தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2025
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,363 முறை படிக்கப்பட்டுள்ளது!

பச்சை பிசாசு

நம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு! அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.

தென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 22,371 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் தீர்க்கும் பூண்டு!

பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,949 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இஸ்லாம் – 4

பழங்குடியினர் ஆன சமண புத்த மதத்தவர்கள்

வியாபார நோக்குடன் இங்கு அராபியர் வந்தனரே தவிர மதம் பரப்பும் நோக்கத்தோடு வரவில்லை என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மந்தமான வளர்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது.

சமண புத்த மதத்தை சார்ந்த பாணர், வேடர், குறவர் போன்ற மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரியர்களுடைய கொடுமை தாங்க முடியாமல் உயிருக்காக காடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுடைய பின் தலைமுறையினரே இன்று காடுகளில் வாழ்ந்து வரும் மழைவாழ் பழங்குடியினர். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,893 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

எல்லோரும் தம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லையே. ஒரு சிலர் தான் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள். சாதனையாளர்களாகிறார்கள். வாழ்வில் பெயரும், புகழும் பெறுகிறார்கள்.

பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியில் துவண்டு போகிறார்கள். நொந்து நூலாகி விரக்தியின் காரணமாகத் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை. கருணையுடைய கடவுள் ஒருசிலருக்கு மட்டும் வெற்றியைத் தந்துவிட்டு, மற்றவர்களிடம் ஓர வஞ்சனையுடன் நடந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,285 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொணதொணக்கும் மனைவிமார்கள்

இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள். இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,030 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை

[ நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா என்பதைப் பற்றியெல்லாம் நமக்கு அக்கரையில்லை. ஆனால், நம்மை ஹாஜி என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறோம். இது சரியா? முறைதானா? ]

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:

‘எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,234 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாதனை மாணவி விசாலினி

வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 39,949 முறை படிக்கப்பட்டுள்ளது!

எப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே…

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,595 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இஸ்லாம் 3

இருமதங்களின் அழிவு…!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.

கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,953 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல!

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அரசு பற்றியோ காங்கிரஸ் பற்றியோ வந்திருக்கும் கருத்துக் கணிப்புகள் அத்தனை சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில் இது வெற்றிக்கோ தோல்விக்கோ இட்டுச் செல்லும் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

மக்களவைக்கான பொதுத் தேர்தல் முன்னதாகவே வரக்கூடும். கூட்டணி பற்றிய ஊகங்களைக் கூறுவதற்கு இன்னமும் காலம் கனியவில்லை. மூன்றாண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு பிரதமர் அளித்த இரவு விருந்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,794 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேண்டாத பிள்ளை! – கதை

அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,973 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரம் பேசுதல்

இதுவும் ஒரு கலைதான்..

பேரம் பேசுதல்ங்கறது உண்மையிலேயே ஒரு கலை. சில பேர் அதுல ரொம்பவே கை தேர்ந்தவங்களா இருப்பாங்க. கடைக்காரங்க ஒரு விலை சொன்னா, டகார்ன்னு அதுல நாலுல ஒரு பங்கு விலையை, பொருளோட விலையா இவங்க சொல்லுவாங்க. தேர்தல் சமயத்துல மக்களோட இறங்கி வந்து பழகற அரசியல்வாதி மாதிரி கடைக்காரர் மெதுவா கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வருவார். நாலு ஓட்டு வெச்சிருக்கும் தெம்பிலிருக்கும் வாக்காளர் மாதிரி வாடிக்கையாளர் புடிச்ச . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்