பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர்.
தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும்.
குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம் தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது.
மனிதர்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என மும்பை மருத்துவர் பிரகாஷ் ஒல்லா கூறுகிறார்.
கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர் சுனிதா துபே தெரிவித்துள்ளார்.
குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.
படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால், மெல்லிசை பாடல்கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
நன்றி: தினமலர்.