Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2014
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,834 முறை படிக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க கம்யூனிட்டி கல்லூரிகள் – ஒரு விரிவான ஆய்வு

அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கம்யூனிட்டி கல்லூரிகள் பற்றி தெளிவாக தெரிந்திருப்பது நல்லது. ஏனெனில், அந்தக் கல்லூரிகள் 2 ஆண்டுகள் காலஅளவுள்ள அசோசியேட் பட்டப் படிப்பை வழங்குபவை.

குறைவான கட்டணம் மற்றும் விரைவில் படிப்பை முடித்தல் உள்ளிட்ட பலவிதமான சிறப்பம்சங்கள் கம்யூனிட்டி கல்லூரிகளில் படிப்பதால் கிடைக்கின்றன. கம்யூனிட்டி கல்லூரிகளின் பலவிதமான அம்சங்கள் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.

அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள்

அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள், டெக்னிக்கல் பயிற்சி மற்றும் திறன் தொடர்பான படிப்புகளை, பல்வேறு துறைகளில் வழங்குவதோடு, இளநிலைப் படிப்பில், 2 ஆண்டுகளோடு நிறைவுசெய்யும் நபர்களுக்கு அசோசியேட் பட்டத்தையும் வழங்குகிறது.

பள்ளிப் படிப்பை முழுமையாக நிறைவு செய்தவர்கள், கம்யூனிட்டி கல்லூரியில் சேரலாம் அல்லது ஒருவர் தன்னுடைய தொழிலில் எப்பொழுது மறுபயிற்சியும், மறுதிறன் வளர்ப்பும் தேவை என்று நினைக்கிறார்களோ, அப்போதும் கம்யூனிட்டி கல்லூரியில் சேரலாம். ஆனால், அவர்கள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இக்கல்லூரியால் வழங்கப்படும் அசோசியேட் பட்டத்தை பெற்ற ஒருவர், பணி வாய்ப்புகளைப் பெற முடியும். 4 ஆண்டு இளநிலைப் படிப்பை நிறைவு செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேசமயம், இந்த பட்டம் பெற்றவர்கள், மீண்டும் கூடுதலாக 2 ஆண்டுகள் படித்து, இளநிலைப் பட்டத்தையும் பெற முடியும். இதற்கு, கிரெடிட்டுகளை(credits) மாற்றம் செய்ய வேண்டும்.

பல கம்யூனிட்டி கல்லூரிகள், அருகிலிருக்கும் அல்லது ஒரே மாநிலத்திற்குள் இருக்கும் பல்கலைகள் அல்லது கல்லூரிகள் ஆகியவற்றுடன், எளிதான கிரெடிட் மாற்றங்கள் தொடர்பாக ஒப்பந்தம் வைத்துள்ளன.

ரெகுலர் கல்லூரிகளிலிருந்து இந்த கம்யூனிட்டி கல்லூரிகள் எந்த வகையில் மாறுபட்டுள்ளன?

கம்யூனிட்டி கல்லூரிகள், பொதுவாக, 2 ஆண்டு படிப்புகளை வழங்குகின்றன.  2 ஆண்டு நிறைவில், அசோசியேட் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும், பட்டப் படிப்பு அல்லாத படிப்புகள் மற்றும் குறுகியகால சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகின்றன.
இதர உயர்கல்வி கல்லூரிகள் அல்லது பல்கலைகளை எடுத்துக்கொண்டால், அவை, 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.  4 ஆண்டுகள் முடிவில் இளநிலைப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, முதுநிலைப் படிப்புகள் மற்றும் டாக்டரேட் படிப்புகளும், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற புரபஷனல் படிப்புகளும், ரெகுலர் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஆனால், இத்தகையப் படிப்புகளை கம்யூனிட்டி கல்லூரிகள் வழங்குவதில்லை.

கம்யூனிட்டி கல்லூரிகள், திறந்தவெளி மாணவர் சேர்க்கை கொள்கையைப் பின்பற்றுகின்றன மற்றும் அதன் சேர்க்கை நடைமுறைகள், ரெகுலர் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இலகுவானவை. அதேபோன்று, கம்யூனிட்டி கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் மிக குறைவு.

