Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,655 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.

அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,032 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீன்கள் ஜாக்கிரதை!

[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]

சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.

திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,173 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

 

“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,888 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!

தோசை 10… மதிய உணவு 15… மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,354 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளின் வெட்கம்!

வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.

சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,988 முறை படிக்கப்பட்டுள்ளது!

சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்!

‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

பசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,664 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,383 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர் : கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர் (Graduate to a Great Career)

ஆசிரியர் : கேத்ரின் கபூடா (Catherine Kaputa) – பதிப்பாளர் : Nicholas Brealey

கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நல்ல புரஃபஷனல்களாக மாறும் வித்தை தெரியாமல் இருக்கிறார்கள். அது மாதிரியானவர்களுக்கு கேத்ரின் கபூடா என்னும் பெண்மணி எழுதிய ‘கிராஜுவேட் டு எ கிரேட் கேரியர்’ புத்தகம் நல்ல வழிகாட்டி.

புத்தகத்தின் நோக்கம்!

நீங்கள் தற்போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,530 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்?

ஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர். சேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,510 முறை படிக்கப்பட்டுள்ளது!

கறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி… இப்படி!

‘கறுப்புப் பணம்… கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் பொதுமக்களின் கூட்டம் இன்னமும் அலைமோதுகிறது. தினக்கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர், ஒழுங்காக வரி செலுத்தும் வியாபாரிகள் ஆகியோர்தான் வங்கிகளிலும் ஏ.டி.எம் வாசல்களிலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,248 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்!

மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.

சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

“பொதுவாக இவர்களின் மனநிலை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,223 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீண்டும் உயிர்த்தெழும் தனுஷ்கோடி!

ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.

1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..