Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2013
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,660 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிறர் மீது நம்பிக்கை

இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை!

1998ம்ஆண்டு வரை பழைய இரும்பு வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருந்தவர்கள் இன்று இரும்புக்கம்பிகள் தயாரிக்கும் நான்கிற்கும் மேற்பட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களிடத்தில் 1200 நேரடியாக பணியாற்றும் பணியாளர்கள்…

300 மறைமுகப் பணியாளர்கள்….

200 டீலர்கள்

எப்படி சாத்தியம்? மாயமா? மந்திரமா? எதுவுமே இல்லை. கடுமையான உழைப்பு மட்டும் போதும் என்கிறார் திருச்சி அம்மன் பதவ பஙப கம்பிகளைத் தயாரிக்கும் அம்மன் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் திரு.ங.சோமசுந்தரம் அவர்கள். இவரது நேர்காணலில் சில துளிகள்……

உங்களின் குடும்பத்தைப் பற்றி…..

சிவகங்கை மாவட்டம் அழக நாச்சியாபுரம் அருகில் உள்ள சுக்காம்பட்டி எங்கள் முன்னோர் கிராமம். நாங்கள் ஆறாவது தலைமுறை. தவசியா பிள்ளை வகையறா என்று எங்கள் பரம்பரை துவங்குகிறது. என்னுடைய தந்தையார் அங்கேயே பள்ளி இறுதி வகுப்புவரை படித்துவிட்டு வேறு ஏதும் அங்கு செய்ய இயலாத காரணத்தினால் 1967ம் வருடம் திருச்சி வந்து கிடைத்த சின்னச் சின்ன வேலைகளைச் செய்கிறார். கையெழுத்து நன்றாக இருக்கும் அவருக்கு!…. கணக்கு எழுதிய அனுபவமும் இருந்ததால் ஒரு பழைய இரும்புக் கடையில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்தார். பழைய இரும்பு கொள்முதல், விற்பனை என்று 10 ஆண்டு காலங்கள் ஓடியது….

உங்களுக்கு முன்னுதாரணம் உங்கள் அப்பாதானா?

நிச்சயமாக நம்பிக்கைக்கு உதாரணம் என் தந்தையை நான் சொல்வேன். தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு ஊர் ஊராகப் போய் பழைய இரும்புகளை வாங்குவார். இப்போது உள்ளது போல தமிழ்நாட்டில் இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இவர் சேர்த்து வைத்த பழைய ஸ்கிராப்களை விற்று விடுவார். இதுதான் 1978 வரை இவருடைய பணி.

1979-ல் திருச்சியில் தனியாக ஒரு பழைய இரும்புக் கடையை துவக்கினார். பழைய இரும்பு வியாபாரத்தில் இருந்த அணுகுமுறை, நல்ல பெயர், நல்ல தொடர்புகள் இவருக்கு கை கொடுத்தது. எல்லா மாவட்டத்திலும் இருந்த நண்பர்கள் இவருக்கு எல்லா விதத்திலும் உதவினார்கள். நிறைய வியாபாரம் நடந்தது. சொந்தமாக குடோன் வாங்கும் அளவுக்கு நிதி நிலைமை சீரடைந்தது. பழைய இரும்பு ஸ்கிராப்களை பண்டல் போடுவதற்கு உரிய பண்டல் மெஷின் வாங்கி பண்டல் போட்டு வியாபாரம் செய்யுமளவுக்கு சீரான முன்னேற்றம்.

உங்களுடைய ஒத்துழைப்பு உங்கள் அப்பாவுக்கு எந்த அளவில் இருந்தது?

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே எங்கள் அப்பாவின் பழைய இரும்புக் கடைக்கு அடிக்கடி போய் வருவேன். என்னையும் அறியாமல் அந்தத் தொழில்மீது ஒரு பற்று ஏற்பட்டது. கோடை விடுமுறை என்றால் மற்ற நண்பர்கள் போன்று சினிமாவுக்குப் போக, ஊர் சுற்ற, நண்பர்களோடு விளையாட என்கிற ஆசை எல்லோரையும் போல எனக்கும் இருந்தது.

