Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,369 முறை படிக்கப்பட்டுள்ளது!

சர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்

நோய்களைத் தடுக்குது எச்சில் ட்ரீட்மென்ட்!

  salivaநான்கு முறை தும்மல் வந்தாலே மருத்துவமனைக்கு ஓடுவார்கள் சிலர். டாக்டரும் பத்து டெஸ்ட்டுகளுக்கு பரிந்துரைச்சீட்டு எழுதித் தருவார். மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசத்தில் கணிசமான தொகை காலியாகி, வீடு திரும்பும்போது தெரியும்… அது சாதாரண ஜலதோஷம் என்று!

இன்றைய யதார்த்தம் இது. நோய் குறித்த எச்சரிக்கை அவசியப்படும் அதே வேளை, ‘எதற்கெடுத்தாலும் மருத்துவ மனையா’ என்கிற கேள்வியையும் தவிர்க்க முடிவதில்லை. ‘‘இதற்கெல்லாம் ஒரு தீர்வு… அதுவும் எளிமையான தீர்வு இருக்கிறது’’ என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ‘எக்ஸ்கோட் லைஃப் சயின்ஸ்’ நிறுவனத்தினர்.

‘‘ஒரு புதிய டி.என்.ஏ பரிசோதனைத் தொழில்நுட்பத்தின் மூலம், வரக்கூடிய நோயை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதைத் தடுத்தாட்கொள்ளலாம்’’ என்கிற இவர்கள், அதற்காக நம்மிடம் வேண்டி நிற்பது, எச்சில்… தட்ஸ் ஆல்!

‘‘டி.என்.ஏ பரிசோதனையை அடிப்படையா வச்சு, வரக்கூடிய நோய்களை முன்னாடியே கண்டுபிடிக்கிற கான்செப்ட் இது. அமெரிக்காவுலயும் கனடாவுலயும் எப்பவோ வந்துடுச்சு. ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’னு பண்றாங்களே… அதுக்கு இது ஒரு படி மேலன்னு சொல்லலாம். பரம்பரையா நம்மைத் தாக்கக் கூடிய பிரச்னைகள் எல்லாம் டி.என்.ஏ மூலம்தான் தொடருது. ஸோ, அந்த டி.என்.ஏவை கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்தா, நம்மளைத் தாக்குறதுக்காக கடைசி வரிசையில நிக்கிற நோயைக் கூட கண்டுபிடிச்சிடலாம்.

இந்த டெஸ்ட்டுக்கு ரத்தம் எடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்ல. வெறும் எச்சிலை டெஸ்ட் பண்ணினாலே போதும். அமெரிக்காவுல இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அங்க பயோ இன்ஃபர்மேடிக்ஸ்ல பிஎச்.டி பண்ணின எனக்கு, இந்த வசதியை இந்தியாவுக்கும் கொண்டு வரணும்னு தோணிச்சு. முதல் கட்டமா சர்க்கரை நோய், உடல் பருமன், வலிப்பு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஒன்பது வகை நோய்களுக்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டுபிடிச்சு அதைத் தடுக்கத் தேவையான ஆலோசனைகளைத் தர்றோம்’’ என்கிறார் ‘லைஃப்லாங் வெல்நெஸ்’ என்னும் பெயரில் இந்த முறையை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கும் டாக்டர் சலீம் முகமது.

பரிசோதனை, ஆலோசனை என எல்லாமே ஆன்லைனில் நடக்கும் இந்த மொபைல் மருத்துவ சேவைக்கு இப்போதைய கட்டணம் பத்தாயிரம் ரூபாயாம். ‘‘விருப்பப்படறவங்க எங்களோட வெப்சைட்ல போய் ஆர்டரைப் பதிவு பண்ணணும். உடனடியா அவங்களுக்கு ஒரு கிட் அனுப்பி வைக்கப்படும். அதுல இருக்கற சின்ன கண்டெய்னர்ல கொஞ்சம் எச்சிலைத் துப்பி அதை எங்களுக்கு அனுப்பி வச்சிடணும்.

