Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2014
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,121 முறை படிக்கப்பட்டுள்ளது!

பணியிடத்தில் பாலியல் தொல்லை !

பணியிடங்களில் பாலியல் தொல்லை– ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல

ஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.

தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் , அவருடன் பணிபுரியும் சக பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கவிதா, இது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கும் ஒரு சம்பவம் என்றார்.

இந்தியாவில் பிற துறைகளைப் போலவே ஊடகத்துறையிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் ஊடகத்துறையில் இது போன்ற சம்பவங்கள் சராசரியாக இந்தியாவில் நடப்பதைவிட சற்று அதிகமாகவே நடக்கின்றன என்றார் அவர்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட அவர், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஊடகவியலாளருக்கு இன்னும் வேறு வேலையே கிடைக்கவில்லை, இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது படிந்துவிடும் கறை காரணமாக, அவர்கள் வேறு வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் குறைவது வருந்த்தக்கது என்றார்.

இது போன்ற சம்பவங்களை தடுக்க பிரத்தியேகமாக, பணிபுரியும் மகளிர் பாலியல் தொல்லைத் தடுப்புச் சட்டம் என்ற ஒன்று வந்தால் அது ஓரளவு பலனளிக்கும் என்று கூறிய அவர், ஆனாலும், இது நகர்ப்புறத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பலன் தரும், ஆனால் கிராமப்புறங்களில் விவசாயக் கூலிகளாகவும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும் பணி புரியும் பெண்களுக்கு பெரிய பாதுகாப்பைத் தருமா என்பது கேள்விக்குறியே என்றார் கவிதா.

பாலியல் தொல்லை : ஒரு நிஜ அனுபவம்

பாலியல் சித்ரவதை (Sexual Harassment) தொடர்பாகத் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் விவகாரம் பற்றி. இதுபோன்ற சம்பவங்கள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சினையை நான் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன். பாலியல் சித்ரவதை தொடர்பான புகார்கள் பொதுவாக எப்படிக் கையாளப்படுகின்றன என்பதற்கு நான் அறிந்த ஒரு சம்பவம் நல்ல உதாரணம்.   என் தோழி ஒரு பத்திரிகையாளார். பிரபல மீடியா நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். தெளிவான பார்வையும், நோக்கும் கொண்டவள். ஒருமுறை நாட்டின் பிரபல திரைப்பட விழாவுக்கு அலுவலகம் சார்பில் சென்றிருந்தாள். அந்தத் திரைப்பட விழாவுக்கு அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின், துணைநிறுவனத்தைச் சேர்ந்த நடுத்தர வயது ஆண் நிருபரும் வந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு ஊரில் வேலை பார்ப்ப தால், நேரடி அறிமுகம் இல்லை. அந்த ஆணும் நட்பான தன்மையை வெளிப்படுத்துபவராக, என் தோழிக்குத் தோன்றவில்லை. பத்திரிகையாளர்களுக்கு ஒரே ஹோட்டலில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.   அத்துமீறல்

பல நாட்கள் நடக்கும் திரைப்பட விழாவின் ஒரு நாள் நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவை முடித்துக்கொண்டு, என் தோழி களைப்புடன் அறைக்குத் திரும்பியிருக்கிறாள். அப்போது அந்த ஆண் நிருபர், திடீரென என் தோழியின் அறைக்குள் நுழைந்து, தோழியை நெருங்கியிருக்கிறார். சட்டென்று சுதாரித்துக்கொண்டு கோபமடைந்த என் தோழி, சத்தமாகக் கத்தி அந்த நபரை வெளியேறச் சொல்லி, வெளியே பிடித்துத் தள்ளிவிட்டிருக்கிறாள். பிறகு படாரெனக் கதவையும் அடைத்திருக்கிறாள். பெரிய அதிர்ச்சி அடையாத அந்த ஆண் நிருபர், தன் அறைக்குத் திரும்பியிருக்கிறார்.   முதல் நாள் இரவு இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்க, அடுத்த நாள் காலையில் பத்திரிகையாளர்களுக்கான ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் மேடையில் என் தோழி அமர்ந்திருக்க, பின்னால் அந்த ஆள் உட்கார்ந்து இருந்திருக்கிறார். விவாதம் தீவிரமாக இருந்த நேரத்தில், திடீரென என் தோழியைக் காலால் நிமிண்ட ஆரம்பித்த அந்த ஆள், சட்டென்று தோழியின் உடலில் கையையும் வைத்துள்ளார்.   ஆண்களின் மன வக்கிரங்கள் எந்த நேரத்தில் எப்படி வடிவெடுக்கும் என்பதைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது போலிருக்கிறது. ஒரு பொது மேடையில் சுற்றிப் பலர் இருக்க, எதிரே பார்வையாளர்களும் இருக்கும் நிலையிலும்கூட, சில ஆண்களின் செயல்பாடுகள் இப்ப டித்தான் இருக்கின்றன. முந்தைய நாள் தைரியமாக அந்த ஆளை வெளியே தள்ளி கதவைச் சாத்திய என் தோழியால், இரண்டாவது நாள் எதையும் செய்ய முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் அவள் இருந்திருக்கிறாள்.   நிர்வாகம் தந்த அதிர்ச்சி

