Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2006
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,340 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் விமானங்கள்

விமானப்பயணம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதிகமான கட்டணம் காரணமாக விமானப்பயணம் என்பது சாமானியருக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ‘விலை குறைப்பு’ நடவடிக்கை மூலம் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு நடுத்தர மற்றும் சாதாரண வர்க்கத்தினருக்கும் கிடைத்துள்ளது.

விமானப் பயணம் ஒரு சிலருக்கு திகில் நிறைந்ததாகவே இருக்கிறது. நடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகுமோ? என்ற மனபயம் காரணமாக விமானத்தில் ஏற மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் விமானப்பயணம் சொகுசு நிறைந்தாலும் அவ்வப்போது நடைபெறும் சில விபத்துகளால் பாதுகாப்பான விமானப்பயணம் பற்றிய ஆய்வுகள் தீவிரம் அடைந்து வருகின்றன.

இந்த ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைத்துள்ளவை தான் ‘சூப்பர் விமானங்கள்’ இன்னும் சில ஆண்டுகளில் விண்ணில் சாகசம் நிகழ்த்தப் போகும் இந்த சூப்பர் விமானங்கள் பற்றிய தகவல்களை இந்த இதழில் காண்போம்.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,’ என்று கவிஞர் எளிதாக பாடிவிட்டார். ஆனால் இந்த அலுமினியப் பறவையை உருவாக்குவதற்கு மேற்கொண்ட தியாகங்கள் பல உண்டு.

ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கி பறக்க முயற்சி செய்தபோது, ‘இவன் பறக்கப் போகிறானாம்’ என்று கிண்டலாக பலர் பேசினார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது முயற்சியில் தீவிரம் காட்டி விமானத்தில் பறந்த போது விமானம் செய்தவர்கள் வாயடைத்து அதிசயித்து போனார்கள்.

விமானம் பறக்க ஆரம்பித்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த கால கட்டத்தில் விமானங்களின் வடிவம் செயல்பாடுகள் பலவாறாக மாறிவிட்டது. மனிதனின் ஆராய்ச்சியின் பலனாக இன்று பல புதிய ரக விமானங்கள் கம்பீரமாக விண் வெளியை ஆண்டு கொண்டிருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது நடைபெறும் சில விபத்துக்கள் மக்கள் மனதில் விமான பயணம் பற்றிய பயத்தை உருவாக்கி விடுகிறது.

இந்த பயத்தை போக்கும் வகையில் விபத்தில் சிக்காத வகையில் அதாவது நடுவானில் பறக்கும் போது எந்த கோளாறும் ஏற்படாத வகையில் நவீன விமானங்களை உருவாக்கும் ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன. அதி நவீன தொழில் நுட்பம், சக்தி வாய்ந்த துல்லியமான கம்ப்யூட்டர் கருவிகள், அதிவேகம் எரிபொருள் சிக்கனம், குறைவான இரைச்சல் போன்ற அம்சங்கள் நிறைந்ததாக சூப்பர் விமானங்கள் தயாராகி வருகின்றன.

அதில் ஒன்று தான் ‘எலாஸ்டிக் விங்’ எனப்படும் வளையும் தன்மை கொண்ட இறக்கை பொருத்தப்பட்ட விமானம். அது பற்றி காண்போம்.

எலாஸ்டிக் இறக்கை

வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் சில நேரங்களில் ‘ஹேங்’  ஆகி விடுவதுண்டு. அதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் (சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர்) கோளாறு காரணமாக கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பித்து விடும். இது போன்ற நேரங்களில் அந்த கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் எனப்படும், மீண்டும் இயக்கும் முறை மூலம் இயக்க வைப்போம். இது சாதாரணமாக கம்ப்யூட்டர்களில் ஏற்படும் கோளாறுகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது ஒரு விமானத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டரில் இது போன்ற கோளாறு ஏற்பட்டால் என்ன ஆகும்? விமானம் நிலை குலைந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகும். இது போன்ற ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாத வகையில் விமானங்களை தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

விமானங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற ‘போயிங்’ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ ஆகியவை இணைந்து இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தின. இந்த ஆய்வுக்காக அமெரிக்க ராணுவத்தின் எப்ஃஏ18 ரக போர் விமானத்தை எடுத்துக் கொண்டனர். இந்த விமானத்தின் கம்ப்யூட்டர் கருவிகள், இறக்கை அமைப்புகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்து சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ‘வானூர்தி பொருள் மீள்மையியல் இறக்கைத் திட்டம்  என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் விமான இறக்கை வடிவமைப்பில் இருந்து வரும் தொழில் நுட்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளனர்.

