வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க!
தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மையானதாக அமையும். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. உடல் எடை குறைக்கவும், இளமையை நீட்டிக்கச் செய்யவும் கிரீன் டீயில் ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு உள்ளது.
கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை. ஒரு ஆய்வின் அடிப்படையில், கிரீன் டீ அருந்துபவர்களுக்கு, கார்டியோவாஸ்குலார் நோய்கள் ஏற்படுவதற்கு 31 சதவீதம் குறைந்த வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் எடை
கிரீன் டீ உடல் எடை குறைக்க சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி உடல் எடை கூடுவதை தடுக்கும்.
புற்று நோய்
கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் பாலிபெனால் எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதய நோய்கள்
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக கூறுகின்றனர்.
நன்மைகள்
- பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
- வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
- ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.
- சருமத்தை பாதுகாத்து உடலை இளமையாக வைக்கிறது.
- பருக்கள் வராமல் தடுக்கிறது.
- நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
- மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
கிரீன் டீ குடிக்கும் போது கவனிக்க வேண்டியவை –
- மிதமான சூட்டில் மட்டும் தயார் செய்ய வேண்டும்.
- அதிக சூட்டில் தயாரித்தால் அசல் சுவை மாறிவிடும்.
- அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதும்.
- கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்து பருகலாம்.
- சிறிது சர்க்கரை கலந்து ஆரம்பத்தில் பருகலாம். பின்னர் முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகவும்.
நன்றி: ஐபிசி தமிழ்நாடு