Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,018 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹுஸைன் முபாரக் ஒபாமா!

வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!

கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,718 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிஞனின் பேனா

அறிஞனின் பேனா

”போர்க்களத்தில் வாள்முனையில் சிந்தப்படும் ரத்தத்துளிகளை விட ஒரு அறிஞனின் பேனாவின் மைத்துளி வலிமை மிக்கது!” – என்றார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இந்த வலிமையை இம்மண்ணின் விடுதலைக்காகப் பயன்படுத்திய அறிஞர் ஒருவர் உண்டு.

1912 – இல் உருது மொழியில் வெளிவரத் தொடங்கிய அல்- ஹிலால் பத்திரிகை மிக வேகமாக சுதந்திரம் பற்றிய பொதுஜன அபிப்பிராத்தை உருவாக்கியது. அது புதிதாக உபதேசித்த சக்தி வாய்ந்த தேசியம்இமக்களைப் பெரிதும் கவர்ந்தது. பாமர மக்களிடையே புரட்சிகரமான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,029 முறை படிக்கப்பட்டுள்ளது!

குரோதம்

இன்று அன்று ஊரில் பங்களா ஊரைச்சுற்றி நிலபுலங்கள்! டவுனில் கமிஷன்மண்டி டஜன்டஜனாய் வாகனங்கள்! பேங்கு லாக்கரில் பேல்பேலாய் நகைநட்டு! அந்தக் காலத்தில் அரசாண்ட மன்னருக்கு ஒப்பான சொத்துக்கள் ‘ஓடையடி சுலைமானுக்கு! அந்தச் செல்வந்தரின் அழகான பங்களா சோகத்தில் மூழ்கி சோர்ந்து கிடந்தது! மகன் மஹ்மூது மலைத்துபோய் நின்றான்! மக்கள்; பேரன்கள் மாடிவீட்டு உறவினர்கள் மண்டிக் கிடந்தார்கள்! மவுனமாய் அழுதார்கள்! எல்லா டாக்டர்களும் ‘இறைவன் விட்ட வழியென்று’ இங்கிதமாய்ச் சொல்லி இங்கனுப்பி விட்டார்கள்! ‘நேர எதிர்பார்ப்பில்’ நேரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,930 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20

ஆறாம் நம்பர்: தஃவத் தப்லீக்.

தஃவத் தப்லீக் என்பது உயர்தரமான அமல். இது நபிமார்கள் செய்துவந்த வேலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றில் எவ்வித கூட்டலோ குறைத்தலோ மாற்றமோ இன்றி மக்களை அதன்பக்கம் அழைத்தார்கள். அதன் பிரகாரமே இறுதி நபியான எங்கள் முஹம்மது (ஸல்) அவர்களும் இஸ்லாமியப் பணி செய்து விட்டு மரணிக்கும் போது தனது உம்மத்தான எம்மிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்கள். இது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,790 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது

…மலாயில் நான் ஜப்பானியரிடம் கதியற்ற கைதியாக இருப்பதை விட இந்தியரின் உயிர், சொத்து, மானம் ஆகியவற்றைக்காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் இருந்தால் என் நாட்டுக்கு மிக உபயோகமாக இருப்பேன் என்பதால் இந்திய தேசிய ராணுவத்தில இணைந்தேன். டெல்லி, செங்கோட்டை வழக்கு விசாரணையில் INA கேப்டன் ஷாநவாஸ்கான்.

என் பெயர் விடுதலை ! தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 – இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,873 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..

1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.

சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,816 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதையெல்லாம் விக்யாதுங்க தம்பி..

எண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது!

ஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,851 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமண அறிவிப்பு 12-06-2009 K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் – A. நிஃமத் நிஷா

நாள்: 12-06-2009 மணமகன்: K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் மணமகள்: A. நிஃமத் நிஷா இடம்: ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் ஜும்ஆ பள்ளி, சித்தார்கோட்டை

ஜனாப் கிஸார் முகம்மது அவர்களின் புதல்வன் தீன்குலச்செல்வன் K. செய்யது அப்துல் காதர் ரியாஸ்

ஜனாப் அப்துல் காதர் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி A. நிஃமத் நிஷா

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,608 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….

மேலே சுட்டெரிக்கும் வெய்யில்! ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,327 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்

பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,P.426.)

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,414 முறை படிக்கப்பட்டுள்ளது!

சகோதர பாசம்

இன்று அன்று சக்தி உள்ளவரை சளைக்காமல் உழைத்ததனால் சத்தார் ராவுத்தருக்கு சொத்துக்கள் ஏராளம்! இரண்டே பிள்ளைகள் இருவருமே ஆண்மக்கள்! இருவருக்கு மிடையில் ஈராறு வருடங்கள்! பெரியவன் அமீர் பின்னவன் அன்வர் அலி! மனைவி மரியம் மௌத்தாகி விட்டதனால் அமீரின் அரவணைப்பில் அன்வரை விட்டுவிட்டு அத்தா சத்தாரும் அல்லாஹ்வின் அழைப்பேற்றார்! அண்ணன் அமீரும் அவன்மனைவி ஆஷிக்காவும் சின்னவன் அன்வரை சித்திரவதை செய்தார்கள்! பள்ளிக்குச் சென்றுவந்த பாலகனாம் அவனின் படிப்பை நிறுத்தி பலவேலையும் கொடுத்து அடித்துக் கண்டித்து அன்றாடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,035 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெல்டன் மை பாய்!

1965 – ஆம் வருடம். சென்னை லொயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு தாவரவியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. அலுவலகப் பியூன் என் வகுப்பறைக்கு வந்து என் பெயரைச் சொல்லி பிரின்ஸிபால் அழைப்பதாகப் பேராசிரியர் அவர்களிடம் சொன்னார். லொயோலா மிகவும் கண்டிப்பான கல்லூரி. கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாடுகள்! லொயோலா மாணவர்களை “லொயோலோவின் அடிமைகள்” (ஸ்லேவ்ஸ் ஆஃப் லொயோலா) என்று பிற கல்லூரி மாணவர்கள் கேலி பேசுவதுண்டு. பிரின்ஸிபால் அறைக்கு அழைப்பு என்பது . . . → தொடர்ந்து படிக்க..