சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கிலோ, மட்டன் – 1 1/2 கிலோ, நெய் 250 கிராம், தயிர் – 400 மில்லி (2 டம்ளர்), பூண்டு – 100 கிராம், இஞ்சி – 75 கிராம் , பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம், பெரிய வெங்காயம் – 1/2 கிலோ, தக்காளி – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 50 கிராம், எலுமிச்சை – 1, பொதினா, கொத்தமல்லிதழை – கையளவு, கேசரிப்பவுடர் – சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 50 கிராம், உப்பு – தேவையான அளவு
சமையல் குறிப்பு: விபரம் செய்வது: எளிது, நபர்கள்: 4, தயாராகும் நேரம்: 15 (நிமிடம்), சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)
முன்னேற்பாடுகள்: 1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் 2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும் 3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
செய்முறை:
- 1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்
- 2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்
- 3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
- 4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்
- 5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்
- 6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்
- 8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்
- 9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்
- 10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்
- 11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.
- பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.