Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2009
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,096 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி

இறுதி வார்த்தைகள்…

1920 – இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி – க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :

காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!

என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.

1930 – இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது. 

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !*

* ”I Want to go back to my country”. He said in a loud voice. ”If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.” –Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன. இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் ‘அல்-அக்ஸா’ பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :

இறைவா…
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !
சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !

மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான ‘சுதந்திர இந்தியா’ மலர்ந்து விட்டது. ஆனால் தேசத்தின் விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை – தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது. எனவே மௌலானா கேட்ட ”சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா” ! என்ற பிரார்த்தனை… மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இன்று பொன்விழா காணும் சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் பிரார்த்தனையும் – ஜீவத் துடிப்பும் :

எங்கள் சுதந்திர தேசம்
பாருக்குள்ளே திலகமாய் திகழ வேண்டும்.
அதன் வசந்த விடியல்களுக்காய்
இஸ்லாமியரின் அர்ப்பணிப்புகள் தொடர வேண்டும்
அதோடு இந்த மண்ணில்
இஸ்லாமியர் அமைதியாக வாழவிடப்பட வேண்டும் … என்பதே !

பின்னிணைப்பு 1

கி.பி. 1791 – 92., விரோதி கிருத் ஸம்வத்சரம்.

ஸ்ரீமத் பரமஹம்சாதி யதோக்த விருதாகிதாரண(விருதுகள் பலவுடைய) சிருங்கேரி ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளுக்கு,

தாங்கள் அனுப்பிய எழுத்தோவியம் மூலம் விவரங்கள் அறியப்பட்டன. மராத்திய குதிரை ஆட்கள்(குதிரைப் படையினர்)வந்து சிருங்கேரியிலிருந்த பிராம்மணர் முதலானோரை மிகவும் அதிகமாக அடித்து துன்புறுத்தியும், கொன்ற விபரமும், ஸ்ரீசாரதாம்பாளை அகற்றி மடத்திலிருந்த எல்லா சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு போனதால் நான்கு சீடர்களுடன் போர்க்களத்திற்கு வந்து இருப்பதை அறிந்தேன்.

சாராதரம்பாள் யுகயுகமாக இருப்பவள். இப்போது இத்தெய்வத்தை மீண்டும் பிரஷ்திடை செய்து வைத்தால் அவள் சூரிய சந்திரர் உள்ள அளவும் நிலைத்திருப்பாள். தேவையான தானியங்கள் இதர மளிகை பருப்பு வகையறா கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளதால் (பலருக்கு) அன்னமிட்டு, சாரதாம்பாளை செய்துவைத்து, பிரதிஷ்டையும் செய்து வைப்பது சரியே அல்லவா?

இத்தகைய பெருமை வாய்ந்த தலத்திற்கு சிரித்துக்கொண்டே துரோகம் செய்த கரங்கள் அழுதுகொண்டே பலனை அனுபவிக்க வேண்டிவரும். இதை சுலோகம் கூறுகிறதல்லவா? கலியுகத்தில் செய்த வினைகளுக்கு சீக்கிரத்திலேயே அதன் தீய பலனை அனுபவிக்க வேண்டிவரும். குருத் துரோகம் செய்ததற்கு பலன், வமிச நாசமே! சுந்தேகமே இல்லை. இந்த விஷமக்காராகள் இனி படப்போகும் பாட்டை நீங்களே கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள். அவர்களுக்கு எத்தகைய மிகுந்த தாழ்நிலை வரவேண்டுமோ அப்படியே ஆசி கூறுங்கள்.

இப்போது சாரதாம்பாள் பிரதிஷ்டைக்காக 200 ரஹதிக்கு ஆன தானியங்களும், ரொக்கம் 200 ரஹதிகளும் சர்க்காரிலிருந்து கொடுக்கப்படுகிறது. தவிர, இன்னும் எந்த மளிகைச் சாமான்கள் வேண்டுமானாலும், அவைகளை ரொக்கம் கொடுத்து வாங்கித் தரும்படி நகரா அசப்புக்கு உத்தரவு (முன்ஷர் மலபூபி) கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான தானியங்களையும் மற்றவைகளையும் தருவித்துக் கொள்ளவும்.

