Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,342 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய மருத்துவம்..

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து (950).”

herbsநோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, என நான்கும் மருத்துவத்தின் அங்கங்கள் என்று வள்ளுவ பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தை விவரித்துள்ளார்.

இக்கால அல்லியல் மருத்துவம் [ அல்லோபதிக் மெடிசின் / Allopathic Medicine (அ) வெஸ்டர்ன் மெடிசின் / Western Medicine ], தற்கால அறிவியல் ஆய்வோடு வளர்ந்திருந்தாலும், இதன் பெரும்பாலான வளர்ச்சி கடந்த 200 ஆண்டுகளே ஆனது.

மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள மருந்துகள், 100 க்கும் குறைந்த தாய் வேதியல் சேர்மங்களை (மதர் காம்பௌண்ட்ஸ்/mother compounds) கொண்டே உருவாக்கபட்டுள்ளது. உதாரணமாக, பெரும்பான்மையான மூச்செறி மயக்க மருந்துகள் , ஈத்தர் (ether) எனபடும் ஒரு வேதியல் சேர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அதேபோல, பெரும்பான்மையான காய்ச்சல் மருந்துகள் ஒரு வகையான ஆட்ருப்பாளை (வில்லோ த்ரீ / Willow Tree/சலிக்ஸ் டேட்ரஸ்பர்மா  /Salix tetrasperma) மர பட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாலிசிலிக் அமிலம் (salicylic acid) என்ற சேர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்பிரின் (Aspirin) என்னும் ஒரு காய்ச்சல் மருந்து பல ஆண்டுகளாக உலகெங்கும் பயன் படுத்தபடுகின்றது. தற்கால மருத்துவத்தில் இன்று புழக்கத்தில் உள்ள பல மருந்துகளின் தாய் சேர்மங்களை நாம் அடையாளம் காணலாம்.

இப்படி, தற்கால மருத்துவத்தின் குறிப்பாக அல்லியல் மருந்துகள் கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளயே கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுதபட்டுளது. ஆனால் மரபு மருத்துவ முறைகள் கண்டந்த 2000 ஆண்டுகள் அல்ல அதற்க்குமேலே வழக்கில் உள்ளது. இந்திய மரபு மருத்துவம் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், போன்ற மருத்துவ முறைகளை பொதுவாக உள்ளடைக்கியது.

இவ்வகை மரபு மருத்துவ் முறைகளில் இரு முக்கிய அங்ககளை கொண்டுள்ளது. ஒன்று, நோய்நாடல் மற்றொன்று நோயிக்கு தீர்வு கானல்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)”.

நோய் இதுவென அறிந்து அந்நோய்க்கு ஏற்ற தீர்வு காணவேண்டும் என வள்ளுவபேருந்தகை விவரிதுசென்றார். அல்லியல் மருத்துவ முறைகளை ஒப்பிடுகையில், நோய் நாடல் (டையாக்நாச்டிச்ஸ்/diagnostics) துல்லியத்தில் மரபு மருத்துவம் பின்தங்கி இருந்தாலும், நோய் வகைப்பாட்டியியலிலும் (கிலாசிபிகெசண்/classification), நோய் தீர்வியலிலும் (தேரபியுடிக்ஸ்/Therapeutics) பரந்து விரிந்திருக்கும் என்பது ஒரு ஏதிப்பர்பு. சரி, எதன் அடிப்படையில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு?

imagesCAASCNMUதிருக்குறள், திருமந்திரம் போன்ற திருநூட்கள் பல வகையான நோய்களுக்கு மருத்துவ முறைகளை விவரிக்கின்றன. இத்திருநூட்களின் பழமையை கருதும்போது நோய் வகைப்பாட்டியலில் இவை செழித்திருக்கும் என்பது என் எதிர்ப்பார்ப்பு. அதேபோல் நோய் தீர்வியலிலும் மரபு மருத்துவம் செழித்திருக்க வாய்ப்புள்ளது.

பாலம் தேவை 
தொன்மையை குறித்து மரபு மருத்துவ முறைகளை முற்றிலும் வழக்கில்லிருந்து நீக்குவது சரியா? அல்லது, பழமையனாலும் பயனுள்ளவை என பிரிதெடுத்து அதை மேம்படுத்தி சேர்த்துக்கொள்வது நன்மையா?

மரபு மருத்துவத்தின் தொன்மையை கருதுகையில், இதன் பல்வேறு அங்கங்கள் யாவும் படி படியாக வளர்ந்து பேரும் முதிர்ச்சி அடைந்துருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வளர்ச்சியின் காரணமாக உச்சி முதல் பாதம் வரை, உடல் உறுப்புகளின் பல்வேறு சீர்கேடுகள் வகை படுத்தபட்டுள்ளது. மேலும், நம் முன்னோர்கள் இச் சீர்கேடுகளுக்கும் தீர்வும் கண்டுள்ளனர்.

சரி, மரபு மருதுவதிர்க்கும் தற்கால மருதுவதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவ்விரு முறைகளுக்கு இடையில் உள்ள பிளவு என்ன? நோய்வகைபாட்டியியலில், மரபு மருத்துவமும் தற்கால  மருத்துவமும் ஒத்தி இருந்தாலும் நோய் தீர்வு  கானலின் அணுகுமுறையில் முற்றிலும் இவை வேறுபடுகின்றன. சுருக்கமாக சொன்னால், ஒரே வினாவிற்கு இருவேறு விடைகள்.

