Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,963 முறை படிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்!

‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,637 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,637 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை மார்கழி விருந்து! 2/2

பச்சை மொச்சை பொரியல்

தேவையானவை: பச்சை மொச்சை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: பச்சை மொச்சையைக் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரித்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,133 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!

வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,296 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாவீரன் நெப்போலியன்

பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர் : கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர் (Graduate to a Great Career)

ஆசிரியர் : கேத்ரின் கபூடா (Catherine Kaputa) – பதிப்பாளர் : Nicholas Brealey

கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நல்ல புரஃபஷனல்களாக மாறும் வித்தை தெரியாமல் இருக்கிறார்கள். அது மாதிரியானவர்களுக்கு கேத்ரின் கபூடா என்னும் பெண்மணி எழுதிய ‘கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர்’ புத்தகம் நல்ல வழிகாட்டி.

புத்தகத்தின் நோக்கம்!

நீங்கள் தற்போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,568 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை மார்கழி விருந்து! 1/2

நம் பாட்டிகள் சமைத்த சமையலில் பாதியை அம்மாக்கள் தொலைத்தனர். அம்மாக்கள் சமையலில் பாதியை நாமும் தொலைத்து, ஃப்ரைடு ரைஸ், பிரெட் பிரேக்ஃபாஸ்ட் என்று கிச்சனை வயிற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் அந்நிய மாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த ஏக்கம் நீக்க, பச்சடி, அவியல், பொங்கல், பொரியல் என நம் பாரம்பர்ய சமையல் மணக்கத் தயாராகியிருக்கிறது மயக்கும் மார்கழி இணைப்பிதழ். சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர் வழங்கியுள்ள உணவுகளை சமைப்போம்… சுவைப்போம்!

பாசிப்பருப்பு பாயசம் தேவையானவை: பாசிப்பருப்பு, வெல்லத்தூள், பால் – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,398 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை

“பாய்! நீங்க சில்லரை வாங்கிட்டீங்களா?” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன. “மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி?” “யாருடா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,504 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்?

ஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர். சேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,933 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் எதை தீர்மானிக்க வேண்டும்?

பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.

இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.

அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை. இதற்கு பெரிய உதாரணமெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,780 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனம் மாறினால் குணம் மாறலாம்!

உலகம் ஒன்றுதான். ஆனால், அதே உலகம் ஒருவருக்கு நரகமாகவும், மற்றவர்களுக்கு சொர்க்கமாகவும் தெரிகிறது என்ர்சன்.

நமக்குப் பிடித்தவை எல்லாம் பிறருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருவரது உணவு இன்னொருவருக்கு விஷமாகி விடுகிறது.

இன ரீதியாக, மதம் மற்றும் மொழி வகையில் அவரவர் சார்ந்த விஷயங்கள் தான் மிகவும் உயர்ந்தவை. மற்றவைகள் எல்லாம் அதற்கும் கீழே தான் என்று எண்ணுகிறோம். எல்லோருமே தங்களது அடையாளங்களை பேணிக்காக்கத் துடிக்கிறார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,746 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்!

இயற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..