைய கிரேக்கர்கள்தான் என தம்முடைய சரித்திற நூல்களில் குறிப்பிட முற்பட்டனர்.

ஆனால் உலக அறிவியளுக்கு முஸ்லிமகள் செய்த பிரம்மாண்டமான பங்களிப்பிற்கான மற்றும் ஏராளமான இலக்கிய படைப்புகளுக்கான சான்றுகள், ஸ்பெயினில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த பகுpதிகளை, குறிப்பாக டொலீடோ போன்ற பகுதிகளை, 1085ல் மீண்டும் கைப்பற்றி, பின் அவ்வாக்கங்களை ஏனைய ஐரோப்பிய பாஷைகளுக்கு மொழிபெயர்க்கப்படபோது தெளிவாகின. அதைத்தெர்டர்ந்து, சிலுவை யுத்தத்தை நடுமையமாகக்கொண்ட இரு நூற்றாண்டுகள் பாரிய அழிவை சகலருக்கும் தந்து மனித நாகரீக மற்றும் மனித நேய விழுமியங்களை விகாரப்பபடுத்தியது.

இவைகளை நோக்கும்போது ‘இருண்ட யுகம’ என வர்ணிக்கப்படும் யுகம், உண்மையில் இவர்கள் கூறுமளவு இருண்டது தானா? அல்லது உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அளித்த மாபெரும் பங்களிப்பின் சான்றுகளை சரித்திற ஏடுகில் தெளிவற்றதாக ஆக்கும் தீய நோக்குடன் திரிக்கப்பட்ட ஒரு நியாயமற்ற ஒரு கற்பனையா? என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.

மாமேதை விக்கன்ஸ் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்:

‘உலக விஞ்ஞானம் பாரிய அளவு முஸ்லிம் நாகரீகத்தில் இருந்து அறிவை இரவல் வாங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
அரேபிய எண்கள் இல்லாவிட்டால் நாம் இன்று மேற்கொள்ளும் கணிதக் கணிப்பீடுகள் எதுவும் சாத்தியமாகியிருக்காது.
மேலும் விவசாய முன்னேற்றங்கள்,
கால் நடை வளர்ப்பு மற்றும் அவைகளை உணவுக்காக பயன் படுத்தும் செயல்முறைகள்,
துணி வகைகளும்,
போக்குவரத்தும்,
நெசவு மற்றும் பின்னுதல்,
கட்டிடடம் கட்டுதல்,
நீர்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு,
நீர் சக்கரங்கள் மற்றும் காற்றாடி இயந்திரங்கள்,
உலோகங்களினால் பொருட்களை செய்தல்,
மேலும் அதனடிப்படையிலான ஆயுத உற்பத்தி, கப்பலோட்டுதல்,
வான சாஸ்திரம்,
கடிகாரங்கள்,
நாணயம் தயாரித்தல்,
காகிதம்,
எழுத்து,
குறிப்பேடுகள் வைத்தல்,
சட்டம்,
சமூகக் கட்டமைப்பு,
தத்துவரீதியாக சிந்திப்பது முதற்கொண்டு மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் போன்ற எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகளின் கண்டுபிடிப்பில் மேறகத்தைய நாடுகளுக்கு எந்த பங்குமிருப்பதாகத் தெரியவில்லை.

source: https://www.facebook.com/abudul.muhtalifa/posts/588174931544419

 

1 comment to இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்

  • 640524 300884Thank you for writing this tremendous top quality article. The information in this material confirms my point of view and you genuinely laid it out effectively. I could never have written an write-up this great. 415620

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>