விவாத நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகத் தனது எடிட்டரைப் போனில் தொடர்புகொண்டு அவள் புகார் செய்தாள். உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், அவள் அதைப் பேசாமல் விட்டுவிடத் தயாராக இல்லை. தன் புகாரை விரிவான ஒரு மின்னஞ்சலாக எடிட்டருக்கு அனுப்ப, எடிட்டரும் அந்தப் புகாரை முறைப்படி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறார்.   ஆனால், நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த பதிலோ என் தோழிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தன. முதலில் “குறிப்பிட்ட அந்த ஆண் நிருபர், பொதுவாகவே அப்படி நடந்துகொள்பவர் இல்லை. தன் துறையில் அனுபவஸ்தர். ஏதோ ஒரு நிலையில், இந்தத் தவறைச் செய்துவிட்டார். எங்கள் ஊரில் வேலை பார்த்தபோது, அவரைப் பற்றி ஒற்றைப் புகார்கூடக் கிடையாது” என்றார்கள்.   பிறகு, “அவர் சினிமாத் துறையில் இருப்பவர். சினிமாத் துறையில் இதுபோல நடப்பது சகஜம். அந்த நினைப்பில்தான் உங்களிடமும் அப்படி நடந்துகொண்டுவிட்டார்” என்றனர்.   துணை நிறுவனத்தின் எடிட்டரும் என் தோழியை அழைத்து, “இதைப் பெரிய விஷயமாக்க வேண்டாம். நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள், அவர் ரொம்ப நல்லவர்” என்றிருக்கிறார்.   ஒட்டுமொத்தமாக நிர்வாகத்தின் எண்ணம் எல்லாம், நீ எந்த வகையிலும் பாலியல் தாக்குதலுக்கோ, பாலியல் பலாத்காரத்துக்கோ உள்ளாகவில்லை. அப்புறம் ஏன் பிரச்சினையைப் பெரிதாக்குகிறாய் என்பதுதான்.   இவ்வளவுக்கும் அந்த நிறுவனம் முற்போக்கு நிறுவனம் என்று பெயர் பெற்றது. விசாகா நடைமுறைகளைப் பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது. ஆனால், அந்த நிறுவனத்தில் விசாகா நடைமுறைகளின் முக்கிய அம்சமான புகார் குழு இல்லை. மேற்கண்ட சம்பவத்துக்குப் பிறகும் அப்படி ஒரு குழு உருவாக்கப்படவில்லை.   என் தோழி பேசாமலிருக்கத் தயாராக இல்லாததால், கடைசியாக “ஆண் நிருபருக்கு இப்போது வாய்மொழி எச்சரிக்கை கொடுத்துள்ளோம். மீண்டும் ஒரு முறை தவறு செய்தால், அவருக்கு மெமோ கொடுப்போம். அவரது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று நிறுவனத்தின் சி.இ.ஓ. மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.   இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் வெளிப் பிம்பத்துக்கு நேரெதிராக நிர்வாகத்தின் அணுகுமுறை இருந்தது. தெஹல்கா விஷயத்தில், அந்த இதழ் மிகவும் முற்போக்கானதாக அறியப்பட்டு, தனக்கு என்றொரு பிரச்சினை வந்தபோது நேரெதிராக நடந்துகொண்டது. இந்தச் சம்பவமும் அதையே பிரதிபலித்தது.   அந்த ஆண் நிருபரின் செயலை அந்த நிர்வாகம் கடைசிவரை ஒழுங்கீனமாகக் கருதாமல், பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் கைகழுவிவிட்டது. என் தோழியின் புகார் எந்த வகையிலும் நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை.   சுதந்திரத்துக்கு ஆபத்து