கம்யூனிட்டி கல்லூரிகள் அரசின் நிதியுதவியைப் பெறுகின்றனவா?

அரசு நிதியுதவிப் பெறும் கல்லூரிகளும் உண்டு மற்றும் சுயமாக நடத்தப்படும் கம்யூனிட்டி கல்லூரிகளும் உண்டு.

கம்யூனிட்டி கல்லூரிகளில் சேர்வது எப்படி? மாணவர்கள் ஏதேனும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா?

* ஒவ்வொரு கம்யூனிட்டி கல்லூரியும், தனித்தனி சேர்க்கை நடைமுறைகளைக் கொண்டுள்ளன. எனவே, அதுகுறித்து தெரிந்துகொள்ள, நீங்கள் சேர விரும்பும் கம்யூனிட்டி கல்லூரியின் இணையதளத்தை சென்று பார்க்க வேண்டும். கீழே சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

* ஒரு கம்யூனிட்டி கல்லூரியில் சேர, குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்களுக்கு முன்னரே நமது தயாராதலை தொடங்கிவிட வேண்டும். இதன்மூலம், நீங்கள் நன்கு யோசிப்பதற்கு தேவையான அவகாசம் கிடைக்கும் மற்றும் தகுதித் தேர்வை எழுதுவதற்கும் தயாராக முடியும். மேலும், உங்களின் விண்ணப்பத்தையும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியும்.

* விண்ணப்பிக்கும் கடைசித் தேதி, விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவைப்படக்கூடிய இதர விண்ணப்பங்கள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட கம்யூனிட்டி கல்லூரி இணையதளத்தில் கிடைக்கும். வெளிநாட்டு மாணவர்களுக்கு தனி வகையான விண்ணப்ப படிவங்கள் இருக்கும். சில கம்யூனிட்டி கல்லூரிகள், படிப்பு தொடங்கும் தேதி நெருக்கத்தில் கூட, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றன.

* சில கல்லூரிகளில், Rolling admission என்ற முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் படி, நீங்கள் ஒரு ஆண்டின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அடுத்த சேர்க்கைக்காக பரிசீலிக்கப்படும்.

* சர்வதேச மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்துடன், TOEFL அல்லது IELTS போன்ற ஆங்கிலத் திறனை நீரூபிக்கத்தக்க தேர்வு மதிப்பெண்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கம்யூனிட்டி கல்லூரிகள், ஆங்கிலத் திறன் நிரூபித்தலுக்கான குறைந்தளவு தேர்வு மதிப்பெண்களையும் (low scores) ஏற்றுக் கொள்கின்றன.

நீங்கள் TOEFL அல்லது IELTS தேர்வுகளை எழுதியிருந்தாலும், இல்லாவிட்டாலும், கம்யூனிட்டி கல்லூரியின் வளாகத்திற்குள் வந்தபின்னர், சம்பந்தப்பட்ட கல்லூரி நடத்தும் English Placement Test என்ற பெயரிலான ஒரு தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். போதுமான ஆங்கில அறிவுடைய மாணவர்கள், உடனடியாக தங்களின் படிப்பை தொடங்கலாம். போதுமான ஆங்கில அறிவு இல்லாத மாணவர்கள், படிப்பை தொடங்குவதற்கு முன்பாக, English as a Second Language(ESL) என்ற படிப்பை மேற்கொள்ள வேண்டும்.

* பல கம்யூனிட்டி கல்லூரிகளில், SAT (Scholastic Aptitude Test) தேர்வு மதிப்பெண்கள் தேவைப்படுவதில்லை. அதேசமயம், சில கம்யூனிட்டி கல்லூரிகள், SAT எழுதாத மாணவர்களுக்கு, பிளேஸ்மென்ட் தேர்வுகளை நடத்துகின்றன. உங்களின் பழைய கல்வித் தகுதிகளுக்கு ஆதாரமாக, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

* பொருத்தமான பரிந்துரைக் கடிதங்களை(Letter of Recommendation) சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் ஆசிரியர், ஒரு நிறுவனம் அல்லது இதர தொழில் நிபுணர்கள் ஆகியோர்களிடமிருந்து பரிந்துரைக் கடிதங்களைப் பெறலாம்.

