Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,318 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை

“பாய்! நீங்க சில்லரை வாங்கிட்டீங்களா?” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன. “மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி?” “யாருடா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,216 முறை படிக்கப்பட்டுள்ளது!

புதையல்! – சிறுகதை

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,060 முறை படிக்கப்பட்டுள்ளது!

கஞ்சத்தனம் – சிறுகதை

ஒரு ஊரில் ஈரோட்டு ஜமுக்காளத்தில் வடி கட்டிய கஞ்சன் ஒருவன் இருந்தான். இவனது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் இருந்து கணிசமான வருமானம் வந்தும், அவற்றில் இருந்து செலவு செய்து தனது சொந்தத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள மாட்டான். இல்லாதோர்க்கு ஈய மாட்டான். இவனது இந்த கருமித்தனம் ஊர் அறிந்த கதை. இவனது கஞ்சத்தனம், இமயமலையின் கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு ஈடானதாக இருந்தது.

தன்னிடம் இருக்கும் பணத்தை ஒரு மண் கலயத்தில் போட்டு பூமியில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,107 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்போதும் நல்லதையே பேசுங்கள்! சிறுகதை

ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன்இ தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,790 முறை படிக்கப்பட்டுள்ளது!

குறை – சிறுவர் கதை

தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.

முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “”இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!” என்று குறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,870 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமை தவறாத போலீஸ்காரர் – சிறுகதை

‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,556 முறை படிக்கப்பட்டுள்ளது!

நட்பு சாவதில்லை! சிறுகதை

அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி. ‘ஒண்ணுமில்ல.” ‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?” ‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!” ‘ஏன்?” ‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன். ‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகணும்; லீவு கிடையாது.” ‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்.” ‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,584 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிதிவண்டி – சிறுகதை

மணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.

இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,202 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு தாய் சொன்ன உண்மைக் கதை!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் …அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,874 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதையல்ல நிஜம்!

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு . “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.

ஏன் என்னவாம் …?

இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் “இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”…? நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…!

இங்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,608 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு! தென் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,082 முறை படிக்கப்பட்டுள்ளது!

“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா

அதோ! உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார்! திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்!!

அவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான்! – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற . . . → தொடர்ந்து படிக்க..