Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2006
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,473 முறை படிக்கப்பட்டுள்ளது!

கம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’, என்பார்கள். ஒரு புறம் அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளால் மனித ஆயுட்காலம் நீடித்துக்கொண்டிருந்தாலும் மறுபுறம் புதுப்புது நோய்கள் மனித இனத்தை தாக்கிக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணங்கள் 1) சுற்றுப்புற சூழல் மாற்றங்கள், 2) உணவு பழக்க வழக்கங்கள் போன்றவைமிக முக்கியமானதாகும்.

சாதாரணமாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுகிறோம். அப்போது கொடுக்கப்படும் ஊசி, மருந்துகள், மாத்திரைகள் நமது உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் சென்றடைகிறதா? என்றால் ‘ஓரளவு மட்டுமே’ என்பது தான் பதிலாக கிடைக்கிறது. வீரியம் மிக்க மருந்துகள் சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. சிலருக்கு ஊசி, மாத்திரைகள் என்றால் முகம் சுளிப்பதுண்டு. சிலருக்கு சில ஊசி, மருந்துகள் ‘அலர்ஜி’ யாகவும் இருக்கும்.

இருதய நோய், புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள்….என்று பலவிதமான ஆபத்தான நோய்களுக்கும் நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஊசி போடாமல் மாத்திரை சாப்பிடாமல் சிகிச்சை பெறும் அதி நவீன சிகிச்சை முறைகளும், மருத்துவ விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விவரங்களை இந்த வாரம் காண்போம்.

கம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்

கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய மாயக்கருவி இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ தொழில்நுட்பத்திலும், நவீன மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதிலும் கம்ப்யூட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. தீவிரமான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவானது தான்- ‘மருந்துகள் சாப்பிடாமல், ஊசி போடாமல் கம்ப்யூட்டர் சிப் மூலம் பெறும் அதிநவீன சிகிச்சைகள்’.

மருந்துக் கடையில் உள்ள ஏராளமான மருந்துகளை பார்க்கும் போது அடேங்கப்பா இத்தனை மருந்துகள் இருக்கிறதா? என்று நாம் வியப்படையலாம். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் ஓ! இத்தனை வியாதிகள் மனிதனுக்கு இருக்கிறதா? என்பது புரியும்.

பிறந்த உடன் நோய்களை தடுக்க ‘தடுப்பூசி’. நோய் வந்தால் அதற்கு சிகிச்சைகள் என்று ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை மருந்து மாத்திரைகளை நம்பியே காலம் தள்ள வேண்டியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களின் அந்தஸ்த்துக்கு இணையாக ஆஸ்பத்திரிகள் ‘அழகு’டன் காட்சி அளிக்கின்றன.

எந்த ஒரு நோய்க்கும் ஏகப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், ‘ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்களின் ஆலோசனைகள்…..என்று மருத்துவத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக, அதிக செலவு பிடிப்பதாக மாறிவிட்டது.

சுற்றுப்புற சூழல் பாதிப்பு, தவறான உணவு பழக்க வழக்கம், அதிவேகமான வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பில் கடும் போட்டி, போன்றவை காரணமாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் கடுமையாகிக் கொண்டே போகிறது. என்ன தான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் நோய்க்கிருமிகள் முன்னைவிட அதிக பலம் பெற்று வந்து மீண்டும் மீண்டும் தாக்குகின்றன.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மனிதனின் நோயைத் தீர்க்கும் மருந்துக் கலவைகளைத் தயாரிக்க மிகுந்த சிரமப்படுகின்றன. தற்போது சிகிச்சைக்காக உடலுக்குள் செலுத்தப்படும் மருந்துகள் ஓரளவே திறன் வாய்ந்ததாகவும், சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக நீரிழிவு நோயைச் சொல்லலாம். பெரும்பாலும் இந்த நோய் நடுத்தர வயதினரை தாக்க ஆரம்பித்து முதிய வயது வரை தொடருகிறது. இந்த நோய் வந்தவர்கள் தொடர்ந்து சாப்பிடும் மருந்து மாத்திரைகள் மூலம் ரத்தக் குழாய் சேதம் அடையும் ஆபத்தும் உள்ளது. இந்த பதிப்பு தொடரும்போது நோயாளிகள் பார்வை இழப்பு, புண் ஏற்பட்ட கால் பகுதியை வெட்டி எடுப்பது போன்ற மோசமான பாதிப்புக்களுக்கும் ஆளாகிறார்கள்.

