Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2014
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,479 முறை படிக்கப்பட்டுள்ளது!

சில விசயங்களை தெரிந்து கொள்வோம்!

  • இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.
  • வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.
  • வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.
  • உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.
  • வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
  • கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.
  • கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை’ என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.
  • ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.
  • நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.
  • கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.
  • கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்
  • முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.
  • ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
  • ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.
  • உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.
  • வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.
  • வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?… அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !

நன்றி: அறிந்ததும் ! அறியாததும் !