பரக்கத் கிடைக்கவேண்டும் என்பதற்காக 4444 தடவைகள் ஓதப்படும் இந்த ஸலவாத்திற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? போன்ற விடயங்களை இந்த உரையின் மூலம் ஆராயப்படுகின்றது.
பெயர் வருவதற்கான காரணி : எகிப்து நாட்டவரான இப்றாஹீம் நாஸி என்பவரால் இந்த ஸலவாத் இயற்றப்பட்டு, எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது.’ஸலாதுன் நாஸியா” என்ற பெயரில் அறிமுகமாக வேண்டிய இந்த ஸலவாத் ز என்ற அரபுச் சொல்லில் இடம் பெறும் புள்ளி தவறுதலாக விடப்பட்ட காரணத்தால் ‘ஸலாதுன் நாரியா” என்ற வெயரில் சமூகத்தில் அரங்கேறியது.
இதனை சூபியாக்களும், அவர்களின் கொள்கைத் தாக்கம் பெற்ற முஸ்லீம்களும் தமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் ஓதி வரும் வழக்கமுடையோராய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் அவர்களது கஷ்டங்கள் நீங்குவதற்காக 4444 தடவை ஓதி வருவதுடன், மௌலவிகள் சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக வீடு வீடாகச் சென்று அதனை ஓதிக் கொடுப்போராகவும் இருக்கின்றனர்.
வழங்கியவர் : முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபார் தஃவா நிலையம் (சிங்களமொழிப்பிரிவு)
நாள்: 24-03-2011 – வியாழக் கிழமை
இடம்: ஹம்ஸா பின அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம் – அல் ஜுபைல்