அதே சமயம் அப்பா வியாபார ரீதியில் படும் சிரமங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தாலும், மேலும் என் அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதாலும் அவருடனேயே இருந்து விடுவேன். குடோனிலிருந்து வரும் பழைய ஸ்கிராப்களை எடை போடுவது, லாரியில் ஏற்றி விடுவது, இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். என் 15 வயது முதல் ஒவ்வொரு அரை நாளையும் பழைய இரும்பு வியாபாரத்தில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்தேன். 1998-ல் முழுமையான வியாபார நுணுக்கங்களையும் அலுவலகம் மற்றும் வங்கி பணிகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

பழைய இரும்பு வியாபாரம் செய்த நீங்கள் இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் நிறுவனம் துவங்க முற்பட்டது எப்படி?

பழைய இரும்பு வியாபாரத்தில் இருந்து கிடைத்த அனுபவம் எதையும் சாதிக்கலாம் என்ற மனஉறுதி, தொழில் மீது கொண்ட அக்கறை, இயல்பாகவே நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற வெறி இவையாவும் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தது. ஏன் நாம் சொந்தமாக இரும்புக்கம்பிகள் தயாரிக்கும் உருட்டாலை தொடங்கக் கூடாது? என்ற சிந்தனை இருந்தது. 1998 -ல் நான் பட்டப் படிப்பில் கடைசி பரிட்சை எழுதிய உடனேயே இதற்கான வேலையை தந்தையுடன் சேர்ந்து ஆரம்பித்து விட்டேன்.

இந்த தொழிலின் அடுத்த நிலைக்கு போக வேண்டும். மேலும் மேலும் உயரப் பறக்க வேண்டும் என்ற எண்ணம் தினசரி மேலோங்கிக் கொண்டே வந்தது.

1998 – ஸ்ரீ அம்மன் ஸ்டீல் அலாய்டு இண்டஸ்டிரீஸ் என்ற பெயரில் திருச்சியில் உருட்டாலை ஆரம்பித்தோம்.

உங்கள் நிறுவனத்தின் தொடக்கம் பற்றி சொல்லுங்கள் ?

இரும்புத் தொழிலில் அனுபவம் வாய்ந்த திரு.தமிழரசு என்பவரை பங்குதாரராக இணைத்துக்கொண்டு தொழிலைத் தொடங்கினோம். மூலப்பொருளாகிய பில்லட்ஸ் வாங்கி அதிலிருந்து கம்பிகள் தயாரிக்க தொடங்கினோம்..

உருட்டாலை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கி விட்டோமே ஒழிய அதில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் ஆறு மாதத்தில் தொழிலை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். கொள்முதல் செலவு, உற்பத்தி செலவு இரண்டுமே விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை விட பல மடங்கு எகிறிப் போய் விட்டது. ஆலை தொடங்கிய சில மாதத்திற்குள் சுமார் 40 லட்சம் வரை நஷ்டமாகிவிட்டது.

ஆரம்பகட்ட தோல்வி உங்களை துவளச் செய்து விட்டதா?

இல்லை. என்னை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைத்தது. கொஞ்ச நாள் எல்லா வேலை களையும் நிறுத்திவிட்டு ஏன் நஷ்டம் ஏற்படுகின்றது என்று தீவிரமாக ஆய்வு செய்தோம்.

உற்பத்தியில் மூலப்பொருட்கள் 100 சதவீதத்தை உருக்கி உருட்டி கம்பியாக மாற்றும் போது அவை அப்படியே அதே அளவு 100 சதவிகித கம்பியாக வெளியே வராது. கணிசமான அளவு வீணாகிவிடும்.

