Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,342 முறை படிக்கப்பட்டுள்ளது!

மே 14 பிளஸ் டூ, பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள்

மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

மே 13ஆம் தேதி அன்று, தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளும் தமிழகத்தில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்படும் நாளாக இருக்கிறது.

பிளஸ் டூ தேர்வு முடிவை மே 14ஆ‌ம் தேதி வெளி‌யிட ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை முடிவு செ‌ய்து‌ள்ளது. கட‌ந்த மா‌‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌தி த‌‌மிழக‌த்‌தி‌ல் தொடங்கிய பிளஸ் டூ தேர்வு மார்ச் 25ஆ‌ம் தே‌தி முடிவடை‌ந்தது. இ‌ந்த தே‌ர்வை 7,74,205 மாணவ – மாணவியர் எழுதியுள்ளனர். அவர்களில் 3,87,102 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் 57,056 பேர் ஆவார்கள்.

விடை‌த்தா‌ள்க‌ள் ‌திரு‌‌த்து‌ம் ப‌ணி 43 மையங்களில் மார்ச் 23ஆ‌ம் தேதி தொடங்கியது. இ‌‌ன்றுட‌ன் ‌விடை‌த்தா‌ள்க‌ள் திருத்தும் பணி முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வேலை நடைபெற்றுவருகிறது.

இதை‌த் தொட‌ர்‌ந்து பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மே 14ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதே நேர‌த்த‌ி‌ல் பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு மே 25ஆ‌ம் தேதி வெளியிட ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. மார்ச் 28ஆ‌ம் தேதி தொடங்கிய பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு ஏப்ரல் 11ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவியர் எழுதியுள்ளனர். இ‌ந்த விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இ‌ந்த தேர்வு முடிவுகளை மே 25ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.