Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2016
S M T W T F S
12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,000 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும் – கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!

பாப்பாவுக்கு முன்னே பல்லை பாருங்க

தலை முதல் பாதம் வரை சகலத்தையும் புரட்டிப்போட்டு, தற்காலிகமாக சில புதிய பிரச்னைகளையும் கொடுக்கும் கர்ப்ப காலம். பற்களில் உண்டாகிற பாதிப்பு அதில் முக்கியமானது மட்டுமல்ல… பலராலும் அலட்சியப்படுத்தப்படுவதும்கூட. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கிற பல் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள்,  தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் மருத்துவ நிபுணர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படற பல் தொந்தரவுகளுக்கு ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணம். ஈறுகள் வீங்கறதும், பல் தேய்க்கிறப்ப ரத்தக்கசிவு உண்டாகிறதும் இருக்கும். இதுபோன்ற ஈறுகள் வீக்கத்துக்கு gingivitis என்று பெயர். கர்ப்ப காலத்துல உமிழ்நீர் சுரப்பும் அதிகமா இருக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமா இருக்கிறதால, ஈறுகள் மிருதுவாகறது, கூச்சம், வீக்கம்கூட இருக்கலாம்.

சிலருக்கு ஈறுகள்ல பெரிய கட்டிகள் வரலாம். கர்ப்ப காலத்துல உண்டாகிற பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை அலட்சியப்படுத்தக்கூடாது. குறைப்பிரசவம் நடக்கவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் கூட இது காரணமாகலாம்’’ என்கிற டாக்டர் யஷ்வந்த், கர்ப்பத்தின் போது மேற்கொள்ள வேண்டிய சோதனைகளைப் பட்டியலிடுகிறார்.

பொதுவான பரிசோதனைகளுக்கு முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களைத் தவிர்த்து, இடைப்பட்ட 3 மாதங்களில் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். பற்களுக்கான எக்ஸ் ரே எடுப்பதைத் தவிர்க்கவும். பல் தொடர்பாக ஏதேனும் அவசர சிகிச்சை என்றால் உங்களையும் உங்கள் சிசுவையும் பாதிக்காத படி, பிரத்யேக பாதுகாப்பு முறையுடன், பல் மருத்துவர் எக்ஸ் ரே எடுக்கப் பரிந்துரைப்பார்.

தினம் 2 வேளை பல் துலக்குவது, ஒரு முறை  ஃபிளாஸ் செய்வது, தரமான பேஸ்ட் மற்றும் பிரஷ் உபயோகிப்பதெல்லாம் கர்ப்ப காலத்திலும் பின்பற்றப்பட வேண்டியவை.மசக்கை காரணமாக சிலர் அதிக இனிப்பு எடுத்துக் கொள்வார்கள்.

அதன் மூலம் பற்கள் சொத்தையாகலாம். பல் சொத்தைக்குக் காரணமான பாக்டீரியா, அம்மாவிடமிருந்து, குழந்தைக்குப் போகலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. எனவே கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிர்கள் என்பதில் கவனம் தேவை.

உங்களது குழந்தையின் பல் வளர்ச்சிக்கு, நீங்கள் சாப்பிடுகிற சத்தான ஆகாரங்களே பிரதானம். எனவே கால்சியம் நிறைந்த பால், சீஸ்,
தயிர் போன்றவற்றைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். பிரசவத்துக்குப் பிறகும் முறையான பல் பரிசோதனையும், பராமரிப்பும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

தாய் பால் அதிகம் சுரக்க பூண்டு சாப்பிடுங்க

கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்

பிரசவம் ஆனா  பெண்களுக்கு பொதுவாக குழ‌ந்தை பெ‌ற்ற  பெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.
அதனால்  தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள்.

பால் அதகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு .எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

வாயு தொல்லை இருப்பின் பாலுடன் பூண்டை நன்கு வேக வைத்து நக்கு மசித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கிவிடும்.நீங்க பூண்டை பயன் படுத்த தவங்களா இருந்தால் இன்றிலிருந்து பூண்டை பயன்படுத்துங்க

சுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும்

வயிற்றைக் கிழிக்காத சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பும்.
‘‘சுகப்பிரசவம் நல்லதுதான். ஆனா, பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

*‘‘பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேத்தறது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்… இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை லூசாக்கும். பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாம இருக்கிறது, எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிடும்.

*கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றோட ஒரு முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தச்சிட்டா, கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

*கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டா, அது தனக்குப் பக்கத்துல உள்ள மூத்திரப்பை, மலப் பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும்.சிறுநீர் பை இறங்கத் தொடங்கினா, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள்ள

*எப்போதும் சிறுநீர் தங்கி, இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் வரும். கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யறப்ப, சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும்.

*எதையுமே கவனிக்காம விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம்.பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள்
பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும்’’ என்கிறார் மாலா ராஜ்.

கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!

தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி  நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு. தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு  முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது வேலை செய்யும் திறனை அது முறுக்கேற்றுகிறது. தேநீரில் உள்ள அமினோ அமிலமான ‘காட்டாசின்’ உடலில் சேருகிறது. இந்தக் காட்டாசினில் வைட்டமின் ‘பி’ சக்தி நிறைந்திருக்கிறது. இது தந்துகிக் குழாய்களைப் வலுப் படுத்தும் சக்தி படைத்தது. மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிட்ரின், ருட்டின், எஸ்குலைன் போன்ற பொருட்களைக் காட்டிலும் காட்டாசினுக்கு சக்தி அதிகம்.  ‘காட்டாசின்’ என்ற பொருளுக்கு கதிர்வீச்சு முறிப்புக் குணமும் உண்டு. மனித உடலில் ‘ஸ்டிரான் ஷியம் 90’ ஏற்படுத்தும் தீய விளைவுகளை முற்றிலும் அகற்றி விடும் இது.

கதிர்வீச்சு ‘ஐஸோடோப்’ எலும்பு மஜ்ஜையை அடையும் முன்னர் அதனை இப்பொருள் உறிஞ்சி விடுகிறது  என்கின்றனர் ஆய்வாளர்கள். தந்துகிகளை வலுவாக்குவதன் மூலம் மனித உடலில் ‘அஸ்கார்பிக்’ அமில அளவு சீராகிறது. காட்டாசினுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உண்டு என்று லேட்டஸ்ட் ஆய்வுகள் கூறுகின்றன. விதவிதமான தேநீர் வகைகள் யாவும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை வெவ்வெறு வித மாகப் பதப்படுத்துவதன் மூலம் கிடைப்பவைதான். பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அவற்றின் தரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தேயிலையில் இரண்டு வகை உள்ளன. அவை சீனத் தேயிலை (சைனன்சிஸ் வகை), அசாம் தேயிலை (அசாமிக்கா வகை). பச்சைத் தேயிலை சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இது ‘கேமில்லியா’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது படிப்படியாக மேற்கு மற்றும் கீழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பச்சைத் தேயிலைத் தயாரிப்பின்போது இலைகள் உலர்த்தப்படுகின்றன. ஊற வைத்து நொதிக்க வைக்கப் படுவதில்லை. வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும் பச்சைத் தேயிலையில் முக்கியமாக நான்கு ‘பாலிஃபீனால்கள்’ உள்ளன. இவை மொத்தமாக ‘கேட்டகின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் ஆகும். அதாவது இவை நமது வேதியியல் பண்பினால் ஆக்ஸிகரணமாகும் செயல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால்  கேட்டகின்களால் வைரஸ்களை எதிர்கொள்ள முடிகிறது.

பச்சைத் தேயிலையில் ஒருவர் தேநீர் தயாரித்து குடித்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். அதேபோல புற்றுநோய் செல்கள் பிரிந்து வளர்வதையும் இது தடுக்கிறது. பல வகையான புற்று நோய்களில் இருந்து பச்சைத் தேயிலை நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
வளர்ந்த நாடுகளுள் சீனாவில் இதய மற்றும் ரத்தக் குழாய் நோய்கள் 80% குறைவாக இருக்க இதுவே காரணம். ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலை மூளையில் முதுமை ஏற்படுவதைக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் அதிகம் இருப் பதால்தான், உலகில் பல நாட்டு மக்களும் தேநீருக்கு ‘ஓ’ போடுகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் காஃபியைத்தான் அதிகமாக அருந்துவ தாகச் சொல்லும் ஆய்வுத் தகவல்தான் வினோதமாக இருக்கிறது!