Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,325 முறை படிக்கப்பட்டுள்ளது!

இட்லி மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்

இட்லி – 5 சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன் உப்பு -சுவைக்கு எண்ணெய் – பொரிக்க ஆரஞ்சு கலர் – 1 சிட்டிகை

செய்முறை:

 

இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும். எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,763 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-5

5.நேற்று என்பது உடைந்த பானை

சிறுவர்களே காலத்தை கண்ணாகப் போற்றுங்கள்!

எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம். அதைவிடச் சிறந்தது கண் என்பது பழமொழி. நமது உடம்பில் உள்ள உறுப்புக்களில் முதன்மையானது தலை என்றால், அந்தத் தலையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது கண்கள். கண்கள் இல்லை என்றால் இந்த உலகத்தை அதன் அழகை நாம் பார்க்க முடியுமா? உதிக்கும் சூரியனின் அழகை, பொங்கிப்பாயும் அருவியின் கும்மாளத்தை, வானத்தில் பறந்து திரியும் வண்ண வண்ணப்பறவைகளை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,018 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆசிரியைத் தாய்

இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.

குழந்தைகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,925 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-4

4. காலவிரயம் கூடாது

அடர்த்தியான மரங்கள், ஆனந்தமாகப் பாடும் பறவைகள். நறுமணம் கமழும் பல வண்ண மலர்கள், நடுவே ஒரு பளிங்குப்பாறை. அதன் மீது ஒரு சிலை. அது என்ன சிலை? சற்று வித்தியாசமான சிலைதான். மனிதச் சிலை. ஆனால் அதற்கு இரண்டு இறக்கைகள் காணப்படுகின்றன. கால்கட்டை விரல் மட்டும் நிலத்தில் ஊன்றிய அந்த மனிதன் வானத்தில் சிறகடித்துப் பறக்க தயார் நிலையில் இருப்பதைப் போல தோன்றுகிறது. கண் இமைக்கும் நேரம் ஏமாந்தால் போதும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,306 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மா வந்தாள் – சிறுகதை

வர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.

நரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,087 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாதனை மாணவி விசாலினி

வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,392 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று பதிலும் வரும்!!நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,493 முறை படிக்கப்பட்டுள்ளது!

முத்து (பற்கள்) நம் சொத்து!

சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.

தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,525 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்!

பொதுவாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ‘மாணவன்… ஆசிரியரை, சக மாணவர்களை துப்பாகியால் சுட்டு கொன்றான்’ என்று கேள்விபடுவோம். ஆனால் இன்று நமது மாநிலத்தில் ‘9ம் வகுப்பு மாணவன் ஆசிரியை கொலை செய்த பயங்கர சம்பவம்’ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் ‘மேற்கத்திய’ மயமாகி வரும் நமது நாட்டில் ‘தனிநபரை’ முன்னிறுத்தும் அவர்களது வாழ்க்கை முறை மட்டும் விதிவிலக்கா என்று நினைக்க தோணுகிறது.

சில ஊடகங்கள் அம்மாணவனின் பெயரை வெளியிட்ட போது நமக்கு இன்னும் பேரதிர்ச்சி. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,030 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரத்த சோகை என்றால் என்ன ?

ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும்.

இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இன்று இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர்.

இதனால் அவர்களின் உடல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,686 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்? உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா? அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. “இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,875 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மா,அப்பா,டீச்சர்.. குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு… உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்… இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்… குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால்…

‘அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி… என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன? அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்?

ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?

. . . → தொடர்ந்து படிக்க..