* சில கம்யூனிட்டி கல்லூரிகள், கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தலைப்பிலோ அல்லது உங்களுக்கு பிடித்த தலைப்பிலோ, ஒரு பெர்சனல் கட்டுரையை எழுதி சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளும்.

* மேலும், உங்களின் நிதிநிலையை தெளிவுபடுத்தும் வகையில், அதாவது, கல்விக் கட்டணம், அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான இதர செலவினங்கள் ஆகியவற்றை விளக்கும் வகையிலான தெளிவான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

* சில விண்ணப்பங்களில், extra curricular activities மற்றும் உங்களின் பொழுதுபோக்கு விருப்பங்கள் குறித்த விபரங்களை குறிப்பிடும் வகையிலான column இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அதுகுறித்த விபரங்களை நீங்கள் தனியே வழங்கலாம். இது, உங்களின் விண்ணப்பத்திற்கு வலுசேர்க்க உதவும்.

* மேலும், சில கம்யூனிட்டி கல்லூரிகள், தங்களிடம் விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களை, தொலைபேசி நேர்காணலில் பங்கேற்கும்படியும் கேட்டுக் கொள்ளும்.

அமெரிக்காவிலுள்ள முதன்மையான கம்யூனிட்டி கல்லூரிகள் எவை? அந்தக் கல்லூரிகள் வழங்கும் படிப்புகள் யாவை?

அமெரிக்காவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 1,200 கம்யூனிட்டி கல்லூகளில் வழங்கப்படும் பல்வேறான படிப்புகளில், தங்களுக்கு விருப்பமானதை சர்வதேச மாணவர்கள் தேர்வு செய்ய முடியும். அரசியல் அறிவியல், உளவியல், கிராபிக் டிசைன், அக்கவுன்டிங், வணிக மேலாண்மை, பொறியியல், கன்சர்வேஷன், விலங்கியல், வேளாண்மை, கார்பென்டரி மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அசோசியேட் பட்டத்திற்கான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கீழ்கண்ட இணையதளங்கள், உங்களுக்கான கம்யூனிட்டி கல்லூரிகளை கண்டறிவதில் உதவி புரியும். அவை,

www.aacc.nche.edu/study-in-america
www.aacc.nche.edu/AboutCC/Pages/fastfactsfactsheet.aspx
www.petersons.com

ஒரு கம்யூனிட்டி கல்லூரியில் படிக்க எவ்வளவு செலவாகும்?

அமெரிக்க கம்யூனிட்டி கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், அந்நாட்டில் 4 ஆண்டு படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளின் கட்டணங்களோடு ஒப்பிடுகையில், பாதியளவே வசூலிக்கப்படும்.

பொதுவாக, ஒரு ஆண்டிற்கான கல்விக் கட்டணம் 7,000 அமெரிக்க டாலர்கள் முதல், 15,000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கு சென்று விபரங்களைத் தெளிவாக அறிந்துகொள்வது மேலானது.

ஒரு கம்யூனிட்டி கல்லூரியில் இருந்து, 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை வழங்கும் ஒரு வழக்கமான கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கோ எந்த முறையில் ஒரு மாணவர் மாறிக் கொள்ளலாமா?

இளநிலைப் படிப்பில், 2 ஆண்டுகள் கம்யூனிட்டி கல்லூரியில் படித்துவிட்டு, அசோசியேட் பட்டம்பெற்று, பின்னர், இளநிலைப் பட்டம் பெறும் பொருட்டு, அடுத்த 2 ஆண்டுகளை நிறைவுசெய்யும் வகையில், நார்மல் கல்லூரி அல்லது பல்கலைக்கு மாறுவது, செலவினங்களை குறைப்பது என்ற அளவில், ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும்.

அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிட்டி கல்லூரியில் படித்து பெறப்பட்ட கிரடிட்டுகள், இதர நார்மல் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பொதுவாக, ஒரே மாநிலத்திற்குள் மாற்றம் பெறுவதும், சம்பந்தப்பட்ட கம்யூனிட்டி கல்லூரியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கல்லூரி அல்லது பல்கலையில் இடம் பெறுவதும் எளிதான ஒன்று.

