Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,087 முறை படிக்கப்பட்டுள்ளது!

பல்லண்டம்… அது பிரம்மாண்டம்..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்… 10,000,00,00,000 சூரியன்கள்……. ஐ மீன்……. விண்மீன்கள் உள்ளனவாம்..!
.
இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்… பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!

அப்புறம் இது போல இன்னும் “ஆறு பிரபஞ்சங்கள்” வேறு இருக்கின்றனவாம்..!!!

எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு… ஹி…ஹி… அங்கிருந்தபடியே… பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?

நான் உங்களை வந்தடையும் வழி……. என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!

 

Flashback……….Big Bang theory………..!

‘பிக் பேங் தியரி’ எனப்படும் இந்த பெரு வெடிப்புக்கோட்பாடானது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2 முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற்கொள்கை (Cosmological Principle).

‘பிக் பேங் தியரி’யின்படி, நாம் வாழும் இந்த பூமி உட்பட இவ்வண்ட வானவெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இணைந்திருக்கும் மிகச்சிறிய அளவினதான தீப்பிழம்பாகத்தான் இருந்திருக்கிறதாம். இத்தீப்பிழம்பானது இன்றுவரை ‘அறிவியலால் அறியப்படாத ஏதோ ஒரு சக்தியின் காரணத்தினால்’ மிக வேகமாக வெடித்து விரிவடையத்தொடங்கி விட்டதாம்..!

ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ்விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக்கூட்டங்களாக ‘உருவாகி இருக்கக்கூடும்’ எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் நாம்  வாழும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாக ஆறிவியல் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராக பரவிக்காணப்படும் நுண்ணலைக்கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெருவெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.

ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக்கோட்பாடு, என்னசொல்கிறது என்றால்… இவ்வண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ இஷ்டத்துக்கு அள்ளித்தெளிக்கப் பட்டவையாக அல்லாமல் அண்ட வானவெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற்கொள்கை..!
.
ஆக, இப்படியான அண்டத்திலுள்ள பூமியில் ‘எப்படியோ’ நீர் இருந்ததால்தான், அதில் முதல் உயிரினம் ‘உருவானதாக’ சொல்கின்றனர், அறிவியலாளர்கள். காரணம், ஒவ்வோர் உயிரியின் உடல் கட்டுமானத்திற்கு மிகவும் செல்லுக்கு, அவசியமான ப்ரோட்டின் உருவாவதற்கு அடிப்படையான அமினோ ஆசிட் மூலக்கூறானது தண்ணீருக்குள்ளே தான் உருவானது என்றும் அது உருவாகவும் தண்ணீர்தான் அவசியம் என்றும் (Primordial soup theory) சொல்கின்றனர், அறிவியலாளர்கள். மாறுபட்ட வேறுசில தியரிகளும் உள்ளன. சுமார் 100 – 60  வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அறிவியல் கோட்பாடுகளின் முன்னேற்றம் எல்லாம்..! பெரும்பாலான அறிவியலாளர்களால் இக்கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. BigBang-ற்கு மாற்றமான “Big Bounce” தியரிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை..!
.
பொதுவாக  நாம் நண்பர்களுடன் சிறுவயதில் பள்ளிக்கூட கணித புத்தகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கணக்கை பக்கம் பக்கமாக போட்டுவிட்டு அதன் ‘இறுதி விடை சரியா’ என்று பரிசோதிக்க புத்தகத்தின் கடைசி பக்கங்களை (விடைப்பக்கம்) திருப்பி அங்கே உள்ள கட்டக்கடைசி ஸ்டெப் விடையை பார்ப்பதுண்டு..! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடைகள் வரும் நிலையில், நம் விடை சரியாக இருந்தால் பெரும்மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா..!

பொதுவாக ஒரு ‘அறிவியல் கொள்கைக்கு’, ‘அறிவியல் நிரூபணம்’ இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக………..

நிரூபணம் இல்லாத -நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு  வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!

இறைவன் சொல்வது என்ன…? குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…

வானங்களும், (இங்கே பன்மையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா..? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா..?

தியரிகள் சரிதான்..! அடுத்து, அதென்ன… வானம் என்று இல்லாமல், ‘வானங்களும்’ என்று பன்மை..? அது அப்புறம் இருக்கட்டும். வேறு பல இடங்களில் குர்ஆன் குறிப்பிடும் ‘வானம்’  என்றால் முதலில் என்ன..? அது எதைக்குறிக்கிறது..?

பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.

According to the law of conservation of mass & energy, mass and energy can neither be created nor be destroyed..! But one form can be converted into another..! ( நன்றி: mass law- 1785 லவோய்சியர், energy law-1842 ராபர்ட் மேயர் )

Generally law is a fact..! ஆனால், மனிதனால் உருவாக்க இயலாத, மாற்ற மட்டுமே முடிந்த, அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆற்றலும்… அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பொருண்மையும்… எங்கிருந்து ‘உருவாகி’ வந்தனவாம்..? எட்டாம் வகுப்பில் இருந்தே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்..! அறிவியலில் இன்னும் விடை இல்லை இதற்கு..! ஆகச்சிறிய ஒரு ‘பொருள்’… big bang சமயத்தில் ‘ஆற்றல்’ வெளிப்படும்படி வெடித்தது..! ஆனால், அந்த ‘பொருள்’…அதற்கு முன்னர்..? அந்த ‘பொருள்’ எல்லாம் ‘ஆற்றலாக’ இருந்திருக்க வேண்டும்..! ‘ஆற்றல்’, இதுபோல ‘பொருளாக’ மாறுமா..? இது கேள்வி..!
.
பொருண்மை ஆற்றலாகவும், ஆற்றல்  பொருண்மையாகவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறக்கூடியதே..! இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், 1907-ம் ஆண்டின், E=mc² என்ற உலகப்புகழ்பெற்ற சமன்பாடு சொல்கிறது..! அதோடு இவ்வண்டத்தின் ஆற்றலும் பொருண்மையும் சமம் என்கிறது..!
.
ஆக, பெருவெடிப்புக்கு சற்று முன்னர் ஒரு பொருளாக அண்டம் இல்லை..! அதற்கு முந்திய தருணம் ஆற்றலாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அது பொருளுமாகி ஆற்றலுமாகி விரிவடைந்து கொண்டே இருப்பதையும் அறிகிறோம். நாம் முன்னரே பார்த்த Big Bang நிகழ சாத்தியமான ‘ஏதோ ஒரு அறியப்படாத சக்தி’ எது..? எங்கிருந்து வந்தது..? ஆக, ‘அந்த சக்தி’ இலிருந்துதான் இந்த அண்டம் பொருளாகி ஆற்றலுடன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..! இதை ‘Expanding Universe’ என்றும் அறிவியலாளர்களின் கோட்பாடுகள் சொல்கின்றன..!
.
power -[சக்தி ] is the rate at which energy [ஆற்றல்] is transferred..! ஆக… அந்த ‘முதல் ஆற்றல்’ யாருடையது சகோ..? Big Bang-ல் ஆற்றலை பொருளாக மாற்ற உபயோகிக்கப்பட்ட சக்தி யாருடையது சகோ..? விடை இதோ..!

குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…

வானத்தை (இங்கே ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) (நம்) சக்தியை கொண்டு அமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்து வோராவோம்.

தியரி சரிதான்..! எல்லை தெரியாத இந்த ‘விரிவடையும் வானம்’ (விரிவடையும் அண்டம்) அதாவது Expanding Universe எப்படிப்பட்டது..? அதில் ஏகப்பட்ட விண்மீன் கேலக்ஸிகள் உள்ளன அல்லவா..? இந்த பிரபஞ்சத்தை விஞ்ஞானிகளில் ஒரு சாரார், கேலக்ஸி போல ‘தட்டை’ என்றும்… மற்றொரு சாரார் கோள்கள் /விண்மீன்கள் போல ‘கோளம்’ என்றும்… இன்னொரு சாரார் வித்தியாசமாக ‘நீள கோள மாத்திரை’ போன்றது என்றும்… விதவிதமாக படம் வரைந்து பலமாதிரி வாதங்களுடன் தியரி சொல்கின்றனர்..! எது சரி..?

குர்ஆன் – 37:6  இறைவசனத்தில்…

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

நட்சத்திரங்கள் என்றால்… அது விண்மீன்கள்  அல்லது  ‘விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸிகள்’..! அதெல்லாம் சரி… இது என்னது..? “முதல்” வானம்…? அதாவது… ‘முதல் பிரபஞ்சமா’..? அப்படி என்றால்… இது நாம் வாழும் “முதல் அண்டம்” எனில், நம் அண்டத்துக்கு வெளியே வேறு அண்டங்களும் உண்டா..?

