Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,216 முறை படிக்கப்பட்டுள்ளது!

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம்.

நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?

  • திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
  • காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
  • காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
  • திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
  • காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?

  • கண்களில் பின்புறம் வலி
  • தசை வலி
  • மூட்டு வலி
  • தோலில் சினைப்பு
  • வயிறு வலி, வாந்தி

டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளதா?

வர வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த வைரஸ் கிருமியை சார்ந்த 4 வகை நோய்க்கிருமிகள் உள்ளன. எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகக் கூடிய டெங்கு காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேல் டெங்கு காய்ச்சல் வரலாம்.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த ஏதாவது சோதனைகள் உள்ளதா?

நேரிடையாகவோ (அ) மறைமுகமாகவோ ஆய்வுக் கூடங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது.

கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா?

இல்லை. கொசுக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?

நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவர் நோயாளிபோல் தோற்றமளிக்காமல் இருப்பாரா?

ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எல்லோருக்கும் அல்லாமல் 4 முதல் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா?

முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?

டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?

டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா?

டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் முறையான சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?

டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?

ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?

1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?

இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?

  • டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
  • முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
  • கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம்.
  • கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?

டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு பரவியுள்ள பகுதிக்கு பயணம் செய்பவற்கு ஆலோசனை உண்டா?
பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?

டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை?

ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும்.

டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிவிப்பதில் உங்கள் அறிவுரை என்ன?

டெங்கு காய்ச்சல உள்ள நோயாளிகளையும், இருப்பதாக சந்தேகப்படுபவர்களையும் உடனடியாக சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும். இரத்தம் சேகரிக்கும்போது, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றபின் செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?

பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

மிகவும் முக்கியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல்

டெங்கு காய்ச்சல் பெருவாரியாக பரவினால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்குவதை தவிர்த்தலே மிகவும் முக்கியமான பணியாகும். கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.

டெங்கு பொது சுகாதாரத்த்தின் பெரிய பிரச்சினையாக உள்ளதா?

ஆம். கடந்த 1999 மற்றும் 2003 ஆண்டுகளில், டெங்கு காய்ச்சலின் பரிசோதனையில் இரத்தம 1gm அதிகமாகியுள்ளது.