Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,462 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.

வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.

அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.

இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

நன்றி: தமிழ் சிஎன்என்