‘ஆம்’… சில/பல ‘இருக்கலாம்’ என்கின்றன அறிவியலின்… சில தியரிகள். ஆனால்,  Multiverse Bubble Universes Theory… அதில் ‘ஏழு அண்டங்கள்’ அடுக்கடுக்காக உள்ளதாகவும் கூறி வண்ணப்படம் போட்டு விவரிக்கிறது, Multiverse… எனும் ‘பல்லண்டம்’ கோட்பாடு..!

இந்த தியரியில் இரண்டு… மூன்று… ஆறு.. என்றெல்லாம் இல்லாமல்… அதென்ன கணக்கு ‘ஏழு’..? பல கணக்கீடுகளுக்கு பிறகு இத்தியரி சொல்லப்பட்டாலும், ஆச்சர்யம்தான் எனக்கு..! இது சரியாக இருக்குமா..?

எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த  பிரபஞ்சத்தைத்தான் “முதல் வானம்” என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் “ஆறு வானங்கள்” சேர்த்து 7  அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..!

ஆனால், மேலே உள்ள படம் ‘தலைகீழாக'(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!

குர்ஆன் 71:15 இறைவசனத்தில்….

ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?

ஆகவே, அடுக்கடுக்கடுக்காக அண்டங்களை அடுக்க கோள வடிவ பிரபஞ்ச கோட்பாட்டை  விட, ‘நீள்கோள மாத்திரை’ அல்லது ‘தட்டை’ பிரபஞ்ச தியரிகள் ஓகே போல தெரிகின்றன..! எது எப்படியோ…! நம் முதல் அண்டத்தின் பிரம்மானடமே அத்துனை பெரியது என்றால்…. மற்ற 7-அண்டங்கள்… பல்லண்டம் எத்துனை  பிரம்மாண்டம்..? சொற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட நமக்கு ஏழு பிரபஞ்ச பிரமாண்டம் என்பது ஒரு நல்ல படம் வரையக்கூட கற்பனைக்கு எட்டாத ஒன்று. சுபஹானல்லாஹ்..!

நமது அண்டத்திலேயே நமக்கு தெரியாத நாம் இன்னும் நாம் அறிய முடியாத ஆற்றல்களும் அறியமுடியாத பொருள்களும் உள்ளன. அதை எல்லாம் கருப்பு ஆற்றல் (Dark Energy) கரும்பொருள் (Dark Matter) என்கின்றனர். நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் இது..! அண்டத்தில் நமக்கு தெரிந்தது….. 4% தானாம்…?!?!?!?!

பெருவெடிப்புக்கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து பல்வேறு வேகத்தில் (900 km/s வேகம் முதல்… ஒளியின் வேகமான 3,00,000  km/s யையும் தாண்டி… நாம் அறிந்து அதிகபட்சமாக 5,40,000 km/s வேகம் வரை) விரிவடைந்து கொண்டே போகிறது. இப்படி, நம் அண்டத்தின் கேலக்ஸிகள் இவ்வளவு வேகமாக ஒன்றை ஒன்று விலகி ஓட காரணமான ஆற்றல் எது..? அதுதான் Dark Energy எனப்படும் ‘கரிய ஆற்றலாம்’..!

பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74% கரிய ஆற்றலும் 22% கரும்பொருளும் உள்ளது..! அண்டவெளியில் உள்ள வஸ்துக்கள் போக மீதி உள்ளவை எல்லாம் வெற்றுவெளி என்ற எண்ணமும் காணாமல் போய் விட்டது. அதை கரும்பொருள், கரிய ஆற்றல் எல்லாம் ஆக்கிரமித்துள்ளன..! No empty space in the Universe. Dark Matter fills the intergalactic space… என்கிறது நவீன அறிவியல்..! வெட்ட வெளியான ( vacuum ) வானத்தை எப்படி ‘படைக்க முடியும்’ என்று இன்னும் கேட்டுக்கொண்டு இருப்போரை பார்த்தால்… எனக்கு பரிதாபமாக இருக்கிறது சகோ..!

குர்ஆன் 50:38 இறைவசனத்தில்….

வானங்களையும், (சகோ,கவனிக்கவும்… பன்மை) பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.