இந்த விவகாரத்தில் அந்த ஆள் எல்லை மீறியா நடந்துகொண்டார் என்றுகூடச் சிலருக்குத் தோன்றலாம். ஒரு பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைவதும், ஒரு பெண்ணைத் தொடுவதும் நிச்சயம் அத்துமீறலே. ஒரு நபரைத் தாக்கினால்தான் வன்முறை என்பதில்லை. பாலியல் சித்ரவதையும், ஒரு வன்முறைதான். பாலியல் தொல்லைகள், ஒரு பெண்ணின் சுயத்தையும் சுதந்திரத்தையும் கேள்விக்கு உட்படுத்தி, அவளை அவமானத்தில் தள்ளுகின்றன.   ஆனால், நான் கேள்விப்பட்ட பல சம்பவங்கள் இதைவிட பெரிய அதிர்ச்சியை அளிப்பவையாக இருந்தும், அவை எதுவும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களிடமோ, குறைந்தபட்சம் ஹெச்.ஆர். துறையினரிடமோகூட புகாராகப் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, காவல்துறையோ, அரசோ உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதும் புகார் பதிவைக் குறைக்கிறது.   ஆனால், நம் சுயத்தையே புதைக்கும் இது போன்ற வக்கிர ஆண்களுக்கு எதிராக, எத்தனை காலம்தான் பேசாமலே இருக்கப் போகிறோம்?

பணி புரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.   இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள “பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-20013’இல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள வரைவு சட்ட விதிகள் வருமாறு:

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லைகளுக்கு உள்படுத்துபவர்களுக்கு பணி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஊதியம் உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.   பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாளருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்கு வது என்றும் கூறப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குறித்து பொய்யான தகவல் அளித்தால், பாலியல் குற்றத்துக்கு குற்றவா ளிக்கு என்ன தண்டனை அளிக் கப்படுமோ, அதே தண்டனை பெண்ணுக்கும் கிடைக்கும்.   புகார்களை பெறுவதற்காக உள்ளூர் புகார்கள் கமிட்டியை அமைக்க வேண்டும். அதில் சம் பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சமூக சேவகர் ஒருவரும், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் நன்கு கைதேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந் தைகள் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, மேற்கண்ட கமிட்டிக்கு தார்மிக ஆதரவு அளிக்க வேண்டும்.   விசாரணையின் போது குற்றம் சாட்டியவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளானவர் புகார் அளித்த பெண்ணுக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ மிரட்டல் விடுக்கவோ, ஆசை வார்த்தைகள் கூறவோ முயற்சிக்க கூடாது என எச்சரிக்கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

பணியிடத்தில் பாலியல் தொல்லை !

இன்று வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிகிறார்கள். பெருமைக்குரிய செய்தி. ஆனால், பணி செய்யும் இடங்களில் பெண்கள் பாதுகாப்புடன், மன அழுத்தமின்றி, அக விடுதலையுடன் வேலைசெய்கிறார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே. பணியிடத்தில் பாலியல் தொல்லை என்பது உலகம் முழுவதும் நடக்கும் ஓர் அநீதி. நம் நாட்டில் வேலை செய்யும் பெண்களில் 60 விழுக்காட்டினர் பாலியல் தொல்லைகளைச் சந்திக்கின்றனர் என்னும் தகவல் நமக்கு அதிர்ச்சி தருகின்றது.