பொதுவாக, நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மனித ஜீனோம்களில் இருந்து மிக நுட்பம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புரதம் (புரோட்டீன்) கண்டறிதல் மூலம் அமைகிறது. இந்த புரதங்களை நோயாளி உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள அமிலங்களால் இவை கரைந்து விடுகின்றன. (அல்லது ஊசியின் மூலம்) செலுத்தப்படும் பொழுது புரதங்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ரதத்தத்தில் கலக்கும் மருந்துகள் ஈரல் மூலம் வடிகட்டபடுவதால் அவற்றின் திறன்கள் குறைகின்றன.

இந்த பிரச்சினைகளை போக்குவதற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், ஜீன் ஆய்வாளர்கள் மின் பொறியாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து ‘புதிய மருந்து செலுத்துகை முறை’ (Drug Delivery System) ஒன்றை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன்படி மின்னணு மற்றும் பகுதி கடத்திகள்  மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இந்தசிகிச்சை முறைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். இந்த புதிய முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு உடலின் எந்தப் பாகத்திற்கு செல்ல வேண்டும்’ போன்ற நுண்ணறிவு தேவைப் படுகிறது. மேலும் இந்த நுட்பமான பணியை மேற்கொள்வதற்கு பகுதி கடத்திகள் (செமி கண்டக்டர்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இரண்டு புதிய முறைகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அவை 1) ‘நுண் சில்’களை (Micr chips) உடலில் பொருத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை 2) நேனோ மீட்டர் அளவு கொண்ட பகுதி கடத்திகளால் (Nanometer-Scale beads of Semi-Conductors) ஆன ஊசிகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறை.

இனி இந்த மருத்துவ சிகிச்சை முறைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை காண்போம்.

நீடித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை மாதம் அல்லது வருடம் முழுவதும் உட்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள். உதாரணமாக முதிர்ந்த நிலை நீரிழிவு நோய், இருதய நோய் போன்றவை பெரும்பாலும் வயதானவர்களேயே தாக்குகிறது. இதுபோன்ற நீடித்த நோய்களுக்கு இந்த ‘கெட்டிக்கார’ மருந்து செலுத்துகை மூலம் சிகிச்சை அளிக்க முயன்று வருகிறார்கள்.

நுண்சில்களை அடிப்படையாகக் கொண்டு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த மருத்துவ முறைக்கு ‘உயிரியல் நுண் மின்னணு எந்திர முறையை என்று பெயரிட்டுள்ளனர். இதை சுருக்கமாக ‘பயோ மெம்ஸ் (டீழை ஆநஅள) எனவும் அழைக்கின்றனர்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மருந்தை நிர்வகிப்பது மட்டுமின்றி இதன் ‘உணரி’கள்  மூலம் நோயாளிகளுக்கு அடுத்த ‘டோஸ்’ எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது.

பயோ மெம்ஸ் முறைகள் தற்போது ஆராய்ச்சிக் கட்டத்திலேயே உள்ளன. சில நிறுவனங்கள் இம்முறைகளைக் கொண்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பெட்போர்டில் உள்ள மைக்ரோ சிப்ஸ் நிறுவனம் 15 மில்லி மீட்டர் அளவே உள்ள சிலிக்கான் நுண்சில்களை  தயாரித்து வருகின்றன. இவைகள் நுண் தொகுச் சுற்று (ஐவெநபசயவநன ஊசைஉரவை) தயாரிக்க பயன்படும் தொழில் நுட்ப முறைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நுண்சில்களில் மருந்து அடைக்கப்பட்ட 100 நுண்ணிய சேமிப்பு அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையும் பிளாட்டினம் மற்றும் டைட்டானியத்தால் ஆன மெல்லிய அடுக்குகளால் மூடப்பட்டு இருக்கும். அத்துடன் இவை அனைத்தும் ஒரு மின்சுற்று வலையமைப்பில்  இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒவ்வொரு அறையின் மூடிக்கும் தனித்தனி முகவரிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதற்குரிய முகவரியில் 4 வோல்ட் மின் சக்தி கொடுத்தால் அதன் அடுக்கு திறந்து அதனுள் இருக்கும் மருந்து வெளியேறும். இதில் விசேஷம் என்னவென்றால் இவை அனைத்தையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம்.