இந்த விரயத்தின் அளவு மிகவும் அதிகரித்துவிட்டது தெரியாமல் அதை சரி செய்யாமல் திரும்பத்திரும்ப இயக்கியதால்தான் நஷ்டத்தின் அளவு மிக அதிகமாகிவிட்டது.

என்ன செய்யலாம்? மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் இடத்தை மாற்றிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து விசாகப் பட்டினம் ஸ்டீல் ப்ளான்டில் மூலப்பொருளாகிய பில்லட்ஸ்களை வாங்க முடிவு செய்தோம்.

முன்பு ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்தோம். அதிக அளவு விரயம் கட்டுப்படுத்தப் பட்டது, எங்களுககு அது பெரிய ஆறுதலாக இருந்தது. தற்போது எங்களுக்கு தேவையான பில்லட்ஸ்களை நாங்களே உற்பத்தி செய்கின்றோம்.

உங்கள் வியாபாரத்தின் துவக்கம் எப்படி இருந்தது?

கம்பிகள் நல்ல தரமான கம்பிகளாக கிடைத்தன. உடன் ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெற்றோம். நல்ல தொடக்கமாக அமைந்தது அது. மக்களுக்கு இது குறித்து விளம்பரப்படுத்த விரும்பினோம். நல்ல தரம், சரியான விலை ஐ.எஸ்.ஐ சான்றிதழ் இவைகளை மக்களுக்கு முன் எடுத்துச் சென்றால்தான் அவர்களின் கவனத்தை நாம் பெறமுடியும் என்று முடிவெடுத்து 2000 ம் வருடம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த ஆரம்பித்தோம்.

இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம் ஆகிய இடங்களில் 20 டீலர்களை நியமனம் செய்தோம். அன்றைக்கு இந்த அளவில் தான் செய்ய முடிந்தது.

நானே தனிப்பட்ட முறையிலே ஒவ்வொரு கடைக்காரரையும் சென்று பார்த்து விளக்குவேன். பொதுவாக உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகள் மட்டுமே கடைக்காரர்களைச் சந்திப்பார்கள். ஆனால் கம்பி உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனத்தின் உரிமையாளரே சில்லரை விற்பனைக் கடைகளுக்கு செல்ல மாட்டார்கள். என்னுடைய இந்த அணுகும் விதம் கடைக் காரர்களுக்கும் டீலர்களுக்கும் மிகவும் பிடித்து விட்டது.

வியாபாரத்தில் உங்களுக்கு போட்டிகள் எப்படி இருந்தது?

இந்த கால கட்டத்தில் எங்களைவிட ஆறு மடங்கு பெரிய நிறுவனம் அப்போது ஒன்று இருந்தது. அந்நிறுவனத்தின் கம்பிகள் மிகப்பெரிய அளவில் விற்பனை ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. எல்லாக் கடைகளுக்கும் சென்று ஒவ்வொரு டீலர்களிடத்திலும் அந்த நிறுவனத்தின் 80% கம்பிகளை விற்பனை செய்யுங்கள். எங்கள் நிறுவனத்தின் கம்பிகளை 20% விற்பனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம். சமமான தரம், சரியான விலை என்ற புரிதலை ஏற்படுத்தினோம். தொடர்ந்து 4 மாதம் டூர் சென்று தமிழ்நாடு முழுக்கச்சென்றோம். அடுத்த சில மாதங்களில் எங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. அம்மன் பதவ கம்பிகள் தரமானவை. நியாயமான விலை என்று டீலர்களும், மக்களும் உணர ஆரம்பித்தார்கள்.