மனித எச்சிலை ஏழு வருஷம் வரைக்கும் அறை வெப்பநிலையிலயே வச்சிருக்க முடியும்ங்கிறதால அப்படியே அனுப்பலாம். எந்த விதப் பக்குவப்படுத்தலும் தேவையில்ல. அந்த எச்சிலானது எங்களோட லேப்ல இருக்கிற டாக்டர்களால பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுல ஒரு ரிப்போர்ட் ரெடியாகும். அந்த ரிப்போர்ட்டை, மரபுரீதியான நோய்களால பாதிக்கப்பட்டவங்க/படாதவங்கன்னு ரெண்டு தரப்புல இருந்தும் நிறைய பேரோட டி.என்.ஏ.க்களை ஆய்வு பண்ணி நாங்க தயார் பண்ணி வச்சிருக்கிற ஒரு சாஃப்ட்வேரோட ஒப்பிட்டு ஃபைனல் அறிக்கை தயாராகும்.

முதல் டெஸ்ட் நோய்களை அடையாளப்படுத்துதுன்னா, ரெண்டாவது ஒப்பீடு அந்த நோய்களோட கடந்தகால செயல்பாடுகளை, எதிர்கால பாதிப்பு களைக் கண்டுபிடிக்க உதவுது. தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமா நோயைத் தடுக்குற ட்ரீட்மென்ட்’’ என்கிற சலீம், ‘‘பரிசோதனை முடிஞ்ச பிறகும் ஒவ்வொருத்தரோட எச்சிலையும் பாதுகாத்து வைக்கற ‘பயோ பேங்கிங்’ வசதியும் இருக்கு. அதே நேரம் ஒருத்தருடைய பிரச்னை இன்னொருத்தருக்குத் தெரியாதபடி ரகசிய மும் காக்கப்படும்’’ என்கிறார். எச்சிலில் இத்தனை சங்கதிகள் இருக்கும்போது, இனி அதை ரோட்டில் துப்பி வீணாக்குவானேன்?

எச்சில் எங்கிருந்து ஊறுகிறது. அதில் என்னென்ன இருக்கும்?

Blausen_0780_SalivaryGlandsஎச்சில் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் நீர்த்தன்மை வாய்ந்த திரவம்தான் எச்சில். முகத்தின் இரண்டு பக்கமும் உள்ள தாடைகளில் இச்சுரப்பிகள் உள்ளன. எச்சிலில் 99.5 சதவீதம் இருப்பது நீர்தான். மிச்சம் இருப்பது அமிலேஸ் என்சைம். நாம் சாப்பிடும் மாவுச்சத்து உணவைச் சர்க்கரையாக மாற்றுவது இதுதான்.

உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி வியாதி
சர்க்கரை நோய். இந்த நோய் எச்சில் பற்றாக்குறை நோய் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.புரியவில்லையா?ஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை.ஆனால் தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .

இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும் அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது
அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர் பித்தநீர் பலவகை என்சைம்கள் அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன .

நீண்டகாலம் எச்சில் அளவு குறைகின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது. இந்த அறிய கண்டுபிடிப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தணிகாசலம் ஆகிய நான்தான் கண்டுபிடித்தேன் இப்போது ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது.

 எச்சில் துப்பும் பழக்கம் !

spitஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . அது இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் ( Digestion ) துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ptyalin என்கிற ‘ என்ஸைம் ‘ எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . முத்தங்களை மென்மையாக்குவது எச்சில்தான் !

இருப்பினும், வாய்க்குள் இருக்கும் வரையில்தான் எச்சிலுக்கு இவ்வளவு மதிப்பு . பிரபல மனோதத்துவ ஆய்வாளர் அந்தோணிஸ்ட்டோர் இதைக் கச்சிதமாக ( தர்மசங்கடமாக ! ) விளக்குகிறார் . ‘ வாய்க்குள் இருக்கும் எச்சிலை விழுங்குங்கள் . இதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்வீர்கள் . சரி, உங்கள் எச்சிலையே டம்ளர் ஒன்றில் துப்புங்கள் . பிறகு, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தண்ணீர், சர்க்கரை எல்லாம் சேர்த்து… இப்போது அதை ஒரே மடக்கில் குடிப்பீர்களா ? மாட்டீர்கள் ! வாயில் இருந்து வெளியே வந்த மறு விநாடி எச்சில் தன் குடியுரிமையை ( Renounced its citizenship ! ) ‘ இழந்துவிடுகிறது .

இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 -ம் நூற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் ( Spittoons ) தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ‘ மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ‘ என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன . இப்படி கண்ட இடத்தில் துப்புகிற ‘ கலாசாரத்தை’ ப் பார்த்துவிட்டு ஆஸ்கர் ஒயில்டு, ‘ அமெரிக்கா என்பது பிரமாண்டமான ஒரு எச்சில் ! ‘ என்றார் . இப்போது, அங்கே யாரும் பொது இடத்தில் துப்புவது இல்லை .

சர்க்கரை வியாதிக்கு  உண்மையில், ஒரு எச்சில் பற்றாக்குறை நோயே.

புரியவில்லையா?

ஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை. இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.அதற்கு சாப்பாட்டை தின்னவே கூடாது. மென்று எச்சிலில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

  • ஆனால், அவசர ஓட்டத்தில்,  தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .
  • உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும். அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது. அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர், பித்தநீர், பலவகை என்சைம்கள் , அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன.
  • கிடைக்கும் எச்சில் அளவு, நீண்டகாலத்திற்கு குறைந்தே இருக்கின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது.

அநேக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பாலூட்டப்படும்போது அல்லது அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் தங்கள் தாய்ப்பாலை அல்லது ஃபோர்மூலாவை உமிழ்ந்துவிட விருப்பமுள்ளவர்களாயிருப்பார்கள். சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் எப்போதாவது மாத்திரம்தான் எச்சில் உமிழ்வார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு பாலூட்டலின்போதும் எச்சில் உமிழ்வார்கள். எச்சில் உமிழ்தல் குழந்தையின் வாயிலிருந்து பிரயாசப்படாமலே வெளியே உருண்டு வரும். சில சமயங்களில் ஏப்பத்துடன் வெளியேறும்.

எச்சில் உமிழ்தல் காஸ்ட்ரோஈசோஃபெகல் அதாவது இரையக உணவுக்குழாயக அனிச்சையான செயல் எனவும் அழைக்கப்படும். வயிற்றின் மேல் முனையிலுள்ள வட்டத் தசைகள் சரிவர மூடப்பட்டிருக்காவிட்டால் இது சம்பவிக்கும். குழந்தை வளர்ந்து வரும்போது எச்சில் உமிழ்தல் குறைந்துகொண்டே வரும். பெரும்பாலும், குழந்தை ஒரு வயதை எட்டுமுன்னர் இது மறைந்துவிடும்
உங்கள் குழந்தைக்கு உதவிசெய்யும் வழிகள்

பின்வரும் காரியங்களை முயற்சி செய்வதன்மூலம் உங்கள் குழந்தை எச்சில் உமிழும் அளவைக் குறைக்கலாம்:

உங்கள் குழந்தைக்கு அகோரப் பசி எடுப்பதற்கு முன்பே அவளுக்கு பாலூட்டவும்.
நீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால் சொற்ப அளவு பாலை ஊட்டவும். அளவுக்கதிகமாகப் பாலூட்டுவதும் எச்சில் உமிழ்தலை மோசமாக்கும். உங்கள் குழந்தை பாற்புட்டியை முழுமையாக வெறுமையாக்க வேண்டியதில்லை.

  • நீங்கள் புட்டிப்பாலூட்டுவதாயிருந்தால், சூப்பானின் அளவு அளவுக்கதிகமாகப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இல்லாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அளவுக்கதிகமாகப் பெரிதாகவிருக்கும் சூப்பான் பாலை அதிக விரைவாகப் பாயச்செய்யும்; மிகவும் சிறிய சூப்பான் உங்கள் குழந்தை அதிகளவு காற்றை விழுங்கச் செய்யும்.
  • பாலூட்டும் சமயத்தை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்; கவனச் சிதறல்களைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • இறுக்கமான டயபரைத் தவிருங்கள். ஏனென்றால் அவை அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையின் வயிற்றில் அழுத்தத்தை உண்டாக்கவேண்டாம்.
  • பாலூட்டும் சமயத்தில் உங்கள் குழந்தையின் வயிற்றிலிருக்கும் காற்றை வெளியேற்றுவதற்காக அவளை இரண்டு தடவைகள் ஏப்பம் விடச் செய்யுங்கள். பாலூட்டும்போது அவளை இடைமறிக்கவேண்டாம், ஆனால் அதற்குப்பதிலாக அவள் இடைநிறுத்தும்போது ஏப்பம் விடச் செய்யவும்.
  • ஒவ்வொரு பாலூட்டலின் பின்னரும் அவளைச் செங்குத்தாகப் பிடிக்கவும்.