டைட்டானியம் அறைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பயோ மெம்ஸ் சாதனம் ஒரு பாக்கெட் கடிகாரம் அளவே இருக்கும். இது ஒரு மின்கலம் ஒரு கம்பியில்லா தொலைவு இயக்க சில்  மற்றும் ஒரு நுண்முறை வழியாக்கி (micro processor) இவைகளை கொண்டிருக்கும்.

இந்த நுண் சில்லின் செயல்பாட்டை அறிவதற்காக இவற்றை விலங்குகளுக்கு பொருத்தி சோதனைகள் நடந்து வருகிறது. விலங்குகளில் முதுகு பகுதியில் இந்த சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த சாதனம் பொருத்தப்பட்ட விலங்குக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் இதன் அருகே சென்று ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பட்டனை தட்டினால் போதும் மருந்து செலுத்தப்பட்டு விடும்.

மற்றொரு நிறுவனமான சிப் ஆர் எக்ஸ் (Chip Rx Inc) பயோ மெம்ஸ் முறையை அடிப்படையாக கொண்டு மருந்து செலுத்துகை முறையை தயாரித்து வருகிறது. தீக்குச்சி அளவே உள்ள இச்சாதனம் உடலில் பொருத்தப்பட்டு மின்சாரம் மூலம் இயக் கப்படுகிறது.

அதி நவீனமான இந்த பயோ மெம்ஸ் முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அதாவது (1) மனிதனின் உடலுக்குள் செலுத்தப்படும் இந்த சாதனம் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் துல்லியமாக மருந்தைச் செலுத்தும் அளவு உருவாக்கப்பட வேண்டும். (2) சிகிச்சை காலம் முடிந்ததும் அல்லது இந்த சாதனத்தில் உள்ள மருந்து காலியானதும் அதை எடுத்து விட்டு தேவைப்பட்டால் புதிய சாதனம் பொருத்தப்பட வேண்டும். (3) இந்த முறையில் மற்றொரு சிக்கலும் உள்ளது. அதாவது உடலுக்குள் எந்த ஒரு பொருள் புகுந்தாலும் (பொருத்தப்பட்டாலும்) அதை உடலின் தடுப்பாற்றல் சக்தி (Immune System) எதிர்க்கும். தடுப்பாற்றல் செல்கள் (வெள்ளை ரத்த அணுக்கள்) அந்த சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தி அவை சரியாக இயங்க முடியாமல் செய்கின்றன. இந்த பிரச்சினைகளை தீர்க்கவும் தற்போது தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

அடுத்த பிரச்சினை என்பது மருந்து நிரப்பப்பட்ட பயோ_மெம்ஸ் சாதனம் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துக்கள் தீர்ந்துவிடும். மீண்டும் மருந்தை நிரப்புவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பது அவசிய மாகிறது. இப்பிரச்சினையை தீர்க்கும் விதமாக சில விஞ்ஞானிகள் மற்றொரு முறையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமலேயே வெளிப்புறத்தில் இருந்து ஊசியின் மூலமாக நேரடியாக பயோ_மெம்ஸ் சாதனத்திற்கு செலுத்தலாம். இந்த முறைகள் இருதய நோயாளிகளிக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு அடுத்த அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இருதய நோயாளிகள் உறைக்கட்டுதலை விலக்கும் (clot) மருந்துகள் நிரம்பிய இச்சாதனத்தை உட்பொருத்திவிட்டால் நோயாளிகள் ‘ஹார்ட் அட்டாக்’ வருவதற்கான முதல் அறிகுறிகளை உணர ஆரம்பித்தவுடன் இதை இயக்கி ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இருதய நோயாளிகளுக்கான இச்சாதனத்தை இயக்க நோயாளிகளை ஈடுபடுத்தாமல் நுண்முறை வழியாக்கி  மூலம் தானியங்கு முறையில் இயக்குவதே சிறப்பாகும்.

