Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

வரலாற்றுச் சாதனை!

தமிழ்முஸ்லிம்கள் சம்பாத்தியத்துக்காக புலம்பெயர்ந்து மலேயா-சிங்கப்பூருக்கு பயணப்பட்ட அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் பிறமாவட்ட மக்களிலிருந்து வேறுபட்டு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள் தென்காசி -கடையநல்லூர் முஸ்லிம்கள்!அதன் காரணமாக இன்று மலேசியா-சிங்கப்பூர் இருநாடுகளிலும் பல தலைமுறைகளாக குடும்பத்துடன் வாழ்வோரைக் கணக்கிட்டால்,இவ்விரு ஊர்மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆற்றில் ஒரு கால் -சேற்றில் ஒரு கால் என வாழ்ந்தோரை விட இவர்கள் ஆழமாக வேர்விட்டுக் கிளைத்திருப்பதையும் காணமுடிகிறது!

இங்கேயே குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்ததால், அவர்களது தாய் மொழிக்கல்வி பற்றி அவர்களுக்கு ஏற்பட்ட கவலையின் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,065 முறை படிக்கப்பட்டுள்ளது!

தலைக்குனிவேற்படுத்தும் தலைகள்!

ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு உயிர்போன்றது. பிறர் ஒரு மனிதனின் தகுதியை அளவிடுவதில் முக்கியப்பங்கு வகிப்பதும் அதுவே! சாதாரண மனிதனுக்கே அது அவசியம் எனும்போது, தலைவர்களுக்கு அது மிக மிக முக்கியமானது அல்லவா?

எல்லா மொழிகளிலும் எல்லா அறநூல்களும் போதிக்கும் முதல் பாடம் ஒழுக்கம் சார்ந்ததுதான். எல்லா சமய நூல்களும் அதனைத்தான் முன்னிறுத்துகின்றன. நமது நாட்டின் அரசியமைப்புச் சட்டமும் ஜனாதிபதி முதல் சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒழுக்கத்தை- நாணயத்தை முன்வைக்கும் உறுதிமொழியை (சத்தியப் பிரமாணத்தை) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 40,639 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

லிபர்ஹான் கமிஷன் அறிக்கை!

லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கண்துடைப்பா? கண்திறப்பா?

டிசம்பர் 6-ம் நாள்! சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தூய்மையை- இறையாண்மையை மதிக்கத் தெரியாத மதவாதிகள் அதன் முகத்தில் அறைந்து நாட்டுக்கு மாறாத களங்கத்தை உண்டுபண்ணிய நாள்! 18 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் உண்மையைக் கண்டறிய அமைக்கப் பட்ட ‘லிபர்ஹான் கமிஷன்’ 17 வருடங்களுக்குப் பின் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து, அரசு அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அது இப்போது சூடுபறக்கும் விவாதத்தை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,237 முறை படிக்கப்பட்டுள்ளது!

நஞ்சூட்டிகள்

காத்தூண் கதவைத் தட்டினாள். கொஞ்ச நேரத்தில் கதவை லேசாகத் திறந்து யாரென்று உற்றுப் பார்த்தாள் ரக்கீபா! “அட, காத்தூண் மச்சியா? வா, வா! என்னடியம்மா ஆச்சரியமா இருக்கு?” என்று வரவேற்றாள் ரக்கீபா!

துப்பட்டியை கொடியில் போட்டு விட்டு, முற்ற விளிம்பில் ஆசுவாசமாக அவள் உட்கார்ந்து கொண்டது மேலும் ஆச்சரியப்படுத்தியது ரக்கீபாவை.

காத்தூண், தூரத்து உறவு. அவளது அத்தா இவளுக்கு ஒன்றுவிட்ட மாமா. நெருக்கமான தோழி என்று கூடச் சொல்ல முடியாது! எப்போதாவது ஒரு முறை உறவு முறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,695 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம் ஒரு சிறந்த மூலதனம்!

உலகத்தின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் சர்வ வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர் என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான காரணம். உலகம் இன்னொரு நாட்டின்

நாணயத்தை அல்லது ஒரு பொருளை (உதாரணம்: . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

புதிய முறைமையை நோக்கி உலகம்!

20 -ம் நூற்றாண்டு முடிந்து 21-ம் நூற்றாண்டு பிறந்தது இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது! ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது! இதோ… அடுத்த பத்தாண்டுக்குள் நுழையப் போகிறோம்!

கடந்த பத்தாண்டுகளில் உலகத்துக்கு நல்லவையும் நடந்தன; கெட்டவையும் நிகழ்ந்தன. ஆனால் … எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவின் அதிபராக இருந்த புஷ் என்ற ஒரு மனிதரின் அவசரம் -அகங்காரத்தால் நிகழ்ந்த ‘அப்பாவி மரணங்கள்’தான் நம்மை இன்னும் கூட நம்மை எந்த முன்னேற்றத்தையும் ரசிக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,939 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை!

லேமேன் பிரதர்ஸ் போன்ற உலகப் பெரும் வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியில் உலகம் துவண்டு போய்க் கிடக்கிறது. உலகுக்குப் பொருளாதார முறைமைகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களாகத் திகழ்ந்த அமெரிக்க – ஐரோப்பிய நிபுணர்கள் செய்வதறியாது கைபிசைந்து கொண்டு நின்ற வேளையில், இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான வங்கித் துறையும், அதனை தங்களது வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளுடன், இஸ்லாமிய வங்கி ஜன்னல்களையும் திறந்திருந்த சில பெரிய வங்கிகளின் அந்தக் குறிப்பிட்ட இஸ்லாமிய வங்கிக் கிளைகளும் எந்த பாதிப்பும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,781 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறக்கமுடியுமா உங்களை, மாலிக்?

ராஜகிரி தந்த நன்முத்து – ‘ஜமால்’ மெருகேற்றிச் செதுக்கிய மாண்பாளர், சமுதாய நற்பணியாளர் அப்துல் மாலிக் அவர்கள் நமையெல்லாம் விட்டுப் பிரிந்து, படைத்தவனின் அழைப்பில் பறந்துவிட்டார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த வரிகளைப் பதிவு செய்கிறோம்.

மாலிக் ஓர் அற்புதமான மனிதர் -விலைமதிக்க முடியாத மாணிக்கம் என்பதை அவருடன் பழகியவர்கள்-பயன்பெற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல -உடல்களின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்துகொண்டே சுவாசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழியே இல்லை!

அவரது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,732 முறை படிக்கப்பட்டுள்ளது!

குஜராத்தில் பயங்கரவாதம்!

இந்தியாவின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த மனிதர் நரேந்திர மோடி தான் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்த மறுநிமிடம் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் ஓட்டை விழுந்தது. தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் “உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே” என்று ஒருவர் மீது ஒருவர் ஏசிக்கொள்ளும் அசிங்கம் அரங்கேறி வருகிறது.

தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த உயர்மட்டக் குழு மோடியின் கோரமுகத்தையும், குட்டி மோடியாகிவிடக் கொக்கரித்த வருணையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,422 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 2

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4

யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.

அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,035 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி

இறுதி வார்த்தைகள்…

1920 – இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி – க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :

காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!

என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.

1930 – இல் லண்டனில் . . . → தொடர்ந்து படிக்க..