Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,078 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,754 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுடும் உண்மை; சுடாத அன்பு! – சிறுகதை

இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,171 முறை படிக்கப்பட்டுள்ளது!

கறிவேப்பிலையின் பயன்கள்

கறிவேப்பிலை ஒதுக்காதீர் மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,070 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹஜ் வழிகாட்டி

முன்னுரை

மதிப்பிற்குரிய ஹாஜிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள்,அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,008 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்!

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,842 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடவுள் காப்பாற்றுவாரா?

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 10

ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வரலாம் என்று முன் கூட்டியே எச்சரிக்கப்பட்டு இருந்தது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி பக்கத்து நகரத்தில் தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிராம மக்கள் ஒரே ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் வெளியேறி விட்டிருந்தனர். வெளியேறாமல் இருந்தவன் கடவுளின் பக்தன். அவனுக்குக் கடவுள் மீது அபார நம்பிக்கை. ”கடவுள் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார்” என்று முழு மனதுடன் நம்பினான்.

வெள்ள நீர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,126 முறை படிக்கப்பட்டுள்ளது!

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 78,296 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை டயட் சமையல்

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.

“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,536 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை

சீர்மிகு சித்தார்கோட்டை என்ற, பெயர் பெற்ற நமது ஊரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? எத்தனயோ தலை சிறந்த பஞ்சாயத்து தலைவர்களை தந்துள்ளது இந்த சித்தார்கோட்டை. நாம் தேர்ந்தெடுத்து நிறுத்தும் வேட்பாளரை பக்கத்து கிராமத்தினர் மதித்து வாக்களித்தனர். அவர்கள் ஜாதி, மத, இன வேறுவாடு காட்டாமல் பணி செய்தனர். எப்போது நான்கு வேட்பாளர்களை நிறுத்தினோமோ அப்போதே நமது ஒற்றுமையையும் வெற்றியையும் தொலைத்தோம். வேற்றுமையை கலைந்து ஒருவருக்கு வழிவிட்டிருக்கலாம். நம் ஊரில், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,375 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,317 முறை படிக்கப்பட்டுள்ளது!

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?

மக்கள் உணர்ச்சி சமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

விடிவு காலம் – சிறுகதை

“கும்பிடுரேனுங்க எஜமான்”.

“வாப்பா குப்பா. எப்படியிருக்க?”

“ஏதோ உங்க புண்ணியத்துல புழப்பு ஓடுதுங்க” என்றான் குப்பன்.

“கலியாணங் கட்டிக்கிட்டியே. ஏதாச்சும் விசேஷம் உண்டா!” நலம் கேட்டார் எஜமான்.

“ஒரு ஆம்பிள புள்ளங்க” என்றான் வெட்கத்துடன் குப்பன்.

“குப்பா உன்ன ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?”

“ஒரு வாரமா மனிதக்கழிவு தொட்டி (செப்டிக் டாங்க்) நிரம்பி வழியது. நாற்றம் தாங்கமுடியல. அத்த சுத்தம் செஞ்சு கொடேன். என்ன வேணும். எவ்வளவு வேணும் உனக்கு” என்று கேட்டார் எஜமான்.

“இரண்டு வாழப்பழமுங்க . . . → தொடர்ந்து படிக்க..