பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..
தற்போது நமது வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. அவசர சாப்பாடு! முறையற்ற சாப்பாடு நேரம் மற்றும் சமையல் முறைகள்! நேரத்தை சரியாக பயன்படுத்தாமை! போதிய அளவு தூக்கமின்மை அல்லது அளவுக்க அதிக உணவும், தூக்கமும்! எல்லாவற்றுக்கும் மேலாக குறைவான உடல் உழைப்பு! அதிகமான மனஅழுத்தம்!
இப்படி நமது வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் எண்ணிக்கை பெருகி, உடல் எடைடைக் குறைக்க வழி தெரியாமல் தத்தளிக்கின்றனர். அவர்களுக்காக – ஏன் உங்களுக்கும் கொழுப்பு அதிகமாகத் தானே உள்ளது!!! மேலே படியுங்கள்!!
பத்தே நாட்களில் பத்து கிலோ எடை குறையுமா ?…. குறையும் . ஆனால் பத்து நாட்களில் கண்டிப்பாக குறையும் என்று உறுதி சொல்ல முடியாது! ஒரு சிலருக்கு நாட்பது நாட்கள் ஆகிவிடலாம்.. முறையாக கீழே கொடுத்துள்ள விசயங்களை சரியாகச் செய்தால் – வெற்றி நிச்சயம்!
- 1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து – வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
- 2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கக் கூடாது
- 3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும். பகலில் தூங்கக் கூடாது .
- 4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த அளவு நிறுத்தணும்.
- 5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
- 6 .வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது
- 8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும். அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
- 9 .எண்ணையில் பொறித்த உணவுகளை , சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
- 10 . டிவி பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேச கூடாது.
மந்திரத்தில் மாங்காய் காய்க்காது . உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் போன்றவற்றையும் செய்ய வேண்டும்.
முறையாக கடைபிடித்தால் எளிதில் விரைவில் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.