இந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்!

thomasஅமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிவியலுக்கான தேசிய விருது, அங்கு வசிக்கும் தாமஸ் கைலாத் (வயது 79) என்ற இந்தியருக்கு வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர், தாமஸ் கைலாத்(79). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் 1956-இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக் கழகத்தில் மேற்கண்ட துறைகளை தேர்வு செய்து, பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் அங்குள்ள எம்.ஐ.டி.யில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் முடித்தார். எம்.ஐ.டி.யில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய மாணவர், கைலாத் ஆவார். பின்னர் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழ கத்தின் மின்னியல் பொறியியல் துறையில் 1963-ஆம் ஆண்டு இணைப் பேராசிரியர் பணியில் சேர்ந்த இவர், 1968-இல் பேராசிரியராக உயர்ந்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஒபாமா இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவில் இருந்து 22 வயதில் அமெரிக்கா வந்த தாமஸ் கைலாத், தகவல் கோட்பாடு மற்றும் புள்ளிவிவர பிரிவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதுடன், 100–க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கியதாக தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட் பம் மற்றும் நிர்மாண அறிவியல் தளத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து, இந்த துறை தொடர்பாக பல நூல்களையும் இயற்றியுள்ள தாமஸ் கைலாத்தின் சேவையை பாராட்டி கடந்த 2009ஆ-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

 

வாஷிங்டனில் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி

 

2cf7f42d0fecaaa430911f93b08ff75e_Mஇந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் வாஷிங்டன் நகரின் நீதிபதியாக நியமிக உத்தரவிடப்பட்டுள்ளார். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜினியா சட்டக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ள அமித், இப்போது ஜுக்கர் மேன் ஸ்பீடர் எல்எல்பி (சட்ட ஆலோசனை) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

அமித் பிரிவர்தன் மேத்தா என்ற இந்த நபர், பல வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்ற சட்ட வல்லுநராவார்.

அமித் பிரிவர்தன் மேத்தாவை நீதிபதியாக நியமனம் செய்தது அங்குள்ள இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் இந்த உத்தரவை செனட் சபையின் முக்கிய குழுவான செனட் நீதித்துறை குழு நேற்று முன்தினம் அங்கீகரித்துள்ளது.

இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.