Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

கவலையும் கொழுப்பு தான்!

மாரடைப்புக்கு புது காரணம் : கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.

மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.

ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது ?. மூச்சு பாதிக்கப்படுகிறது ? என்கின்றனர். மனம் பாதிக்கப்படுவதால  ஏற்படும் வியாதிகளுக்கு “சைக்கோ சொமாட்டிக்’ காரணிகள் தான் காரணம் என்று மருத்துவ ரீதியாக சொல்வதுண்டு.

மனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, யாருக்காவது செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று டென்ஷன் ஆவது… ஆகியவை தான் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணம்.

இப்படி மனம் பாதிக்கப்படுவது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மருத்துவ நிபுணர்கள், இது தொடர்பாக 20 ஆரோக்கியமான ஆண், பெண்களை “எம்.ஆர்.ஐ.,’ ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.

அப்படி பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் சில புராஜக்ட்கள் தந்து, அதன் மூலம் அவர்கள் மனதில் அழுத்தம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அப்படி அழுத்தம் அதிகமாகும் போது, அது, ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தனர்.

இந்த பரிசோதனைகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, மருத்துவ நிபுணர்கள், “மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும் போது, ரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது ?. அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் ஸ்ட்ரெஸ் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான தெரபிக்கள் முக்கியம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவில், “யுரேகா அலர்ட்’ என்ற வெப்சைட்டில் இது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக “சைக்கோ பிசியாலஜி’ அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி: தினமலர்