தற்கால மருத்துவம் இயற்பியல்  (ப்ய்சிக்ஸ்/Physics), வேதியியல் (கெமிஸ்த்ரி/Chemistry) போன்ற அறிவியலின் கிலைகளை சார்ந்து கடந்த 200 ஆண்டுகளிலே வளர்த்துள்ளது. இந்த சார்பு நிலமையும் குருகிய காலத்தையும் கருதுகையில், தற்கால மருத்துவத்தின் நோய் தீர்வியல் இன்னும் முழுமை அடையவில்லை என கூரலாம்.

மேலே கண்டதுபோல், தற்கால மருத்துவத்தின் மருந்துகள் வெகு சில தாய் சேர்மங்களில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான இவ்வகை தாய் சேர்மங்களின் பிறப்பு மூலிகையில் உள்ளது.

பேர் வேறென்றாலும் வேர் ஒன்று
ayurvedic-conceptsஇந்திய மரபு மருத்துவத்தில், மூலிகைகள் பெரும்பாலான பங்குவகித்து வந்துள்ளது. “ஆயிரம் வேர்கொண்டவன் அரை வைத்தியன்” என்ற தமிழ் பழமொழி மூலிகையின் அளவையும் பங்கையும் குறிக்கின்றன ஒரு வகையான மேற்கோளாக எடுத்துகொள்ளலாம். இப்படி ஆயிர கணக்கான முலிகைகளை அடையலாம் கண்டு, பற்பல நோய்களுக்கு நம் முன்னோர்கள் தீர்வுகண்டுளனர். மூலிகைகளின் தயர்ப்பு முறைகளில் சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி   மருத்துவ முறைகள் வேறுபட்டாலும், இம் முறைகளுக்கு இடையே பெரும்பாலும் பொதுவான மூலிகைகள் காணபடுகின்றன.

ஆக, ஆயிரக் கணக்கான இவ்வகை மூலிகையில் இருந்து, இன்று தற்கால மருத்துவத்திற்காக எத்தனை வகையான தாய் சேர்மங்களை கண்டுபிடிக்கலாம் என்ற உண்மையை நாம் சிந்தனையில் கொள்வோம்.

இந்திய அரசின் பங்கு
இத்தகைய அரிய மருத்துவ முறைகளை போற்றி பேணிகாப்பதில் இந்திய அரசுக்கு பேரும் பங்குள்ளது. சித்த, ஆயுர்வேத, மற்றும் யுனானி மருத்துவ முறைகளை பயில்வதர்கென்று மருத்துவ கல்லூரிகளையும் அதை சார்ந்த மருதுவசாளைகளும் இந்திய அரசு நிறுவியுள்ளது.  இவ்வரிய தொண்டின் காரணமாக,  மரபு மருத்துவம் காலத்தோடு அழியாமல் புதிய மாற்றங்களோடு இன்றும் வழக்கில் உள்ளது. இதை தவிர்த்து, வெளி நாட்டவரும் இந்தய மரபு மருத்துவத்தின் மகிமையை அறிந்து, இம்முறைகளை நாடுகின்றனர்.

இந்திய மரபு மருத்துவத்தின் மகிமையை உணர்ந்த வெளி நாட்டவரும், தற்கால மருத்துவர்களும், மற்றும்  அனைத்துலக விஞ்ஞானிகளும் இம்முறைகளை அரும்பெரும் திரவியமாகவே கருதுகின்றனர்.  சற்றுமுன், அயல் நாட்டு விஞ்ஞானிகள்,  வேம்பு, மஞ்சள் போன்ற மரபு மருத்துவத்தின் மூலிகையில் இருந்து புதிய மருந்துகளை பிரித்தெடுக்க  முனைந்தனர்.  இத்தகைய முயற்ச்சி வரவேற்கத்தக்கது. இன்றைய அறிவியலின் உதவியோடு புதிய மருத்துவ குணமுடைய பயனுள்ள தாய் சேர்மங்களை அடையலாம் காண்பது எல்லோருக்கும் நன்மையே. ஆயினும், அயல் நாட்டவர் இந்திய மரபு முலிகை மேல் உரிமை பாராட்டாமல் இருக்கும்வரை சர்ச்சை இல்லை.

இந்திய அரசு, மரபறிவு மின்னணு நூலகம் (Traditional Knowledge Digital Library) வாயிலாக 2,00,000த்துக்கும் மேலான  மரபு மருத்துவ மூலிகைகளின் தயாரிப்பு  சூத்திரங்களை வெளியிட்டுள்ளது.  கடந்த 10 வருடமாக, 200 இந்தய விஞ்ஞானிகள் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா (yoga), இயற்கை மருத்துவம் (Naturopathy) போன்ற மருத்துவ முறைகளின் மூலிகை தயாரிப்பு சூத்திரங்களையும், முத்திரைகளையும் சேகரித்து ஒரு மின்னணு நூலகமாக நிறுவியுள்ளனர்.

இந்திய அரசின் தாமரை விருதுகள்
இந்திய மரபு மருத்துவ தொண்டுகளை பாரட்டும் வகையில், இந்திய அரசு தமது தாமரை (பத்ம) விருதுகளை வழங்கியுள்ளது. அண்மையில், சலகண்டபுரம் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இந்திய அரசு, தாமரை (பத்ம ஸ்ரீ) விருது அளித்து அவர்களின் சித்த மருத்துவ தொண்டினை அலங்கரித்தது. குறிப்பாக, இவர் யானைச்சொறி (Psoriasis/சொரியாசிஸ்) எனப்படும் ஒரு வகையான தோல் நோய்க்கு குணமளிக்கும் மருந்தினை கண்டுள்ளார். புவி எங்கும் இன்னும் இன் நோயின் தன்மையை அறிய ஆய்வு மேற்கொண்டிருக்கையில், இவர் குணமளிக்கும் மருந்தினை கண்டுள்ளது ஒரு அரிய சாதனையே.