சாதாரணமாக விமானங்கள் பறக்கும் போது இடது அல்லது வலது புறமாக திரும்ப வாலிற்கு  மற்றும் ‘பிளாப்ஸ்’  போன்ற கட்டுப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை விமானத்தின் இறக்கையின் முன் மற்றும் தொடர் முனைகளில்  பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கட்டுப்பாடு சாதனங்கள் மேலும், கீழும் இயக்கப்பட்டு இதன் மூலம் மாறுபடும் இறக்கையின் தூக்கு விசையினால்  விமானம் இடமாகவோ, வலமாகவோ திரும்புகிறது.

ஆனால் புதிய ‘எலாஸ்டிக் இறக்கை’ முறையில் விமானியின் (கம்ப்யூட்டர்) கட்டளைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை  கொண்ட இறக்கைகள் இடது_வலது என வளைந்து கொள்ளும். இதன் காரணமாக விமான இறக்கைகளில் வாலிறகு மற்றும் ‘பிளாப்ஸ்’ பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் வளையும் தன்மை கொண்ட இறக்கை மூலம் விமானத்தின் மொத்த எடையில் கணிசமான பகுதி குறைகிறது. விமானத்தின் எடை குறைய குறைய எரிபொருள் செலவும் குறைகிறது.

உதாரணமாக ஒரு ஜாம்போ ஜெட் விமானத்தின் மொத்த எடையில் 10 சதவிகிதம் குறைத்தால் அந்த விமானத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் எரிபொருள் செலவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மிச்சமாகும்.

‘எலாஸ்டிக் இறக்கை’ திட்டத்தின் ஆய்வுப் பணிகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட சோதனைகள் கடந்த வருடம் நடந்தது. இதில் விமானத்தை கட்டுப்படுத்துவதற்கு இறக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இறக்கையில் ஸ்டிரெயின் காஜ்  பயன்படுத்தி அதன் இயக்கங்களை கண்காணித்தனர்.

எலாஸ்டிக் இறக்கைகள் பொருத்தப்பட்ட எப்ஃஏ18 விமானங்களின் இயக்க சோதனை விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சோதனை தொடங்கும் முன்பு ‘கம்ப்யூட்டர் மூலம் விமானத்தை கட்டுப்படுத்தும் முறை’யின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானிக்கு எந்த ஒரு பயமும் இன்றி விமானத்தை இயக்கும் ஆர்வம் ஏற்படும்.

எப்ஃஏ18 விமானத்தில் மோட்ட ரோலா 68040 ரக சி.பி.யு. பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் சி.பி.யு.க்கள் ஒருங்கிணைந்து விமானத்தின் இயக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும். ஒரு வேளை கம்ப்யூட்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானிக்கு அது உடனே தெரிவிக்கப்படும். இதையடுத்து அவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இயக்கும் வசதிகளும் பொருத் தப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால்,துபாய்.
விமானத்தில் பேஷன் ஷோ

எதையும் புதுமையாக செய்ய வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் உள்ளவன் மனிதன். அவனது புதுமையான தேடலின் வடிவம் தான் இங்குள்ள படம். வண்ண ஒளி விளக்குகளின் மத்தியில் பேஷன் ஷோக்களை நடத்தியவர்களுக்கு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. இதைத்தொடர்ந்து பறக்கும் விமானத்தில் பேஷன் ஷோ ஒன்றை நடத்தினார்கள். இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு ஜகார்த்தா – பாலி இடையே பறந்த பயணிகள் விமானத்தில் ஒரு பேஷன் ஷோ நடத்தி கலக்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாடல் அழகிகள் விதவிதமான உடை அணிந்து வந்து பயணிகளை கவர்ந்தனர்.