சீனா பெரிய நெல் உற்பத்தி நாடாகும். இந்தியாவைப் போல வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். தென் பகுதி மக்கள் முக்கியமாக சோற்றைச் சாப்பிடுகின்றனர். ஆனால், வட பகுதியிலும் தென் பகுதியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் கஞ்சியை(conjee) உட்கொள்ள விரும்புகின்றனர்.
சீனாவில் கஞ்சி உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் உணவு வகையாகக் கருதப்படுகிறது. பண்டை காலம் தொட்டு, சீன மக்கள் கஞ்சியின் மருத்துவப் பயனை அறிந்து கொள்ள துவங்கினர். நோய் தடுப்பு, உடல் நலத்தை வலுப்படுத்துதல், ஆயுள் நீடிப்பு முதலிய பயன்களை கஞ்சி பெற்றுள்ளது என்று சீன மக்கள் கருதுகிறனர். உடல் நலத்துக்கு நன்மை தருவது பற்றிய சீனப் பாரம்பரிய கருத்தின் படி, வெவ்வேறான பருவங்களில் வெவேறான வகை கஞ்சிகளை உட்கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றிய விபரத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
சீனப் பாரம்பரிய மருத்துவ இயல் கருத்தின் படி, ஓராண்டின் 4 பருவங்களின் மாற்றம், மனிதரின் உடல் நல மாற்றத்துடன் நெருக்கமான தொடர்புடையது. வானிலையின் மாற்றத்துக்கிணங்க, உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும். இதில், வயிறு மற்றும் மண்ணீரலை பாதுகாப்பது முக்கியமானது என்று சீனப் பாரம்பரிய மருத்துவவியல் கருதுகிறது. மருத்துவர் su feng zhe கூறியதாவது
வாழ்க்கையில் வயிறு மற்றும் மண்ணீரல் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்காலத்தில், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. உணவு வகைகளின் காரணமாக நோய்கள் ஏற்படுகின்றன. உணவு வகைகள் முதலில் வயிறு மற்றும் மண்ணீரலுக்குள் நுழைகின்றன. சத்துணவு வகைகள் உடம்பின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. தேவையற்றப் பொருட்கள் கழிவுப் பொருட்களாக உடம்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஆகையால், வயிறு மற்றும் மண்ணீரல் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகின்றோம். உடம்பில் வளர்சிதை மாற்றம் சீராக இயங்காவிட்டால், பல நோய்கள் ஏற்படும். ஆகவே, வயிறு மற்றும் மண்ணீரல் மக்களின் உடல் நலத்துக்கு மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
வயிறு மற்றும் மண்ணீரலின் நலம், உடல் நலத்துக்கான முன் நிபந்தனையாகும். இவற்றின் நலத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்? வாழ்க்கையில் உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சில கஞ்சி வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சூ முன்மொழிந்தார். வயது, உடல் நிலைமை, பருவம் முதலியவற்றின் படி, வேறுப்பட்ட கஞ்சி வகைகளைத் தேர்ந்தெடுப்பது, உடல் நலத்தைப் பாதுகாக்கும் மிக எளிதான வழிமுறையாகும். சந்தையில் அதிகமான காணப்படும் உணவு மூலப்பொருட்களை வாங்கி, வீட்டில் கஞ்சியைச் சமைக்கலாம். சரியான உணவு வகைகளைப் பயன்படுத்தினால், நல்ல பயன் பெறும்.
வசந்தகாலத்தில் இனிப்புப் பொருட்களை அதிகமாகவும் புளிப்புப் பொருட்களை குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்று சீனப் பாரம்பரிய மருத்துவவியல் கருதுகிறது. Lily பழம், நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் நல்லது. அதைச் சாப்பிட்டால், உடல் வெப்பத்தை தணிக்க முடியும். 20 கிராம் lily பழம், 100 கிராம் அரிசி, உரிய அளவிலான கற்கண்டு ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் Lily பழத்தை தண்ணீரில் போட்டு வேகவிடுங்கள், பிறகு, அரிசியையும் இதில் சோர்க்கலாம். வேகவிடுக்கப்பட்டப் பிறகு, கற்கண்டை இதில் போடுங்கள். மிகவும் எளிதான தயாரிப்பு முறை தான்.
கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருட்களைக் குறைவாகவும் கார்ப்பு சுவை கொண்ட பொருட்களை கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். மாசிப்பறுப்பு, தாமரை தண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி கஞ்சியைத் தயாரித்து சாப்பிடுங்கள். இவ்விரண்டும் உடலின் வெப்பத்தைக் குறைக்கும் பயனுள்ளன. முதலில் பாசிப்பறுப்பை வேகவிடுங்கள். சுமார் 30 நிமிடங்களுக்குப் பின், சுத்தம் செய்யப்பட்ட அரிசியை வாணலியில் போடுங்கள். மேலும் 15 நிமிடங்களுக்குப் பின், சிறிய துண்டுகளாக வெட்டிய தாமரை தண்டை வாணலியில் சேர்க்கலாம். மிதமான சூட்டில் தொடர்ந்து வேகவிடுங்கள். சுமார் 10 நிமிட்டங்களுக்குப் பின், இந்த தாமரை தண்டு கஞ்சி தயார்.
இலையுதிர்காலத்தில் எந்த வகை கஞ்சியைச் சாப்பிடலாம்? மருத்துவர் சூ கூறியதாவது
இலையுதிர்காலத்தில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளைக் குறைவாகவும், புளிப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை கூடுதலாகவும் சாப்பிடுங்கள். காரணம் இலையுதிர்காலத்தில் மழை குறைவு, வானிலை அவ்வளவு வெப்பமானதல்ல. கசப்பு மற்றும் கார்ப்பு உணவு வகைகளைச் சாப்பிட்டால் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். புளிப்புச் சுவை கொண்ட பழ வகைகளில் காரிம அமிலம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும். அவை செரிமானத்தை முன்னேற்றி, வயிறு மற்றும் gutஇன் செயல்களை அதிகரிக்கசெ செய்யும். ஆகவே, இக்காலத்தில் ஆப்பிள் ஆரஞ்சு முதலிய பழ வகைகளை அதிகமாக சாப்பிடுங்கள் என்று அவர் கூறினார்.
நன்றி: அறுசுவை சமையல்