அதுமட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவிகளும் இத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். எனவே, இதுபற்றிய விழிப்புணர்வை பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதிலும், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்களின் ஆதிக்கம் பெருகிவருகிற இக்காலத்தில், பாலியல் தொல்லைகள் பெருகுமேயொழிய, குறையாது என்பதால், இத்தகைய விழிப்புணர்வை அதிகமாக பரப்புரை செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

பாலியல் வன்முறையும், பாலியல் தொல்லையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான். ஆனாலும், பாலியல் வன்முறையைக் கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடையும் அளவுக்கு பாலியல் தொல்லைகளைப் பற்றி நாம் கண்டுகொள்வதில்லை. இந்த மனநிலையை நாம் முதலில் மாற்றவேண்டும்.

பாலியல் வன்முறை ஒரு பெண்ணின் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைக்கிறது என்றால், பாலியல் தொல்லை பெண்களின் மனதுக்கும், மாண்புக்கும் தீமையை நிச்சயமாக உருவாக்குகிறது. பாலியல் வன்முறை, பாலியல் தொல்லை இரண்டுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள்தான். அத்துடன், பாலியல் தொல்லை தொடக்கம் என்றால், அதன் இறுதி இலக்கு (பெரும்பாலான நேரங்களில்) பாலியல் வன்முறைதான். எனவே, பாலியல் தொல்லையை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது மாபெரும் உரிமை மீறல்;;, பெண் சமத்துவத்துக்கும், மானிட மாண்புக்கும் எதிரான ஒரு செயல், தண்டனைக்குரிய குற்றம் (கிரிமினல் செயல்பாடு) என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாலியல் தொல்லை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவை பணியிடத்தில் பாலியல் தொல்லை 2004 என்னும் சட்ட முன்வரைவு தெளிவுபடுத்துகிறது. பெண்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களின் மேல் அதிகாரிகளோ, உடன் உழைப்பாளர்களோ, அல்லது கீழே பணியாற்றுபவர்களோ பெண்களைத் தொட்டுப்பேசுவது, நெருங்கி நிற்பது, அணைப்பது, தட்டிக்கொடுப்பது, இடித்துக்கொண்டு செல்வது, உரசுவது… இவை அனைத்துமே பாலியல் தொல்லைகள்தான். மேலும், வக்கிரமமான பேச்சுகள், ஆபாசப் படங்களைக் காட்டுதல், ஆபாச நகைச்சுவை, சைகைகள் போன்றவையும் பாலியல் தொல்லைகளே.

பணி நேரம் முடிந்தபின்னரும் வேலை செய்யச் சொல்வது, தனிமையில் சந்திக்கச் சொல்வது, வீட்டிற்கு வரச் சொல்வது போன்றவை இன்னொரு வகையான பாலியல் தொல்லை. தேவையின்றி உயர் அதிகாரி ஒரு பெண்ணை “நீங்க அழகா இருக்கிறீங்க” என்று புகழ்வதுகூட மறைமுகமான பாலியல் தொல்லைதான் – அந்தப் பாராட்டைத் தொடர்ந்து, அவர் தனது பாலியல் ஆர்வத்தை வெளியிட்டால்.

சுருங்கச் சொன்னால், ஒரு பெண்ணின் மாண்பைச் சிதைக்கும் எந்தச் சொல்லும், செயலும், சைகையும் பாலியல் தொல்லையே. வேறொரு வகையில் சொன்னால், தேவையற்ற, பாலுணர்வு ஆர்வத்தைத் தூண்டுகின்ற எந்தச் செயலும் பாலியல் தொல்லையே. இத்தொல்லைகள் பெண்மையை இழிவுபடுத்துவதுடன், பணியிடத்தின், அல்லது கல்விக் கூடத்தின் பணிச் சூழலைச் சிதைக்கின்றன.

 எனவே, பெண் சமத்துவத்திலும், மனித உரிமையிலும் ஆர்வம் கொண்ட அனைவரும் இது பற்றிக் கவலைப்பட வேண்டும். என்ன செய்யலாம்? இதோ, சில பரிந்துரைகள்:

1. பெண்களுக்கு விழிப்புணர்வு: பணிபுரியும் பெண்களுக்கும், படிக்கச் செல்லும் பெண்களுக்கும் விழிப்புணர்வுப் பாசறைகள் நடத்தலாம்.