எனவே, அந்த கரும்பொருள்.. கரிய ஆற்றல் தியரிகள் எல்லாம் சதவேத அளவில் வேறுபடலாமே அன்றி சரியான அனுமானங்கள்தான்..!

“ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது” என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் – இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு… ‘ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்’ என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் ‘5.82 quasar’ எனும் ஒரு கருந்துளையின் வேகம்… ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..!

‘Flashfront’..(!?)………Big Crunch theory……..!

இப்படி விரிவடையும் பிரபஞ்சம்… இப்படியே விரிவடைந்து கொண்டே செல்லாதாம்..! எதிர்காலத்தில் ஒருநாள் சுருங்கிவிடுமாம்..! அதை “பெரும் அண்டக்குழைவு” (Big Crunch) என்கின்றனர் விஞ்ஞானிகள்..! நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் எதிரெதிரான கருதுகோள்களுள் ஒன்று இது..!

(மற்றவை: “Big Freeze”=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், “Big Rip”=விரிவடையும் அண்டம்  இறுதியில் கிழிந்துவிடும்.)

Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய் சுருண்டு சுருங்கி ஒரு ‘கருந்துளை’யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு)

இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? ஆம்..! இருந்தால், எப்போது எப்படி அது நடக்கும்..?

குர்ஆன் 21:104 இறைவசனத்தில்….

எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ… ஒருமையில் உள்ளது… ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது…) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

இவ்வசனத்தில்,  ‘கியாமத் நாள்’ எனப்படும் இறுதிநாளில், ஓர் அண்டத்தின் இறுதியாக அண்டக்குழைவு கோட்பாட்டை சரிகான்கிறோம். ஆனால், நான் தேடியவரை ‘பல்லண்டத்துக்கு ஒரு குழைவு கோட்பாடு’  ஒன்றை இன்னும் யாரும் வகுக்கவில்லை போல..! ஆனால், நமது விடைப்பக்கமான குர்ஆன் அதையும் அட்வான்சாகவே அதே கியாமத்நாளில்… ‘பல்லண்டத்திற்கு என்ன ஏற்படும்’ என சொல்லிவிடுவதையும் காண்கிறோம்..!

குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்…..

……கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் (கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது… பல்லண்டம் அழிக்கப்படுவது பற்றி இவ்வசனம் கூறுகிறது...) அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்……

—என்று தெளிவாக அல்லாஹ் அறிவித்து விடுவதை காண்கிறோம்..!

இதுவரை  நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் ‘பார்த்த(!)’ Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் ‘பார்க்க(!)இருக்கும்’ Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை  எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே… எப்படி…? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?

வேறொரு கேலக்ஸியில் இருந்து பூமிக்கு அருகே UFO -வில் வரும் ஒரு Alien  (வேற்றுக்கிரக வாசி) நமது பூமிக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிற அத்தனை சேட்டிலைட்டுகளையும் பார்த்துவிட்டு, “இவை தானாக உருவாகி தானாவே அந்த கிரகத்தை சுற்றி வரும் துணைக்கோள் தூசிக்கூட்டம் போல…” என்று நினைத்தால்… அது அறிவுடைமையா..? கஷ்டப்பட்டு அவற்றை எல்லாம் செய்து விண்ணுக்கு அனுப்பிய நாசா, இஸ்ரோ போன்ற உலகநாட்டு சேட்டிலைட் ஏவுதள விஞ்ஞானிகள் இப்புரிதலை சரியென சகித்துக் கொள்வார்களா ..?

குர்ஆன் 35:41 இறைவசனத்தில்….

வானங்களும்,(கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது) பூமியும் இடம் பெயராதபடி அ(இறை)வனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

ஆனால் இதனை நம்புவர்கள் எப்படிப்பட்டவர்களாம்..?
குர்ஆன் 32:15 இறைவசனத்தில்….

நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..!

சுப்ஹான ரப்பியல் அஃலா…. ‘உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்’

References:
http://corpus.quran.com
http://www.tamilquran.in
http://www.searchtruth.com
http://www.islamawakened.com
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://en.wikipedia.org/wiki/Dark_energy
http://www.messagetoeagle.com/darkmatt.php
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Multiverse#Bubble_theory
http://www.sunniforum.com/forum/archive/index.php/t-14343.html
http://www.chemteam.info/Thermochem/Law-Cons-Mass-Energy.html
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.html

நன்றி: முஹம்மத் ஆஷிக்_citizen of world