இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்?

இன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும்.
ஆனால் இன்று நடப்பது என்ன? அவர்கள் கூறியவற்றை விட்டு விட்டு அவர்கள் காட்டித் தராத பல விசயங்களை மார்க்கம் என்ற பெயரால் செய்கின்றோம். அவர்களை புகழ்கின்றோம் என்று அளவுக்கு மீறி மௌலிது – மீலாது என்று கொண்டாடுகிறோம். அவர்களால் எச்சரிக்கப்பட்ட இசை நிகழ்ச்சியையும் இதில் கலந்து விடுகின்றோம். இதை நபியவர்களோ அல்லது அவர்கள் வழியில் வந்த கலீபாக்களோ இமாம்களோ செய்யவில்லை. இதை நாம் கூறினால் .. உடனே நீங்கள் நபிகளாரை மதிப்பது இல்லை என்ற குற்றச் சாட்டு வந்து விடும். உண்மை என்ன என்பதை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி அவர்கள் விளக்கம் தருவதைக் கேளுங்கள்….