கால்வாய் ஓரங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி வளர்க்கப்படும்
நம்முடைய பாரம்பரிய விஞ்ஞானம் கொடுத்திருக்கும் பச்சிலை பொக்கிஷங்களின் அருமையை நன்குணர்ந்த தமிழக முதல்வர் கொசுக்களைக் கட்டுப்படுத்த மகத்தான மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடிகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.
நொச்சி பச்சிலையின் மகத்தான மருத்துவ குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். பழங்காலம் தொட்டு இன்று வரை வேப்பிலை மற்றும் நொச்சி இலை போட்டு (புகைமூட்டி) கொசுக்களை விரட்டுவது அன்றாட கிராமத்து தமிழனின் பழக்க வழக்கம்.
இந்த பாரம்பரிய அறிவியல் அறிவு இன்றைய மனிதனுடைய வசதியான வாழ்க்கைக்கேற்ற புதிய உபகரணங்களை தயாரிக்க தூண்டுகிறது. இதன் விளைவாக ரசாயன முறைப்படி நொச்சியின் சாறு எடுத்து அதிலிருந்து பல்வேறு பூச்சி கட்டுப்பாட்டு கலவைகளும் மற்றும் உபகரணங்களும் உருவாக்கப்படுகின்றன. தண்ணீருடன் சாறு எடுத்தல், பெட்ரோலிய நொச்சியை பொறுத்த வரை எல்லா கண்டுபிடிப்புகளும், அடிப்படை ஆராய்ச்சியோடு நின்றுவிட்டன. நொச்சியை கொசுக்களுக்கு உபயோகப்படுத்தும் யுக்திகளை ஆராய்ச்சி செய்யாத பல்கலைக் கழகங்களே நம் நாட்டில் இல்லை.
நொச்சியின் சாறிலுள்ள ரசாயன மூலப் பொருட்கள் கொசுக்களின் மருத்துவ மற்றும் கொசு விரட்டும் பண்புகள் உடையது. கொசு மற்றும் பூச்சிகளின் தொல்லைகளைக் குறைக்க இயற்கையான முறையில் வீடுகள்தோறும் மற்றும் நீர் வழித்தடங்களின் ஓரங்களில் நொச்சிச் செடிகள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு சுகாதாரமான சூழ்நிலை உருவாக்கப்படும்.
நன்றி: மாலைமலர்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு போன்றன உள்ளன.
காசநோய் புண்களை குணப்படுத்தும்
இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.
மூட்டுவலிக்கு மருந்து
முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
குடல்பூச்சிகளுக்கு எதிரானது
வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.
கல்லீரல் நோய்களுக்கு மருந்து
மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
நன்றி: ஒன்இந்தியா
- நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும். வீக்கம் குறையும்.
- நொச்சி, தழுதாழை, மாவிலங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, ஒரு ஆழாக்கு எடுத்து அதிலகிராம் பெருங்காயத்தை பொடித்துப் போட்டுக் காய்ச்சுங்கள்.
அது குழம்பு பதத்தில் வந்ததும் அதில் ஒரு கரண்டி வீதம் எடுத்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட குன்மம் எனப்படுமஅல்சர் வயிற்றுவலி குணமாகும். - நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி குணமாகும்.
- நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் இட, மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறையும்.
- நொச்சிக் கொழுந்து, சுக்கு சேர்த்து அரைத்து, அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து லேகியம் போல கிண்டி ஒரமண்டலம் உட்கொண்டு வர சீதக்கழிச்சலினால் ஏற்படும் கடுப்பு குணமாகும்.
- நொச்சி இலையுடன் மிளகு சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிட மலேரியா சுரம் தணியும். வயிற்று வலி, உப்புசம், நாக்குப் பூச்சி, வாத நோய்களும் குணமாகும்.
- கருநொச்சி இலை, மருதாணி இலை – இவற்றை சம அளவு எடுத்து 2 எருக்கம் பூ சேர்த்து அரைத்து பூசி வர சொத்தநகம் குணமாகும்.
- நொச்சி இலையை நீரில் விட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும். அந்த நீரைககொண்டு பிள்ளை பெற்றவர்களை குளிப்பாட்டலாம்.
- ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், 100 மில்லி நல்லெண்ணெய், சடாமாஞ்சில், சுக்கி, கண்டங்கத்திரி வேர் 2 கிராமஎடுத்து, இவற்றை நொச்சி சாறு விட்டு அரைத்துக் கரைத் எரித்து, பக்குவத்தில் வடித்து தலை முழுகியும், உள்ளுக்குளகுடித்தும் வர ஆஸ்துமா, இருமல் குணமாகும்.
- நொச்சி இலையுடன் வெல்லம் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர உடலின் சூட்டை நீக்கி உடலுக்கு வன்மையஉண்டாக்கும்.
நன்றி: காகிதத்தில்