உலகம் முழுவதும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருதயக் கோளாறுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி பேர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் பெரும்பாலானோர் 65 வயதில் இருந்து அதற்கு மேற்பட்டோர் ஆவார்கள். இவற்றில் இறந்தவர்களின் பெரும்பாலானோர் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயத்தில் இருதய நோயாளிகளுக்காக முதற்கட்ட ஆய்வு தொடங்கியிருக்கிறது. இந்த ஆய்வு உள்நாட்டப்படக் கூடிய அழுத்த உணரிகளைப்  பொருத்தி இருதயம் செயலிழப்பதை தடுக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த அழுத்தமானிகள் கம்பியில்லா, மின்கலமில்லா  முறையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்படி அழுத்த உணரி  சாதனத்தை நோயாளியின் இடது இருதய கீழறையில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது. இந்த உணரிகள் மூலம் பெறப்படும் சமிக்ஞைகள் மூலம் மருந்து செலுத்து முறைமை இயக்கப்பட்டு மருந்து இருதயத்தை சென்றடைந்து ஆபத்திலிருந்து காக்கிறது. தற்பொழுது பல ஆய்வாளர்கள் நிறைவுச் சுற்று தொழில் நுட்பம் (Close loop technology)ல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எப்படியும் இன்னும் 10 வருடங்களுக்குள்ளாக இம்முறை நடைமுறைக்கு வந்துவிடும் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவ உலகினர்.

முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்ட குவாண்டம் டாட் முறையைக் கொண்டும் புதிய சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குவாண்டம் டாட் என்பது படிகங்களே. இது 2 மற்றும் 4 அரைக் கடத்தி காட்மியம் செலினாய்டுகள் ஆகும். உயிரி மருத்துவ துறைக்கு இந்த குவாண்டம் டாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிர் மருத்துவ பொறியியல் துறையின் விரிவுரையாளரான சுயூமிங் நை என்பவர் தான் குவாண்டம் டாட் மருந்து செலுத்துகை முறைமையை முதலில் பயன்படுத்தினார்.

மார்பக மற்றும் புராஸ்டேட் புற்று நோய்களுக்கான மருந்துகளை ‘குவாண்டம் டாட’டிற்குள் வைத்து நேரடியாக புற்று நோய் கட்டிகளின் செல்களுக்கே மருந்துகளை அனுப்பினார். இதனால் உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அறவே தவிர்க்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் மருந்துகளின் சிகிச்சை திறன் அதிகப்படுத்தப்படுவதோடு பக்க விளைவுகளும் தவிர்க்கப் பட்டு விடும்.

சுயூ மிங் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புற்று நோய் செல்களை அறுவை சிகிச்சை மூலம் எலியின் உடலுக்குள் வைத்தனர். பின்னர் அதற்கான சிகிச்சை அளிக்க குவாண்டம் டாட் மருந்து செலுத்துகை முறையை பயன்படுத்தினார்கள். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக செயல்பட்டது. மருந்துகள் சரியாக செயல்பட்டு புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழித்தது. இருப்பினும் எலிக்கு பயன்படுத்தியது போல மனிதர்களுக்கு இந்த முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் போது அதிக பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

அதே நேரத்தில் இந்த மருத்துவ ஆராய்ச்சி முறைகளில் வருங்காலத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் இருதய நோய் மற்றும் புற்று நோய்களுக்கு எளிய மருத்துவ சிகிச்சைகள் வந்து விடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

(அதிசயம் தொடரும்)  தகவல் தொகுப்பு:  எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.