உங்கள் வெற்றியினை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அவர்களுடைய தயாரிப்புகென்று ஒரு தனித் தன்மை இருக்க வேண்டும். உற்பத்தி பொருள் களின் விற்பனைக்காக உண்மைத்தன்மையை மட்டுமே விளம்பரப்படுத்த வேண்டும்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விளம்பர வாசகங்கள் அப்போதைய பரபரப்புக்கு பயன்படுகிறதே ஒழிய, நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது. நம்முடைய டழ்ர்க்ன்ஸ்ரீற்தான் பேசப்பட வேண்டும். எங்களுடைய கம்பிகளின் உயர்தரம் பற்றி பொறியாளர்கள், கம்பி கட்டுனர்கள், இவர்களுக்கு நன்கு தெரியும். தொடர்ச்சியாக உற்பத்தியில் தரத்தன்மை நல்லபடியாக கடைப் பிடிக்கப்பட வேண்டும். இம்முறையை நாங்கள் இன்றளவும் கடைப்பிடிக்கின்றோம். இதனால் நாங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றோம்.

உங்களது அடுத்த பயணம்?

இப்போது திருச்சியில் உருட்டாலை, உருக்காலை, காரைக்காலில் ஒரு தொழிற்சாலை, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு ஆலை, இராதா புரம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு ஊர் களிலும் 1250 ஓ.ர. மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு காற்றாலைகள் அமைத்துள்ளோம். இது எங்கள் மின் தேவையின் 80% அளவை பூர்த்தி செய்கிறது.

இப்படியாக வெற்றியை நோக்கி பயணப் பட்டுக்கொண்டே செல்கிறோம். இந்த வெற்றி ஒரு டீம் ஒர்க். என் தந்தை, எனது சகோதரன், அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், டீலர்கள் மக்கள், இப்படி எல்லோருமே இந்த வெற்றிக்கு காரணம்.

தங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றி?

விருதுகளையும், பரிசுகளையும் நோக்கி நான் பயணப்படவில்லை, மக்களுக்கு சரியான விலையில் தரமான இரும்புக்கம்பிகள் கிடைக்க வேண்டும். இதுதான் எங்கள் ஒரே தாரக மந்திரம்.

* 2006 – 2007 -ல் தமிழக அரசின் சிறந்த தொழில் முனைவோர் விருது,

* இந்திய தொழில் கூட்டமைப்பின் 2009க்கான சிறந்த வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கான விருது,

* உலகின் மிகச்சிறந்த லண்டன் நிறுவனத்தின் ஐநஞ 9001 தரச்சான்றிதழ்.

* இப்படி பல விருதுகள் கிடைத்தாலும் மக்கள் எங்கள் நிறுவநத் தயாரிப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக கருதுகின்றோம்.

புதிதாக தொழில் துவங்க விரும்பும் இளைஞர் களுக்கு அறிவுரை :

முதலில் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் தந்தையின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களை மறக்காதீர்கள்.

மேலும் வறுமையைக் கண்டு பயந்து விடாதீர்கள்.

1985-ம் ஆண்டு வரைக்கும் 15ல10 என்ற அளவில் உள்ள சிறிய வீட்டில்தான் நாங்கள் குடும்பத்தோடு வசித்தோம்.

ஹால், கிச்சன், பூஜை அறை எல்லாமும் 150 சதுர அடிக்குள் அடங்கும். இப்படி பல நிலைகளைக் கடந்துதான் முன்னுக்கு வந்திருக்கின்றோம்.

* உங்கள் திறமைகளை உணர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

* அடிபடுங்கள், அடிபடத் தயாராகுங்கள்.

* சேமிப்பு, சிக்கனம் இரண்டும் இரண்டு கண்கள்.

* போட்டிகள் நிறைந்த உலகம் என்று கலங்காதீர்கள்.

* போட்டிகள் வெல்வதற்கே தவிர வீழ்வதற்கல்ல!

* எதிர் நீச்சல் போட்டு வெற்றி காணுங்கள்..

* வளமாக வருங்காலம் உங்கள் பின்னால் நிச்சயம் வரும். பிறர் மீது நம்பிக்கை

நேர்காணல்: சிவகுருநாதன்

அம்மன் T.R.Y திரு.சோமசுந்தரம்

நன்றி: நம்பிக்கை