2. ஆண்களுக்கும் விழிப்புணர்வு: பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள், கடைநிலை ஊழியர்கள் போன்ற அனைத்து ஆண்களுக்கும் எவையெல்லாம் பாலியல் தொல்லைகள், அவை விளைவிக்கும் தீமைகள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இருபால் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்தகைய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

3. உரிமைகளை அறிந்துகொள்க: இந்திய மகளிர் ஆணையம், தமிழக அரசின் மகளிர் ஆணையம், மறைமாவட்டப் பெண்கள் பணிக்குழு போன்றவை மகளிர் உரிமைகள் அடங்கிய ஆவணங்களை வெளியிட்டுள்ளன. இத்தகைய ஆவணங்கள் மூலமும், மகளிர் குழுக்களின் பாசறைகள், கருத்தரங்குகள் வழியாக பணிபுரியும் பெண்களின் உரிமைகளைப் பரவல் செய்தல் அனைத்துப் பெண்ணுரிமை ஆர்வலர்களின் கடமை.

4. வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குக: எங்கெல்லாம் பெண்கள் பணியாற்றுகிறார்களோ அல்லது படிக்கிறார்களோ, அங்கெல்லாம் பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் நோக்குடன் வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளின் தாளாளர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளை ஆசிரியர்கள் தனியே சந்திக்கக் கூடாது, மாணவிகளை வீட்டுக்கு வரச்சொல்லக்கூடாது, மாணவிகளுக்கு (மாணவர்களுக்கும்கூட) உடல்ரீதியான தண்டனைகள் கொடுக்கக்கூடாது, அலுவலக நேரம் முடிந்தபிறகு தனியே பெண்களை வேலை செய்யப் பணிக்கக்கூடாது போன்றவை இந்நெறிமுறைகளில் அடங்கும்.

5. அமைப்புகளை உருவாக்குவோம்: ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிசெய்யும் தொழிலகங்கள், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களைப் பெற்றுக்கொள்ளவும், விசாரணை நடத்தவும் உரிமையுள்ள உரிமைக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று பணித்தளத்தில் பாலியல் தொல்லை 2004 சட்ட முன்வரைவு தெரிவிக்கிறது. இக்குழுவின் தலைவராக ஒரு பெண்ணே இருக்கவேண்டும். குழுவின் பாதிக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெண்களாக இருக்க வேண்டும்.

6. உரையாடுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்: பெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் தனித்திருக்கையில் அவர்களுடன் உரையாடி பள்ளியில், விளையாட்டிடத்தில் அல்லது வேறு எங்கும் பாலியல் தொல்லைக்கு அவர்கள் உள்ளாகின்றனரா என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதுபோல, கணவர்கள், தாய்மார்கள் பணிசெய்யும் பெண்களிடம் இத்தகைய தொல்லைகள் பற்றி உரையாட வேண்டும்.

7. பொறுக்க வேண்டாம், பொங்கி எழுங்கள்: பல பெண்கள் சமூக அழுத்தத்தின் காரணமாக, அல்லது வேலை போய்விடுமோ என்ற அச்சத்தினால் அமைதி காக்கின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால்கூட, பாலியல் தொல்லையாளர்கள் துணிவுடன் செயல்படுகின்றனர். எனவே, பொறுத்துக்கொள்ளாமல், அதை எதிர்த்து எந்த வகையிலாவது போராடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

8. நற்செய்தி மதிப்பீடாக்குவோம்: பெண் மாண்பு என்பது ஓர் இறையாட்சி மதிப்பீடு. எனவே, அதனை நம் வாழ்வின் ஆன்மீக மதிப்பீடாக்க வேண்டும். மறைக்கல்வி, மறையுரைகள், தியானங்கள், ஒப்புரவு அருள்சாதன வழிபாடுகள் போன்றவை வழியாக நம் அகவாழ்வின் அங்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

பாலியல் கொடுமை – தீர்வு இஸ்லாம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது (தடுக்கப்பட்டுள்ளது).

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

3. அவ்ரத்தை (மறைக்க வேண்டிய பகுதி)  காட்டுவதும், பார்ப்பதும்

”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)

இறைநம்பிக்கையாளர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்’’ (24:30)