சர்க்கார் இனாமாக் கொடுத்த கிராமத்திலிருந்து வேண்டிய சாமக் கிரியைகளைத் தருவித்துக்கொண்டு, மக்களுக்கு உணவு படைக்கவும், சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்யும் போது நம்முடைய புகழ், செல்வாக்கு அதிகரிக்கும் படியும், விரோதிகள் நாசமடையவும் பிரார்த்தனை செய்யவும் எல்லோருடைய நலனுக்காகவும் தவம் செய்யவும்.
தாரிகு 5 மாஹே சமரி சால் ஜபர்ஜித்
விரோதி கிருத் சம்வத்சரத்தின் ஆஷாட சுத்த பஞ்சமி (* ஜலஜா சக்திதாசன், திப்புசுல்தான் ஒரு மதவெறியரா? பக்கம் 53-54.)

துணை நின்றன…

  1.  
    1.  Agarwal,R.C; Costitutional Development of India and National Movement, S.Chand & Company P. LTD; New Delhi,1986.
    2.  Grover,B.L;Grover.S; A New Look at Modern Indian History, S.Chand & Company P.LTD, New Delhi, 1993.
    3.  Kasim Rizwi: The Great Bahadur Sha Jaffer, Directprate of Advertising and Visual Publicity,Ministry of I & B Publication,1983.
    4.  Pande,B.N; Islam and Indian Culture Part-I; Khuda Baksh Memorial Annual Lecture,Patna,1985.
    5.  Rajjayyan K ;Sonth Indian Rebellion The First War of Indenpence 1800-1801, Rao & Raghavan Publishers,Mysore,1971.
    6.  Rudrangshu Mukherjee, Awadh in Revolt 1857-1858- A study of Popular Resistence, Oxford University Prees,Delhi,1984.
    7.  Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers ; Associated Pubilshing House, New Delhi, 1979.
    8.  Taunk, B.M ; Non – Co – operation Movement in Indian Politics 1919 – 1924 – A Historical Study, Oxford Univ Prees,Delhi,1978.
    9.  Venkatesan, G; History of Freedom Struggle in India, Rainbow Publications, Coimbatore,1985.
    10.  Howdh Mohidenn, M; Hajee Karutha Rowther – A study, 1990.
    11. அபுல்கலாம் ஆசாத், இந்திய விடுதலை வெற்றி (தமிழாக்கம் : ஏ.ஜி. வெங்கடாச்சாரி),ஓரியண்ட் வாங்மன்ஸ், சென்னை, 1961.
    12. அருணாசலம், கே., ஜெய்ஹிந்த், புத்தக நிலையம்,ராயவரம்,1946 .
    13. காஸிம் ரிஸ்வி, இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர், இந்திய தகவல் தொடர்புத் துறை வெளியீட, 1983.
    14. காமாட்சிபிள்ளை , ப: இந்து தேசாபிமானிகள் இனிய ரமணிய கீதம், சுதேசி வெளியீடு, மதுரை, 1926.
    15. செய்குத்தம்பி(பதிப்பாசிரியர்),சதாவதானி செய்குதம்பிப் பாவலர், பாவலர் பதிப்பகம், சென்னை 1987.
    16. திலான், தி: விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், சுஹைனா பதிப்பகம், திருநெல்வேலி, 1994.
    17. முஹம்மது யூசப், ஏ.என்., இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள், நூருல் இஸ்லாம் பதிப்பகம் – சென்னை, 1969.
    18.  வீரசாவர்க்கர், எரிமலை( தமிழ்ப்பதிப்பு)——, சென்னை, 1946.
    19. ஜலஜா சக்திதாசன், திப்புசுல்தான் ஒரு தமவெறியரா? நுpத்தியானந்த ஜோதி நிலையம், சென்னை, 1988.
    20. ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் – இரண்டாம் பாகம், திருமகள் நிலையம், சென்னை, 1979.
    21.  ஷேக்தாவூத், A: இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு, காஜயார் புக் டிப்போ, தஞ்சாவூர்,1990.
    22. அமீர் ஹம்சா, நேதாஜியின் மாலைக்கு ரூ 5 இலட்சம், தினமணி சுதந்திப் பொன்விழா மலர், ஆகஸ்ட் – 1997.
    23. அண்ணாமலை, மா.சு: ‘சும்மா வரவில்லை சுதந்திரம்’ , தினமணி கதிர், 4.8.1996.
    24. இஸ்மி, மார்ச் 1984: மே 1984.
    25. குர்ஆனின் குரல், மார்ச் 1998.
    26. சிந்தனைச்சரம், நவம்பர், 1997, அக்டோபர் 1997.
    27. மதிநா, டிசம்பர் 1986, ஜனவரி 1987.
    28.  தினமணி, 29.4.1997.

முற்றும்