Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2006
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,319 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலக்கல் கண்டுபிடிப்புகள்

எம்.பி.3 கண்ணாடிகள்

எம்.பி.3 எனப்படும் இசை வடிவம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். கை அகல குறுந்தகட்டில் நூற்றுக்கணக் கான பாடல்கள், இசை மெட்டுகளை பதிவு செய்யும் வசதி கொண்டது. எம்.பி.3 (இத்தகைய எம்.பி.3 குறுந்தகடுகள் வந்த பிறகு ஆடியோ கேசட்டுகள் மற்றும் டேப்ரிக்கார்டர்கள் காணாமல் போய் விட்டன) எம்.பி.3 குறுந்த கடுகளை இயக்க ஒரு ‘பிளேயர்’ தேவைப்படும். வாக்மேன் கருவிகளில் கூட எம்.பி.3 தகடுகளை பயன்படுத்தும் கண்டு பிடிப்புகள் கூட வந்து விட்டன.

இதில் நவீன தயாரிப்பு தான் எம்.பி.3 சன் கிளாஸ் (ஆP3 ளுரn புடயளள) அதாவது நாம் வெயில் காலத்தில் அணிந்து கொள்ளும் குளிர் கண்ணாடிகளில் எம்.பி.3 இசையை கேட்கும் வசதியை பொருத்தி இருக்கிறார்கள். எம்.பி.3 கண்ணாடியில் எம்.பி.3 பாடல்களை பதிவு செய்யும் கம்ப்யூட்டர் ‘சிப்’ (நினைவு பெட்டகம்) அதை இயக்குவதற்கான பேட்டரிகள், காதில் பொருத்திக் கொள்ளும் இயர் போன்கள் போன்றவை இருக்கும். இந்த கண்ணாடியில் உள்ள (கம்ப்யூட்டர்) நினைவுப் பெட்டகத்தில் இருந்து பிற கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ள இணைப்பு வசதியும் உண்டு.

அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் எம்.பி.3 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தால், அதை வயர் இணைப்பு (U.S.B. Jack) மூலம் எம்.பி.3 கண்ணாடியில் உள்ள நினைவுப் பெட்டகத்தில் பதிவு செய்யலாம். பின்னர் ‘பட்டனை’ அழுத்தியதும் இயர்போன் வழியாக இசை அருவி பாயும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், மலை ஏறுபவர்கள், பைக் மற்றும் கார் பந்தய வீரர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது குளிர் கண்ணாடிகள் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது. அவர்கள் இசை கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய எம்.பி.3 கண்ணாடிகள் உதவுகின்றன.

குறிப்பாக பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரர் – வீராங்கனைகளுக்கு இந்த எம்.பி.3 கண்ணாடி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். பொதுவாக பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் பதட்டமும் பரபரப்பும் நிறைந்து இருப்பார்கள். அவர்களை அமைதிப்படுத்தி முழுத் திறமையை வெளிப்படுத்த இசை உதவுகிறது. எனவே எம்.பி.3 கண்ணாடி அணிந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அதிக அளவு திறமையை வெளிப்படுத்த முடிகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எம்.பி.3 கண்ணாடியில் சுமார் 6 மணி நேரம் இசை-பாடல்களை பதிவு செய்யும் திறன் கொண்ட நினைவுப் பெட்டகங்கள் உள்ளன. 128 எம்.பி. அல்லது 256 எம்.பி. கொள்ளளவு கொண்ட ‘சிப்’புகள் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் கிடைக்கின்றன. ஒக்லே நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கண்ணாடி ஒன்றின் விலை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.23 ஆயிரம் ஆகும். வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த எம்.பி.3 கண்ணாடிகள் விற்பனைக்கு வருகின்றன.

பாதி டி.வி. – பாதி கம்ப்யூட்டர்

மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவையாக சில மனிதர்கள் இருப்பதுண்டு. படத்தில் நீங்கள் பார்க்கும் கம்ப்யூட்டரும் அப்படிப்பட்ட ரகம்தான். அதாவது பாதி கம்ப்யூட்டர்-பாதி டெலிவிஷன். சோனி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கம்ப்யூட்டரில் (இதன் பெயர் வயோ விஜிடெக்ஸ் எக்ஸ் 90 பி -ஏயழை ஏநஒ-ஒ90P என்பதாகும்). டெலி விஷன் மற்றும் கேபிள் இணைப்பை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை பார்க்க லாம். நாம் முன் கூட்டியே கட்டளையிட்டால் நாம் விரும்பும் சேனல் நிகழ்ச்சிகளை இது பதிவு செய்தும் வைக்கும்.