சில நார்மல் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள், சில குறிப்பிட்ட படிப்புகளில், கம்யூனிட்டி கல்லூரியில் படித்த ஒரு மாணவர், குறைந்தளவு GPA பெற்றிருந்தாலும்கூட, இடம் வழங்குகின்றன. நார்மல் கல்லூரி அல்லது பல்கலைகளுக்கு மாற்றலை விரும்பும் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள், அந்த நேரத்தில், சர்வதேச சேர்க்கை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆலோசிக்க வேண்டும். அதன்மூலம், மாறுதலுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த தெளிவான அறிவைப்பெற முடியும்.

சில கம்யூனிட்டி கல்லூரிகள், சில குறிப்பிட்ட துறை படிப்புகளில் மட்டும், முழுஅளவிலான 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படிக்க விரும்பும் ஒரு மாற்றுத்திறனாளி வெளிநாட்டு மாணவர், தங்களை கவனித்துக் கொள்ளும்பொருட்டு, பெற்றோர்களை உடன் அழைத்துச்செல்ல முடியுமா?

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அங்கு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. அங்கே, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாழ முடியும். படிப்பின்போது, தங்களுக்கு தனிப்பட்ட உதவியாளர்களை வைத்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி சர்வதேச மாணவர்கள், www.miusa.org/plan/coming-to-usa என்ற வலைதளம் சென்று விபரங்களை அறியலாம்.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களுக்குப் பொருத்தமான வகையிலான கல்வி நிறுவனத்தை, இடம், செலவினம் மற்றும் படிப்பின் தரம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது முக்கியம்.

சிறிய வகுப்புகள், தனிப்பட்ட கவனிப்பு மற்றும் ஆதரவான சூழல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் பார்த்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு கம்யூனிட்டி கல்லூரிகள் சிறந்த இடங்களாகும்.

தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியில் கிடைக்கும் தங்களுக்கான வசதிகள், உதவிகள் மற்றும் சலுகைகள் குறித்து, சர்வதேச அலுவலகம் அல்லது மாற்றுத்திறனாளி அலுவலகம் ஆகியவற்றில் விசாரித்து அறிந்துகொள்வது நல்லது. மேலும், அமெரிக்காவில் படிக்கும் மாற்றுத் திறனாளிகள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வைத்துக்கொள்வது சிறந்தது.

மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவக் காரணங்களுக்காக, தங்களின் தாய் நாட்டிற்கு வந்துசெல்ல விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், அதன்பொருட்டு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் தெளிவாக அறிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவது உசிதம்.

கம்யூனிட்டி கல்லூரியில் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் யாவை?

பெருவாரியான மாணவர்களுக்கு பணி தொடர்பான படிப்பு மற்றும் பயிற்சிகளை அளிப்பதில், கம்யூனிட்டி கல்லூரிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதன் சில முக்கிய சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

* குறைவான கல்விக் கட்டணம்

* 2 ஆண்டு படிப்பை நிறைவுசெய்த பின்னர், நார்மல் பல்கலை அல்லது கல்லுரிக்கு மாறி, இளநிலைப் படிப்பை நிறைவுசெய்யும் வாய்ப்பு

* நல்ல ஆங்கிலத் திறன் நிச்சயம் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயமின்மை

* கற்பித்தலுக்கு முக்கியத்துவம்

* சிறிய அளவு வகுப்பறை

* நடைமுறை பயிற்சிகள்

* பல்வேறு வகையான படிப்புகள்

* மாணவர் ஆதரவு சேவைகள்

* சம்பாதிக்கும் அசோசியேட் பட்டதாரிகளுக்கும், இளநிலைப் பட்டதாரிகளுக்கும் இடையிலான கூடுதல் ஆண்டு விருப்ப நடைமுறை பயிற்சி(Optional practical Training).

OPT மூலம், ஒரு வெளிநாட்டு மாணவர், அமெரிக்காவில் ஒவ்வொரு பட்டத்தைப் பெற்ற பின்னரும், 1 ஆண்டிற்கு, F1 விசாவின் கீழ், அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகிறார்.