Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,880 முறை படிக்கப்பட்டுள்ளது!

தெரிந்து கொள்வோம் வாங்க!

நம் உடலைப் பற்றிய உண்மைகள்

  • குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
  • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
  • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
  • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
  • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
  • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
  • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
  • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
  • நமது மூளை 80% நீரால் ஆனது.
  • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
  • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.
  • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
  • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
  • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
  • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்

By: Engr.Sulthan