உதாரணமாக ‘மெட்டி ஒலி’ நேரத்தில் முக்கியமான வேலை இருந்தால்… இந்த கம்ப்யூட்டரில், ‘ஹலோ கம்ப்யூட்டர் நமக்கு கொஞ்சம் முக்கியமான ஜோலி இருக்கு. அதனால மெட்டிஒலி புரோகிராமை பதிவு செஞ்சுடு’, அப்படின்னு உத்தரவு போட்டா போதும். கம்ப்யூட்டர் நீங்க சொன்னபடி கரெக்டா அந்த நிகழ்ச்சியை பதிவு செஞ்சி வச்சிடும்.

இது மாதிரி ஒரு புரோகிராம் மட்டுமல்ல ஒரே நேரத்தில 7 சேனல்களில் வர்ற நிகழ்ச்சியை பதிவு செய்யும். மேலும் 5 நாள் முழுவதும் ஒளிபரப்பாகும் மொத்த நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் அளவுக்கு இதில் சக்திவாய்ந்த ‘மெமரி’ (பதிவு பெட்டகம்) இருக்கு. ஜப்பான் நாட்டில் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும். இந்த பாதி கம்ப்யூட்டர் – பாதி டெலிவிஷன் கருவியின் விலை. 4 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்.

படம் பார்க்கலாம்

‘போட்டோ புடிச்சா ஆயுசு குறைஞ்சு போயிடும்’ என்று கிராமத்து மக்கள் அப்பாவியாய் சொல்வதை கேட்டிருக்கலாம். ஆனால் இன்று புகைப்படம் எடுப்பதும் வீடியோ படம் பிடிப்பதும் சகஜமாகி விட்டது.

மனம் விரும்பும் நிகழ்ச்சிகளை, சந்தோஷம் தரும் தருணங்களை படம் பிடித்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ‘பிலிம்’ களை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது ‘அதிக செலவு பிடிக்கும்’ வகையில் இருந்தது. இப்போது ‘பிலிம்’களுக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டு டிஜிட்டல் கேமிராக்கள் புயலாய் புகுந்து விட்டன.

கைக்கு அடக்கமான தோற்றம், நாம் எடுக்கும் படங்களை உடனுக்குடன் திரையில் சரி பார்த்துக் கொள்ளும் வசதி, நாம் எடுத்த படம் நன்றாக வரவில்லை என்றால் அதை அழித்து விட்டு வேறு படம் எடுக்கும் வசதியும் ‘டிஜிட்டல் கேமிரா’க்களில் இருக்கிறது. இந்த கேமிராக்களில் எடுக்கும் படங்களை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்க முடியும். சில நேரங்களில் சுற்றுலா செல்லும் போது கம்ப்யூட்டரை எடுத்துச் செல்ல முடியாது. அது போன்ற நேரத்தில் டிஜிட்டல் கேமிராக்களில் எடுக்கும் படங்களை சேமித்து வைக்க உதவும் கருவி தான் ‘போர்டபிள் போட்டோ வியூவர்’.

ஜப்பான் நாட்டில் உள்ள சீகோ எப்சன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவி கைக்கு அடக்கமானது. இதில் 40 ஜி.பி. கொள்ளளவு கொண்ட நினைவுப் பெட்டகம் உள்ளது. 3.8 அங்குலம் அகலம் கொண்ட திரையும் இதில் உண்டு.

டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்படும் படங்களை வயர் இணைப்பு மூலம் ‘போர்டபிள் போட்டோ வியூவர்’ கருவிக்கு மாற்றிக் கொள்ளலாம். இதில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் படங்களை பதிவு செய்து வைக்க முடியும். இது தவிர இந்த கருவியில் ‘வீடியோ’ படங்களை திரையிட்டு பார்க்கலாம். ‘ஆடியோ’ (இசை) கேட்கலாம். மேலும் இந்த கருவியை டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்க முடியும். இதில் பதிவு செய்துள்ள படங்களை ‘பிரிண்ட்’ எடுக்கவும் செய்யலாம். பல வசதிகளைக் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.22 ஆயிரத்து 500 முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

அதிநவீன யுத்த விமானம்

‘பெரிய அண்ணாச்சி’க்கு எப்பவும் எதிலேயும் நாமதான் முதல்ல இருக்கணும்னு ஆசை உண்டு. (அதாங்க அமெரிக்காவுக்கு தான் பெரிய அண்ணாச்சின்னு (பிக் பிரதர் ) ஒரு பட்டப்பேரு உண்டு)

குறிப்பா சொல்லணும்னா ராணுவ ஆயுதங்கள் சமாச்சாரத்தில நம்பள அடிச்சுக்க வேற ஆளே இருக்க கூடாதுங்கிறது அமெரிக்காவோட எண்ணம். அதனால போட்டி போட்டு எக்கச்சக்கமா செலவு பண்ணி நவீனமான ஆயுதங்கள், விமானங்கள் தயார் பண்றாங்க.

அமெரிக்கா தயார் செஞ்ச புதிய ரக போர் விமானம் தான் எப்ஃஏ-22 ராப்டர் (குஃயு-22 சுயிவழச). ஜெட் போர் விமானங்களிலேயே இதுதான் அதி நவீனமான தாம். 23 வருஷ ஆராய்ச்சியில இந்த ‘ராப்டர்’ சண்டை விமானத்தை உருவாக்கி இருக்காங்க. ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கிற விமானப்படை தளத்தில இந்த ராப்டர் விமானத்தை தயாரிச்சிருக்காங்க. இந்த விமானத்தை தயாரிக்க ஆரம்பிச்சப்பவே ஏகப்பட்ட குளறுபடிகள், தடைகள், அரசியல் குறுக்கீடுகள் வந்துச்சு. ஏகப்பட்ட கோடி ரூபா செலவு செஞ்சு ஒரு விமானத்தை தயாரிக்கணுமா?ன்னு ஏகப்பட்ட நெருக்கடி கிளம்பிச்சு.

இதையெல்லாம் சமாளிச்சு ஒரு வழியா ராப்டர் விமானம் தயாராயிடுச்சி. அமெரிக்காவில் இருக்க கூடிய 43 மாகாணங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டிராக்டர்கள் துணையோட விமானம் தயாராயிருக்கு. இந்த விமானம் மணிக்கு 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அம்மாடியோவ் என்ன இது மின்னல் கணக்கா விமானம் பறக்குதா?ன்னு ஆச்சரியப்பட வேணாம். இன்னும் நிறைய வாயைப் பிளக்கிற சமாச்சாரங்க இந்த விமானத்தில் இருக்கு.

ராப்டர் விமானம் வானத்தில் பறக்கிறதை ‘ரேடார்’ கருவியில கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டமாம். அதோடு எதிரி விமானிங்க பார்வையிட படாம சர் சர்ன்னு வேகமாக போயிடுமாம். அதை யும் மீறி எதிரி விமானம் ராப்டர் விமானத்தை சுட நினைச்சாலும் அது நடக்காது. ஏன்னா குறிபார்த்து சுடறதுக்குள்ள ராப்டர் விமானம் பலநூறு கிலோ மீட்டர் தூரம் கடந்து இருக்கும்.

அதேபோல விமானத்தின் வெப்பத்தை மோப்பம் பிடிச்சு பின்னாலே வந்து தாக்க கூடிய ஏவுகணையை விட்டாக்கூட இந்த ராப்டர் விமானம் அதை ஏமாத்திட்டு தப்பிச்சுடுமாம்.

இப்படி ஏகப்பட்ட பிரம்மிப்புள்ள இந்த ராப்டர் விமானம் ஒண்ணோட விலை என்ன தெரியுமா?

ஆயிரத்து நூத்தி அறுபத்தி ஒரு கோடி ரூபாய்.

இந்த விலைக்கு மொத்தம் 277 ராப்டர் விமானங்களை அமெரிக்க விமானப் படைக்கு வாங்கப்போறாங்களாம். ஒரு விமானம் 1,161 கோடி ரூபாய்னா 277 விமானம் என்ன விலையாகும்னு கணக்கு போட்டுக்கோங்கோ.

தகவல் தொகுப்பு : எம்.ஜே.எம். இக்பால், துபாய்