Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,052 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரெடிமேடு பிரியாணி மிக்ஸ்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:

கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ்,வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர்,மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.

பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம்,குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.

முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.

கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.

மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம்,மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.

மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்
மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம்10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.

10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்
சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பது எப்படி?

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள்,மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய்,லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.

பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு,ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.

மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்,மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும்.

சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு,சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.

நன்றி: பயனுள்ள தகவல்கள்.