Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,875 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்

உலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இடம்பெற்ற ஏலத்தில் ஆறே நிமிடங்களில் எதிர்பாராத வகையில் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த இளஞ்சிவப்பு வைரைக்கல் விலை போயுள்ளது.

மார்ஷியன் இளம் சிவப்பு வைரம் என்று அழைக்கப்படும் அந்த வைரக்கல் 12 காரட்டுகள் அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது.

வட்டவடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தொலைபேசியின் மூலம் ஏலத்தில் பங்குபெற்று வாங்கியுள்ளார்.

இந்த வகையான ஒரு வைரக்கல் விற்கப்படுவது இதுவே முதல் முறை.

1976 ஆம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியதை நினைவு கூறும் வகையிலும், அந்த கிரகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும் இதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயரிடப்பட்டது.

இந்த வைரக்கல் குறைந்தது எட்டு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதே போன்ற தன்மைகளைக் கொண்ட மற்றொரு வைரம் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 1947 ஆம் ஆண்டு அவரது திருமணத்தின் போது பரிசாக கொடுக்கப்பட்டது. 23. 6 காரட் எடை கொண்ட அந்த வைரம் பின்னர் மேலாடையில் அணிந்து கொள்ளும் ஒரு நகையில் பதிக்கப்பட்டது.

வில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் அந்த வைரம்தான் இப்போதும் உலகளவில் மிகவும் பிரலமான வைரக்கல் என்று கருதப்படுகிறது.

தற்போது ஹாங்காங்கில் ஏலத்துக்கு விலைபோயுள்ள மார்ஷியன் வைரக்கல், அமெரிக்க ரத்தின வியாபாரியான ஹாரி வின்ஸ்டன் அவர்களின் கடையில் பட்டைத்தீட்டப்படாத வைரமாக இருந்தது.

அமெரிக்கர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம் அங்கு சென்றடைந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்று, அதை பட்டைதீட்டும் போது அந்தக்கல் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கக்கூடும் என்று கருதி அதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயர் சூட்டினார் என்று, இந்தக் கல்லை ஏலத்தில் விற்ற கிறிஸ்டிஸ் நிறுவனத்தின் பேச்சாளர் பிராண்சுவா க்ருயேல் கூறுகிறார்.

அண்மைக் காலங்களில் ஹாங்காங்கில் ஏலத்தில் விற்கப்பட்ட ரத்தினக் கற்களே மிகவும் அதிகமான விலைக்கு சென்றன என்பதாலும், அங்கு நடைபெறும் ஏலத்தில் சீனர்களின் பங்கெடுப்பும் இந்த வைரம் விற்பனைக்காக அங்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் க்ருயேல் தெரிவிக்கிறார்.

கிழக்காசியப் பகுதிகளில் வைரத்துக்கான ஆர்வம் மிகவும் அதிகமாக இருப்பதும் இது ஹாங்காங்கில் ஏலத்துக்கு வருவதற்கு ஒரு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.